Jio சிம் இருக்கா? 10GB இலவச டேட்டா.. 10 OTT சேனல்.. இலவச Zomato உணவு ஆர்டர் சந்தா கூப்பனை பெறுவது எப்படி?
ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் இப்போது இலவசமாக 10GB டேட்டா நன்மை (Free 10GB data), 10 OTT விருப்பங்களின் மீது ஒரு மாத இலவச சந்தா, மற்றும் 3 மாத காலம் செல்லுபடியாகும் ஸ்மோடோ கோல்டு சந்தா (Zomato Gold Subscription) போன்ற இலவச நன்மைகளை ஜியோ நிறுவனம் தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இது ஜியோ நிறுவனத்தின் 8வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதுவொரு குறுகிய கால சலுகை என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களிடம் ஜியோ சிம் கார்டு (Jio SIM Card) இருந்து இன்னும் நீங்கள் இந்த இலவசங்களை பெறவில்லை என்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே இப்போது பார்க்கலாம். இந்த சிறப்பு சலுகை இன்னும் மூன்று நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பதனால், இதுவரை இந்த இலவசங்களை பெறாத ஜியோ வாடிக்கையாளர்கள் உடனே இந்த இலவச நன்மைகளை எப்படி பெறுவது என்பது பற்றிய விபரங்களை இப்போது பார்க்கலாம்.

Jio சிம் இருக்கா? 10GB இலவச டேட்டா.. 10 OTT சேனல்.. இலவச Zomato உணவு ஆர்டர் சந்தா பெறலாம்:
செப்டம்பர் 5ம் தேதி முதல் துவங்கி செப்டம்பர் 10, 2024 ஆம் தேதி வரை மட்டுமே ஜியோ இந்த இலவச நன்மைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த இலவச நன்மை ஜியோவின் எல்லா வாடிக்கையாளர்களுக்கும் கிடைக்குமா என்றால்? இல்லை என்பதே ஒரு விரக்தியான பதிலாக இருக்கிறது. ஜியோவின் குறிப்பிட்ட திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் எல்லா மக்களுக்கு மட்டுமே இந்த இலவசங்கள் பயன்படுத்த கிடைக்கிறது.
ஜியோவின் வலைத்தள பக்கத்தின் தகவல் படி, ஜியோ ரூ. 899, ரூ. 999 மற்றும் ரூ. 3599 விலை திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 700 வரை மதிப்பிலான இலவச நன்மைகளை இப்போது ஜியோ வழங்கி வருகிறது. ஜியோ ரூ. 899 திட்டம் (Jio Rs 899 Plan) மற்றும் ஜியோ ரூ. 999 திட்டம் (Jio Rs 999 Plan) போன்ற திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10 ஓடிடி தளங்களுக்கான 1 மாத சந்தா மற்றும் 10GB டேட்டா இலவசமாக கிடைக்கிறது.
இந்த இலவசங்களில் வழங்கப்படும் 10GB டேட்டா நன்மையின் மதிப்பு மட்டும் ரூ. 175 ஆகும். இதேபோல் ஜியோ ரூ. 2999 திட்டம் (Jio Rs 2999 Plan) மற்றும் அதற்கு மேல் உள்ள விலை திட்டங்களை ரீசாஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சோமட்டோ கோல்டு சந்தாவுக்கான 3 மாத அணுகல் இலவசமாக கிடைக்கிறது. இது டெலிவரி கட்டணங்களை இளவமாக வழங்குகிறது. இத்துடன் ஆஜியோ தளத்தின் ரூ. 500 மதிப்பிலான வவுச்சர் கூட கிடைக்கிறது.
எந்த Jio திட்டங்களை ரீசார்ஜ் செய்தால், இந்த இலவச நன்மைகளை முழுவதுமாக பெறலாம்?
இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் பொழுது, ஜியோ வழங்கும் இலவச நன்மைகளை நீங்கள் பெற முடியும். ஒவ்வொரு இலவச நன்மை மற்றும் பரிசு வவுச்சர்களை பெற வாடிக்கையாளர்கள் ஜியோ ஆப்ஸ் வழியாக சென்று கூபன்ஸ் பிரிவின் கீழ் இருந்து நன்மைகளை அனுபவிக்கலாம். ஜியோவின் ரூ. 899 திட்டம், தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், தினமும் 100 SMS உடன் 90 நாட்களுக்கு செல்லுபடியாகிறது.
ஜியோ ரூ. 999 திட்டம், இதே நன்மைகளுடன் 98 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. இறுதியாக, ஜியோவின் ரூ. 3599 திட்ட ம் தினமும் 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் கால்ஸ், தினசரி 100 எஸ்எம்எஸ் போன்றவற்றை 365 நாட்களுக்கு வழங்குகிறது.


Click it and Unblock the Notifications








