Jio SIM இருக்கா.. அப்போ இலவச டேட்டா இருக்கு.. 2024 குஷியில் வாரி வழங்கும் அம்பானி கம்பெனி.. உடனே முந்துங்க..
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச டேட்டா நன்மையை வழங்கி வருகிறது. இந்த விஷயம் தெரியாத வாடிக்கையாளர்கள், இந்த ப்ரீ டேட்டா (Jio Free Data) நன்மையை எப்படி பெறுவது என்ற தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜியோவின் 2 ப்ரீபெய்ட் திட்டத்துடன் (Jio Prepaid Plans) அதன் ப்ரீ டேட்டா நன்மைகளை (Jio Free Data Benefits) வழங்குகிறது. இதுவொரு குறுகிய கால விளம்பர சலுகை என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ பயனர்கள், இப்போது நிறுவனம் வழங்கும் ரூ.399 மற்றும் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்வதன் மூலம், திட்டத்துடன் கிடைக்கும் தினசரி டேட்டா (Daily Data Benefits) நன்மையோடு, கூடுதலாக இலவச டேட்டா நன்மையையும் இப்போது பெறுகிறார்கள்.

ஜியோ வெளியிட்டுள்ள விளம்பரத்தின் படி, இந்த திட்டங்களை ரீசார்ஜ் செய்வதன் மூலம் ரூ.61 விலை மதிப்பிலான டேட்டா நன்மையை (Rs 61 Worth Data Free) வாடிக்கையாளர்கள் இலவசமாக பெற முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நீங்கள் ரூ.399 திட்டத்தை (Jio Rs 399 Plan) தேர்வு செய்யும் பொழுது கிடைக்கிறது. மறுபுறம், நீங்கள் ரூ.219 திட்டத்தை தேர்வு செய்யும் பொழுது ரூ.25 மதிப்பிலான டேட்டாவை இலவசமாக பெறுவீர்கள்.
ஜியோ வழங்கும் இலவச டேட்டா நன்மை (Free data benefit from Jio):
சரி, இப்போது ரூ.399 திட்டத்துடன் நிறுவனம் என்னென்ன நன்மைகளை வாரி வழங்குகிறது என்று பார்க்கலாம். ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 399 Prepaid Plan): தினசரி 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்துடன் பயனர்கள், அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (Unlimited voice calls) நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (Validity) உடன் வருகிறது.
இத்துடன் கூடுதல் நன்மைகளாக, ஜியோ நிறுவனத்தின் பிரத்தியேக சேவைகளான ஜியோசினிமா (JioCinema), ஜியோகிளவுட் (JioCloud) மற்றும் ஜியோடிவி (JioTV) போன்ற நன்மைகளை பயனர்கள் இலவசமாக அனுபவிக்க முடியும். இத்துடன், இப்போது நிறுவனம் வழங்கும் ரூ.61 மதிப்பிலான 6ஜிபி டேட்டாவும் இலவசமாக (Jio 6GB Free Data) கிடைக்கிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் ட்ரூ 5ஜி இலவச டேட்டா (Unlimited True 5G) நன்மையையும் 5ஜி வட்டங்களில் வழங்குகிறது.

ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 219 Prepaid Plan):
இது ரூ.399 திட்டத்தின் மலிவு பதிப்பு திட்டமாகும். ரூ.399 திட்டத்தில் கிடைக்கும் அதே நன்மைகள் அப்படியே இதிலும் கிடைக்கும். ஆனால், இதன் வேலிடிட்டி மட்டும் 14 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டியுடன் வருகிறது. இது தினசரி 3ஜிபி டேட்டா (Daily 3GB data), அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோகிளவுட் மற்றும் ஜியோடிவி பலன்களை வழங்குகிறது.
இந்த திட்டத்துடன் ஜியோ நிறுவனம் இப்போது ரூ.25 விலை மதிப்பிலான டேட்டாவை (Rs 25 worth free data benefits) இலவசமாக வழங்குகிறது. இதன் மூலம் உங்களுக்கு 2ஜிபி டேட்டா இலவசமாக (Jio 2GB Free Data) கிடைக்கிறது. இந்த 2 திட்டங்களும் இப்போது ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. மை ஜியோ ஆப்ஸ் (My Jio Apps) மூலம் இந்த திட்டங்களை நீங்கள் ரீசார்ஜ் செய்யலாம். கூடுதல் டேட்டா உங்கள் மொபைல் எண்ணிஎக்கு நேரடியாக வழங்கப்படும்.
இந்த இலவச டேட்டாவுக்கு எந்தவொரு தினசரி கட்டுப்படும் இல்லை என்பதனால், இதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், உங்கள் அடிப்படை திட்டத்தின் செல்லுபடி காலம் நிறைவடையும் முன்பு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இது அடுத்த முறை நீங்கள் ரீசார்ஜ் செய்யும் பொழுது கேரி ஃபார்வர்ட் செய்யப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








