Home
News

மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா.. புதிய சார்ஜரை அறிமுகம் செய்த Jio.. என்ன விலை?

ஜியோ (Jio) நிறுவனம் தொடர்ந்து புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு சாதனங்களும் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் எலெக்ட்ரிக் கார்களை சார்ஜ் செய்வதற்கான புதிய சார்ஜரை (Jio Smart EV Charger) அறிமுகம் செய்து விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது ஜியோ நிறுவனம். இது குறித்து விரிவான தகவல்களை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

தொலைத்தொடர்பு சேவைகள், மொபைல் போன் விற்பனை மற்றும் பல தொழில்நுட்ப சாதனங்களை விற்பனை செய்து வந்த ஜியோ நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார் சார்ஜரை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. குறிப்பாக ஜியோஇவி ஏரிஸ் (JioEV Aries) என்ற பெயரில் இந்த ஜியோ ஸ்மார்ட் எரெக்ட்ரிக் கார் சார்ஜரானது அமேசான் பட்டியலிடப்பட்டிருக்கிறது.

புதிய சார்ஜரை அறிமுகம் செய்த Jio.. என்ன விலை?

ஜியோவின் இந்த சார்ஜரை பிளக்-இன் எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் உள்ளிட்ட அனைத்து வகையான எலெக்ட்ரிக் கார்களுக்கும் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இதில் டைப் 2 யுனிவர்சல் கனெக்டரை (universal Type 2 charging connector) கொடுத்திருக்கிறது அந்நிறுவனம். பின்பு CE மற்றும் ARAI சான்றிதழ்களையும் பெற்றிருக்கிறது ஜியோவின் எலெக்ட்ரிக் கார் சார்ஜர்.

அதேபோல் 7.4kW சார்ஜிங் திறன் கொண்ட ஜியோ எலெக்ட்ரிக் கார் சார்ஜரானது இரவு நேரம் முழுவதும் சார்ஜ் செய்வதற்கு ஏற்றது. பின்பு இந்த சார்ஜரை சுவரில் பொருத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 3.75 கிலோ எடையைக் கொண்டிருக்கிறது இந்த அசத்தலான சார்ஜர்.

புதிய சார்ஜரை அறிமுகம் செய்த Jio.. என்ன விலை?

எலெக்ட்ரிக் கார்களை பாதுகாக்க பல்வேறு தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது ஜியோவின் புதிய ஏலெக்ட்ரிக் கார் சார்ஜர். அதாவது ஓவர்கரண்ட்(overcurrent) பாதுகாப்பு, ஓவர் வோல்டேஜ் (overvoltage) பாதுகாப்பு, அண்டர் வோல்ட்டேஜ் (undervoltage) பாதுகாப்பு, ஷார்ட் சர்க்யூட் (short circuit)பாதுகாப்பு, ஓவர் டெம்பரேச்சர் (over temperature) பாதுகாப்பு, கிரௌண்டு பால்ட் பாதுகாப்பு மற்றும் இன்டகிரேட்டட் சர்ஜ் உள்ளிட்ட அம்சஙகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

குறிப்பாக IP55 மற்றும் IK10 ரேட்டிங்கையும் பெற்றுள்ளது இந்த அதிநவீன ஜியோ சார்ஜர். எனவே தூசி, தண்ணீர் மற்றும் பிற விதமான பிரச்சினைகள் இருந்தாலும் நீண்டு உழைக்கும் திறனைக் கொண்டிருக்கிறது. பயனர்கள் இந்த சாதனத்தை நம்பி வாங்கலாம்.

புதிய சார்ஜரை அறிமுகம் செய்த Jio.. என்ன விலை?

ஜியோஇவி ஏரிஸ் சார்ஜர் ஆனது 4ஜி (4G), வைஃபை (Wi-Fi) மற்றும் லேன் ( LAN) கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. எனவே இதன் மூலம் ஜியோ ட்ரூபவர் (Jio True power) மொபைல் செயலி ஆதரவுடன், சார்ஜிங் தகவல்களையும், அதனை இயக்கவும் முடியும். அதேபொல் கடைசியாக எப்போது சார்ஜர் பயன்படுத்தப்பட்டது, சார்ஜிங் ஹிஸ்டரி, சார்ஜ் ஆகியிருக்கும் அளவு உள்ளிட்ட தகவல்களை போன் மூலம் எளிமையாகப் பெற முடிகிறது.

ஜயோ நிறுவனத்தின் இந்த சார்ஜர் விலை ரூ.ரூ.46,499-ஆக உள்ளது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருகிறது இந்த அசத்தலான சார்ஜர். குறிப்பாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 7.2kW சார்ஜரையும், எம்ஜி நிறுவனம் 7.4kW சார்ஜரையுமே கொடுத்து வருகின்றன. ஜியோ நிறுவனமும் தற்போது 7.4kW சார்ஜிங் திறனைக் கொண்ட சார்ஜரை வழங்குவதால் கண்டிப்பாக நல்ல வரவேற்பு இருக்கும்.

Best Mobiles in India

English summary
Jio Smart EV Charger JioEV Aries Launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X