அம்பானியின் ஸ்பெஷல் ஆஃபர்.. 5GB, 10GB இல்ல.. Jio அறிவித்துள்ள 78GB இலவச டேட்டா.. யாருக்கு எல்லாம் கிடைக்கும்?
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோவின் கீழ் ரீசார்ஜ் செய்ய கிடைக்குமொரு ப்ரீபெய்ட் திட்டத்தின் மீது 78ஜிபி இலவச டேட்டா அறிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன திட்டம்? அந்த திட்டத்தின் "வழக்கமான" நன்மைகள் என்ன? ஸ்பெஷல் ஆபரின் கீழ் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்ன? இதோ விவரங்கள்:
அதென்ன திட்டம்? ரிலையன்ஸ் ஜியோவின் (Relaince Jio) விலை உயர்ந்த திட்டங்களில் ஒன்றான ரூ.4489 ரீசார்ஜ் மீது தான் 78ஜிபி இலவச டேட்டா ஆபர் (78GB Extra Data Offer) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் எல்லா பயனர்களுக்குமே.. இந்த திட்டத்தின் கீழ் கிடைக்கும் டெய்லி டேட்டா நன்மையை சேர்க்காமல்.. கூடுதலாக 78ஜிபி டேட்டா முற்றிலும் இலவசமாக கிடைக்கும்.

ஜியோவின் கூற்றுப்படி, ரூ.4489 திட்டத்தின் கீழ் கிடைக்கும் 78ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவானது, மைஜியோ ஆப் (MyJio App) வழியாக மொத்தம் பதிமூன்று 6ஜிபி டேட்டா வவுச்சர்களாக (13 x 6GB Data Vouchers) கிடைக்கும். இந்த திட்டத்தின் "வழக்கமான" டேட்டா நன்மையை பொறுத்தவரை, தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்கும். வேலிடிட்டியை பொறுத்தவரை, இதுவொரு 1 ஆண்டு திட்டமாகும்; அதாவது இது 365 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
டேட்டா நன்மையை தவிர்த்து ஜியோவின் ரூ.4489 திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் (100 Free SMS / daily) நன்மைகளும் கிடைக்கும். இதுதவிர்த்து இந்த திட்டத்தின் கீழ்.. அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, சோனி லைவ் உட்பட மொத்தம் 14 ஓடிடி தளங்களுக்கான சந்தாக்களும் கிடைக்கும்.

அமேசான் ப்ரைம் வீடியோ (Amazon Prime Video) சந்தாவை பொறுத்தவரை, 1 வருட மொபைல் எடிஷனுக்கான சந்தா கிடைக்கும். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) சந்தாவை பொறுத்தவரை "இதுவும்" 1 வருட மொபைல் எடிஷனுக்கான இலவச சந்தாவுடன் வரும். இதுதவிர்த்து ஜியோசினிமா பிரீமியத்திற்கான 1 வருட சந்தாவும் கிடைக்கும்.
மேலும் ஜியோடிவி ஆப்ஸ் வழியாக சோனி லைவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery Plus), சன் நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளானட் மராத்தி (Planet Marathi), சௌபால் (Chaupal), டாக்குபே (Docubay), எபிக் ஆன் (EPIC ON) மற்றும் ஹோய்சோய் (Hoichoi) ஆகியவற்றுக்கான சந்தாக்களும் கிடைக்கும்.

மேலும் தகுதியான ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்ட் 5ஜி டேட்டா சலுகையும் (Unlimited 5G Data Offer) கிடைக்கும். இதை பெற உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருக்க வேண்டும்; அதுமட்டுமின்றி நீங்கள் இருக்கும் பகுதியில் ஜியோவின் 5ஜி சேவைகள் (5G Service) அறிமுகமாகி இருக்க வேண்டும்.
ஒருவேளை உங்கள் பகுதியில் 5ஜி அறிமுகமாகி விட்டது. ஆனால் இன்னமும் உங்களுக்கு 4ஜி நெட்வொர்க் தான் கிடைக்கிறதா? கவலையை விடுங்கள் இந்த விஷயத்தில் டிராய் (TRAI), அதாவது இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது (Telecom Regulatory Authority of India) ஒரு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவும், பார்தி ஏர்டெல்லும் நாடு முழுவதும் 5ஜி சேவைககளை அறிமுகம் செய்துவிட்டன என்று கூறினாலும் கூட, இந்தியாவில் உள்ள பல மொபைல் பயனர்கள், முக்கிய நகரங்களில் இருந்தும் கூட 4ஜி நெட்வொர்க்கையே அனுபவிக்கின்றனர். இந்த சிக்கலை சரிசெய்ய ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனங்களுக்கான புதிய 4ஜி மற்றும் 5ஜி வழிகாட்டுதல்களை (New 4G and 5G guidelines) வழங்க, டிராய் திட்டமிட்டுள்ளது.
இதன்கீழ் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டும் தத்தம் இணையதளங்களில் நெட்வொர்க் கவரேஜ் மேப்களை (Network coverage maps) காண்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனொரு பகுதியாக தற்போதுள்ள குவாலிட்டி ஆப் சர்வீஸ் வரையறைகளில் ( (Quality of Service benchmarks) திருத்தம் ஏற்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








