Home
News

உங்கப்பன் டா நான்! அம்பானியின் ISRO லெவல் திட்டம்.. சாட்டிலைட் வழியாக Jio Space Fiber சேவை; Airtel கதை க்ளோஸ்!

நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா என்று கூறும்படியாக முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் "இஸ்ரோ லெவல்" திட்டம் ஒன்றை தீட்டி உள்ளது. அது ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் (Jio Space Fiber) சேவை ஆகும்!

ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் என்பது செயற்கைக்கோள் அடிப்படையிலான ஜிகாபிட் ஃபைபர் (Satellite based Gigabit Fibre) சேவையாகும். இதற்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையத்திற்கு (IN-SPAce) அனைத்து வகையான கட்டாய சமர்ப்பிப்புகளையும் செய்துள்ளதாகவும், கட்டுப்பாட்டாளரின் ஒப்புதல் கிடைத்த பின்னர் இந்த சேவை தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது.

சாட்டிலைட் வழியாக Jio Space Fiber சேவை!

நினைவூட்டும் வண்ணம், கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த இந்தியா மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் சாட்காம் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்தியது. இதுதான் கூடிய விரைவில் இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் அடிப்படையிலான ஜிகா ஃபைபர் இணைய சேவையாக மாற உள்ளது.

ஜியோ நிறுவனமானது சாட்காம் சேவைகளை தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஒப்புதல்கள் மற்றும் அங்கீகாரங்களையும் இன்-ஸ்பேஸில் இருந்து விரைவில் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தபுதிய சேவையின் ஒருபகுதியாக ஜியோ நிறுவனமானது பாதுகாப்பு அனுமதிகள் மற்றும் பல அமைச்சகங்களின் ஒப்புதலையும் பெற வேண்டியிருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

சாட்டிலைட் வழியாக Jio Space Fiber சேவை!

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த சாட்காம் சேவைகள், எலான் மஸ்க் ( Elon Musk) தலைமையிலான ஸ்டார்லிங்க் (Starlink), யூடெல்சாட் குழுமத்தின் ஒன்வெப் (Eutelsat Group's OneWeb) மற்றும் அமேசானின் ப்ராஜெக்ட் கைபர் (Amazon's Project Kuiper) ஆகியவற்றுடன் நேரடியாக போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இண்டர்நெட் அணுகலை வழங்குவதற்காக, லக்சம்பேர்க்கை தளமாக கொண்ட செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு நெட்வொர்க் வழங்குநரான சொஸைட்டி யூரோப்பினி டெஸ் சாட்டிலைட்ஸ் (Société Européenne des Satellites - SES) உடன் ஜியோ நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது.

சாட்டிலைட் வழியாக Jio Space Fiber சேவை!

2023 இந்தியா மொபைல் காங்கிரஸில் ஜியோ நிறுவனம் அதன் ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் தொழில்நுட்பத்துடன் தனது ஜியோ ஸ்பேஸ் ஃபைபர் செயற்கைக்கோள் அடிப்படையிலான ஜிகா ஃபைபர் இணைய சேவையின்கீழ் குஜராத்தில் உள்ள கிர், சத்தீஸ்கரில் உள்ள கோர்பா, ஒடிசாவின் நப்ராங்பூர் மற்றும் அசாமில் ஓஎன்ஜிசி-ஜோர்ஹாட் ஆகிய நான்கு தொலைதூர இடங்களை இணைத்துள்ளதையும் வெளிப்படுத்தி இருந்தது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Space Fiber New Satellite Based Gigabit Fiber Service Launch in India Soon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X