Home
News

1 மாசம் FREE.. கூடவே 3.3TB டேட்டா.. 14 OTT.. Jio-வின் லைஃப்டைம் செட்டில்மென்ட் பிளான்.. என்ன விலை?

ஒரே ஒரு ரீசார்ஜ்ஜில்.. 365 நாட்களுக்கும் "ஆஹா ஓஹோன்னு" சொல்லும் அளவிற்கு நன்மைகளை வாரி வழங்கும் ஒரு ஜியோ திட்டத்தை லைஃப்டைம் செட்டில்மென்ட் என்று கூறாமல் வேறு எப்படி கூறுவது? அதென்ன திட்டம்? அது என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதோ விவரங்கள்:

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் ஆப்ரேட்டர் மட்டுமல்ல, நாட்டின் மிகப்பெரிய இன்டர்நட் சர்வீஸ் ப்ரொவைடரும் (Internet Service Provider - ISP) ஆகும். இதற்கு ஜியோவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் 150எம்பிபிஎஸ் திட்டம் ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம்.

Jio-வின் ரூ.11,988 ரீசார்ஜ்.. லைஃப் டைம் செட்டில்மென்ட் பிளான்!

ஏனென்றால் ரிலையன்ஸ் ஜியோவின் 150எம்பிபிஎஸ் திட்டமானது (150Mbps Plan) ஒரு வருடம் முழுவதும் (அதாவது 365 நாட்களுக்கும்) வெறும் ரூ.11,988 என்கிற செலவில் அணுக கிடைக்கிறது. நாம் இங்கே பேசுவது ஜியோஃபைபர் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டடத்தை (JioFiber Rs.999 {Postpaid Plan) பற்றித்தான்.

இதை நீங்கள் ஒரு வருட கால திட்டமாக (ரூ.999 x 12 மாதங்கள் = 11,988 + ஜிஎஸ்டி) ரீசார்ஜ் செய்தால், உங்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும். இந்த திட்டம் வெவ்வேறு வேலிடிட்டிகளின் கீழ் கிடைக்கிறது. பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இதை மாதந்தோறும் ரீசார்ஜ் செய்யும் வழக்கத்தை / பழக்கத்தை கொண்டுள்ளனர்.

Jio-வின் ரூ.11,988 ரீசார்ஜ்.. லைஃப் டைம் செட்டில்மென்ட் பிளான்!

அவர்களுக்கெல்லாம் கிடைக்காத சிறப்பு சலுகை வருடாந்திர அடிப்படையில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு கிடைக்கும். ரூ.999 திட்டடத்தை ஒரு வருட திட்டமாக தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணமின்றி 1 மாத சேவையை முற்றுலும் இலவசமாக கிடைக்கும். அதாவது ரூ.11,988 க்கு மொத்தம் 13 மாத கால வேலிடிட்டி (அதாவது 360 நாட்கள் + 30 நாட்கள் = 390 நாட்கள்) கிடைக்கும்.

நன்மைகளை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி இது 150 எம்பிபிஎஸ் இன்டர்நெட் ஸ்பீடை வழங்கும். இது ஒரே மாதிரியான பதிவேற்ற வேகம் (Upload Speed) மற்றும் பதிவிறக்க வேகத்தை (Download speed) வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் இது 3.3டிபி டேட்டா (அதாவது 3300ஜிபி டேட்டா) கிடைக்கும்.

Jio-வின் ரூ.11,988 ரீசார்ஜ்.. லைஃப் டைம் செட்டில்மென்ட் பிளான்!

டேட்டா நன்மையை தவிர்த்து, ஜியோஃபைபர் ரூ.999 போஸ்ட்பெயிட் திட்டத்துடன் இலவச பிக்ஸடு-லைன் வாய்ஸ் காலிங் கனெக்ஷனும் (Free fixed-Line Voice Calling Connection) உள்ளது. இதற்கான லேண்ட்லைன் டூல்களை (Landline instrument) வாடிக்கையாளர் தாங்களே வாங்க வேண்டும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஓடிடி நன்மைகளை பொறுத்தவரை ரூ.999-ன் கீழ் அமேசான் ப்ரைம் (Amazon Prime), டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), ஜியோ சினிமா (Jio Cinema), சன் நெக்ஸ்ட் (SunNXT), ஹோய்சொய் (Hoichoi), டிஸ்கவரி பிளஸ் (Discovery Plus) போன்ற தளங்களுக்கான இலவச அணுகல்களை வழங்குகிறது.

மேலும் ஆல்ட் பாலாஜி (ALTBalaji), ஈரோஸ் நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), ஷீமாரோமீ (ShemarooMe), டாக்குபே (DocuBay) மற்றும் எபிக்ஆன் (EPICON) போன்ற ஓடிடி தளங்களுக்கான இலவச அணுகல்களையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் அமேசான் பிரைம் வீடியோவானது ஒரு வருட சந்தாவாக கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கடைசியாக ரூ.999-ன் கீழ் ஜியோஃபைபர் வாடிக்கையாளர்களுக்கு இலவச செட்-டாப் பாக்ஸும் (Free Set-Top Box - STB) கிடைக்கும். இதை மைஜியோ ஆப் (MyJio App) வழியாக உரிமை கோரலாம். மேற்கண்ட ஓடிடி நன்மைகள் அனைத்தையும் ரிலையன்ஸ் ஜியோ வழங்கிய செட்-டாப் பாக்ஸை பயன்படுத்தி, டிவி வழியாக நேரடியாக பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Special Offer on Rs 999 Choose This 150 Mbps Plan For 1 Year and Get 30 Days Free Extra Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X