Home
News

கூகுள் பே, பேடிஎம் கதை முடிந்தது.. ஜியோபே-க்கு மாறப்போகுது இந்தியா.. முகேஷ் அம்பானியின் Jio Soundbox சர்வீஸ்!

கூகுள் பே, போன்பே போன்ற ஆப்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டிருக்கும் நேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முகேஷ் அம்பானி, ஜியோ சவுண்ட்பாக்ஸ் (Jio Soundbox) மூலம் ஜியோபே (JioPay) சேவையை இந்தியாவில் பரவலாக்க திட்டமிட்டுள்ளார்.

இந்தியாவில் யுபிஐ பேமெண்ட் சேவைகளின் (UPI Payments Services) அபரீத வளர்ச்சியை கண்கூடாக பார்த்து வருகிறோம். பெட்டிக்கடைகள் முதல் சூப்பர் மார்கெட்டுகள் வரையில், யுபிஐ பேமெண்ட் சேவைகள் வந்துவிட்டன. ஆனால், இந்த சேவைகளை வழங்குவதில் மூன்று தனியார் நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

JioPay-க்கு மாறப்போகுது இந்தியா.. முகேஷ் அம்பானியின் JioSoundbox சேவை!

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) போன்ற நிறுவனங்களின் ஆப்களையே மட்டுமே கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், அந்த நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகளையும், விதிகளையும் மத்திய அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில், பேடிஎம் நிறுவனத்தின் மீதான கட்டுப்பாடுகள் அதன் பேடிஎம் பேங்க் சேவைகளையே முடக்கின.

இதனால், பேடிஎம் சவுண்ட்பாக்ஸ் (Paytm Soundbox), கியூஆர் கோட் (QR Code) சேவைகள் தொடர்ந்து கிடைக்குமா? என்ற குழப்பத்தில் அதன் யூசர்கள் இருக்கின்றனர். இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்ட ரிலையன்ஸ் நிறுவனம், ஒட்டுமொத்த யுபிஐ யூசர்களையும் தன்பக்கம் சாய்க்கும் வேலையை செய்துள்ளது.

பேடிஎம் சவுண்ட்பாக்ஸ் போலவே, ஜியோ சவுண்ட்பாக்ஸ் சேவையை களமிறக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த சேவையை ஜியோ பே ஆப் (JioPay App) மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த ஜியோ சவுண்ட்பாக்ஸ் டிவைஸ்களின் (Jio Soundbox Devices) சோதனை ஓட்டம் விறுவிறுப்பாக நடந்து வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

JioPay-க்கு மாறப்போகுது இந்தியா.. முகேஷ் அம்பானியின் JioSoundbox சேவை!

நாடு முழுவதும் இருக்கும் சில்லறை விற்பனை கடைகளில் அதிவிரைவில் ஜியோ சவுண்ட்பாக்ஸ் சேவைகள் கிடைக்க இருப்பது தெரிகிறது. முன்னதாக, ரிலையன்ஸ் நிறுவனம் யுபிஐ பேமெண்ட் சேவைகளை வழங்குவதில் முழுவீச்சில் ஈடுபடவில்லை. ஜியோபே ஆப் சேவைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கான முயற்சியிலும் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை.

ஆனால், இப்போது ஜியோ சவுண்ட்பாக்ஸ் மூலம் ஜியோபே சேவைகளையும் மக்களிடையே பரவலாக்க திட்டமிட்டுள்ளது தெரிகிறது. இதனால், கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற முன்னணி ஆப்களின் சேவைகளுக்கு கடும் போட்டியாக ஜியோபே இருக்க அதிக வாய்ப்புள்ளது. கியூஆர் கோட் ஸ்கேனிங், ஆடியோ வெரிபிகேஷன் சேவைகளை வழங்குவதால், எளிதாக மக்ககளிடையே சென்று சேரவும் வாய்ப்புள்ளது.

இந்த ஜியோ சவுண்ட்பாக்ஸ் சேவைகள் 8 மாதங்களுக்கு முன்பே தொடங்கப்பட்டன. ஆனால், ஜெய்ப்பூர், இந்தூர் மற்றும் லக்னோ போன்ற முக்கிய நகரங்களில் இருக்கும் ரிலையன்ஸ் ரீடெயில் ஸ்டோர்களில் மட்டுமே சோதனை முயற்சியில் பயன்படுத்தப்பட்டன. இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிந்ததால், ஜியோவின் சவுண்ட்பாக்ஸ் சேவைகளை நாடு முழுவதும் கொண்டு சேர்க்கும் பணியில் ஜியோ இறங்கிவிட்டது.

JioPay-க்கு மாறப்போகுது இந்தியா.. முகேஷ் அம்பானியின் JioSoundbox சேவை!

முதலில் ரிலையன்ஸ் ரீடெயில் ஸ்டோர்களிலும், அதன் பிறகு மற்ற விற்பனையகங்களுக்கும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஜியோவின் சவுண்ட்பாக்ஸ் சேவைகளுக்கான கட்டணங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. பேடிஎம் சவுண்ட்பாக்ஸ் சேவைகளுக்கு மாதம் ரூ.125 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதேபோல போன்பேவுக்கு ரூ.40 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ஜியோ சவுண்ட்பாக்ஸ் சேவைகள் வழக்கம்போல ஆரம்பத்தில் இலவசமாக கிடைக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் 20 மில்லியனுக்கும் அதிகமான சில்லறை வணிகர்கள் சவுண்ட்பாக்ஸ் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இதில் பேடிஎம் முதல் இடத்திலும், போன்பே இரண்டாவது இடத்திலும் உள்ளது. இதில் எந்த இடத்தை ஜியோ சவுண்ட்பாக்ஸ் சேவைகள் பிடிக்கும் என்பது அடுத்த சில மாதங்களில் தெரிந்துவிடும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Soundbox Set To Compete Google Pay, Paytm, PhonePe With Jio Pay UPI Payments Services in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X