UPI சேவையில் புதிய மாற்றம்.. Google Pay, PhonePe சவுண்ட் பாக்ஸ் கதை முடிஞ்சது.. இனி JioPhone இருந்தா போதும்!
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தனது ஜியோ பாரத் போன்களில் ஒரு புரட்சிகரமான புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது நாடு முழுவதும் உள்ள 5 கோடி சிறிய அளவிலான வணிகர்களுக்கு கிடைக்கும் ஒரு இலவச வசதியாகும். ஜியோ நிறுவனம் இந்த வசதியை ஜியோ சவுண்ட் பே (Jio Sound Pay) என்று அழைக்கிறது.
பெயர் குறிப்பிடுவது போலவே, ஜியோசவுண்ட்பே (JioSoundPay) வசதியானது ஒவ்வொரு யுபிஐ (UPI) கட்டணத்திற்கும் உடனடி (Instant) மற்றும் பன்மொழி ஆடியோ உறுதிப்படுத்தல்களை (Multilingual audio confirmations) முற்றிலும் இலவசமாக வழங்கும். நினைவூட்டும் வண்ணம் தற்போதுள்ள சிறு மற்றும் குறு வணிகர்கள் ஒரு சவுண்ட் பாக்ஸிற்கு (Sound Box) மாதம் ரூ.125 செலுத்துகின்றனர்.

இப்போது, ஜியோ சவுண்ட் பே வசதி முற்றிலும் இலவசமாக வழங்கப்படுவதால், ஜியோ பாரத் போன் (JioBharat Phone) பயனர்களால் ஆண்டுக்கு ரூ.1,500 வரை சேமிக்க முடியும் என்று ஜியோ நம்புகிறது. ஜியோவின் இந்த புதிய வசதியானது யுபிஐ சேவையில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
ஜியோ சவுண்ட் பே வசதியானது இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் உள்ள சிறிய கடைகள், காய்கறி விற்பனையாளர்கள் மற்றும் சாலையோர உணவகங்களுக்கு கூட தடையற்ற மற்றும் திறமையான வணிக நடவடிக்கைகளை செயல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe) மற்றும் பேடிஎம் (Paytm) ஆகிய நிறுவனங்களின் சவுண்ட் பாக்ஸ் சேவையிலும் மாற்றங்களை கொண்டுவரும் கட்டாயத்தை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் ஒரு வருடத்திற்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோபாரத் போன் தான், உலகின் மிகவும் மலிவான 4ஜி போன் ஆகும். இது வெறும் ரூ.699 க்கு வாங்க கிடைக்கிறது. ஆக மற்ற நிறுவனங்களில் சவுண்ட் பாக்ஸ்களை ரூ.125 செலுத்தி பயன்படுத்தும் எந்தவொரு வணிகரும். ஒரு புதிய ஜியோபாரத் போனை வாங்குவதன் மூலம் 6 மாதங்களில் தாங்கள் செலவு செய்த பணத்தை சேமிக்க முடியும்.
இதுகுறித்து ஜியோவின் தலைவர் சுனில் தத் கூறுகையில், ஒவ்வொரு இந்தியருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் ஜியோ நம்பிக்கை கொண்டுள்ளது. ஜியோபாரத் போனிற்கான இலவச ஜியோ சவுண்ட் பே வசதியானது வந்தே மாதரத்தின் ஆத்மார்த்தமான பாடல்களுடன், இந்தியாவின் உணர்வை கொண்டாடுகிறோம் மற்றும் உண்மையான டிஜிட்டல் இந்தியாவை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் ஜியோ நிறுவனமானது அதன் ப்ரீபெய்ட் சேவையின் கீழ், டேட்டா நன்மை எதுவும் இல்லாமால், வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை மட்டுமே வழங்கும் 2 புதிய திட்டங்களை அறிமுகம் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. வாய்ஸ் மற்றும் மெசேஜ்களுக்கென ஸ்பெஷல் டேரிஃப் வவுச்சர்களை (Special Tariff Vouchers) அறிமுகப்படுத்த வேண்டும் என்கிற டிராய்-ன் கட்டளைக்கு, ஜியோ நிறுவனம் இணங்கியதன் விளைவாக இந்த திட்டங்கள் வந்துள்ளன.
ஜியோ ரூ.458 வாய்ஸ்-எஸ்எம்எஸ் ஒன்லி பிளான்: இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 1000 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோடிவி, ஜியோசினிமா (பிரீமியம் சந்தா அல்ல) மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
ஜியோ ரூ.1,958 வாய்ஸ்-எஸ்எம்எஸ் ஒன்லி பிளான்: இதன்கீழ் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை ஜியோடிவி, ஜியோசினிமா (பிரீமியம் சந்தா அல்ல) மற்றும் ஜியோ கிளவுட் ஆகிய ஆப்களுக்கான இலவச அணுகல்கள் கிடைக்கும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி 1 ஆண்டு அல்லது 365 நாட்கள் நாட்கள் ஆகும்.
மேற்கண்ட 2 திட்டங்களும் முன்னதாக முறையே ரூ.479 மற்றும் ரூ.18,99 ஆக இருந்தன. இவைகளின் கீழ் முறையே 6ஜிபி டேட்டா மற்றும் 24ஜிபி டேட்டா அணுக கிடைத்தது, தற்போது டேட்டா நன்மை இல்லாமல், ரூ.479 ஆனது ரூ 21 குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல ரூ.1,899 ஆனது ரூ.59 விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








