Home
News

நவ.14-ல் அறிமுகமாகும் Jio Star ஓடிடி தளம்.. Netflix, Prime Video-வை அலறவிடும் விலை.. இறங்கி அடிச்ச அம்பானி!

இந்திய ஓடிடி சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆகிய இரண்டு தளங்களின் ஒருங்கிணைப்பு எப்போது நடக்கும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் வயாகாம் நிறுவனத்துடன் டிஸ்னி ஸ்டார் இந்தியா இணைகிறது என்பது உங்களில் பலருக்கும் ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்.

நினைவூட்டும் வண்ணம், இவ்விரு நிறுவனங்களின் "இணைப்பு செயல்முறை" (Merger process) ஆனது இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே தொடங்கி இருந்தாலும், மிகவும் சமீபத்தில் தான் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) மற்றும் ஜியோ சினிமா (Jio Cinema) ஆகிய இரண்டு இயங்குதளங்களும் ஒன்றிணைகிறது என்று அறிவிக்கப்பட்டது.

நவ.14 அறிமுகமாகும் Jio Star.. இறங்கி அடிச்ச அம்பானி!

இந்த தகவல் வெளியானதும் சிறந்த யூஸர் இன்டர்பேஸ் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை கொண்டிருப்பதால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆனது ஜியோ சினிமா ஆப்பையும், ஜியோவின் பிராண்டிங்கையும் காணாமலடித்து விடும் என்று கூறப்பட்டது. ஆனால் சமீபத்திய அறிக்கைகளின்படி, ஒன்றாக இணைக்கப்பட்ட இவ்விரு தளங்களும் ஜியோ ஸ்டார் (Jio Star) என்கிற புதிய தளமாக அறிமுகமாகும்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமாவின் இணைப்பு செயல்முறை புதன்கிழமைக்குள் (நவம்பர் 13 ஆம் தேதிக்குள்) செய்யப்படும் என்றும், புதிய தளம் வியாழக்கிழமை (நவம்பர் 14 ஆம் தேதி முதல்) நேரலைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இணையதளம் நேரலைக்கு வந்ததும், ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ சினிமாவின் ஆகிய இரண்டு ஓடிடி தளங்களின் கன்டென்ட்களும் ஜியோ ஸ்டார் என்கிற ஒரே தளத்தின் கீழ் அணுக கிடைக்கும்.

ஜியோ ஸ்டார் தளத்தின் அறிமுகமானது ஓடிடி தொழில்துறையை "ஒரு உலுக்கு உலுக்கும்" என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவுடன் கடும் போட்டியை உண்டாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வரையிலாக, பெரிய பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படங்களின் ஓடிடி உரிமைகளை ஒன்று - நெட்பிளிக்ஸ் வாங்குகிறது அல்லது அமேசான் ப்ரைம் வீடியோ வாங்குகிறது. இவ்விரு தளங்களும் மாற்றி மாற்றி அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஆனால் இனி வரும் காலங்களில், ரிலையன்ஸின் வலுவான நிதி ஆதரவுடன், ஜியோ ஸ்டார் பிரத்தியேக ஸ்ட்ரீமிங் உரிமைகளுக்காக ஆக்ரோஷமாக போட்டியிடும் என்பதில் சந்தேகமே வேண்டாம். ஜியோ ஸ்டாரின் அறிமுகத்தை விளம்பரப்படுத்துவதற்காகவே சில முக்கிய திரைப்படங்களை இது கைவசப்படுத்தும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். ஒட்டுமொத்தமாக இது ரிஜினல் கன்டென்ட் கையகப்படுத்துதலின் இயக்கவியலில் பெரிய மாற்றத்தை கொண்டுவரும்.

டிஸ்னியின் பரந்த அளவிலான லைப்ரரி மற்றும் ஜியோ சினிமாவின் பல்வேறு வகையான கன்டென்களுடன், ஜியோ ஸ்டார் ஆனது முன்னேப்பதும் இல்லாத அளவில் பரந்த எண்ணிக்கையிலான பார்வையாளர்களை ஈர்க்கும்மர்டும் அவரக்ளின் தேவைகளை பூர்த்தி செய்யும் என்று நம்பப்படுகிறது. நிச்சயமாக இது மேம்பட்ட ஸ்ட்ரீமிங் அனுபவங்களை வழங்கும்.

ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் இந்த இணைப்பு வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொழுதுபோக்கு சந்தையில் ரிலையன்ஸின் தடத்தை விரிவுபடுத்துவதற்கான ஒரு மூலோபாய நகர்வை குறிக்கிறது, இதன் மூலம் ஓடிடி சந்தையில் முகேஷ் அம்மணிகி ஒரு வலிமையான இடம் கிடைக்கும்!

ஜியோ ஸ்டார் ஓடிடி தளத்தின் சந்தா திட்டங்களின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? ஜியோ ஸ்டார் சந்தா திட்டங்களின் விலைகள் குறித்து அதிகாரப்பூரவமான தகவல்கள் இல்லை. ஆனால் இது மாதம் தோறும் ரூ.199 க்கு கிடைக்கும் நெட்பிளிக்ஸ், ரூ.299 க்கு கிடைக்கும் ப்ரைம் வீடியோவை விட மலிவான விலைக்கு (குறைந்து சில மாதங்களுக்காவது) கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஜியோ ஸ்டார் சாந்தாவின் பேஸிக் 1 மாத திட்டம் ரூ.200 க்குள் என்கிற விலைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது.

Best Mobiles in India

English summary
Jio Star New Merged OTT Platform of New Jio Cinema Disney Plus Hotstar To Go Live on November 14
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X