Jio கிட்ட உங்கள் மொத்த வாய்ஸ் கால்ஸ் ஜாதகமே இருக்கே.. 6 மாத கால் ஹிஸ்டரி டவுன்லோட் செய்வது எப்படி?
ஜியோ சிம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் (Jio SIM customers) அனைவரும் அவர்களுடைய ஒட்டுமொத்த கால் ஹிஸ்டரியை (total call history) தெரிந்துகொள்ள அனுமதிக்கும் ஒரு பயனுள்ள அம்சத்தை பயன்படுத்தலாம் என்று ஜியோ (Jio) அறிவித்துள்ளது. உங்கள் சிம் கார்டில் இருந்து எந்தெந்த எண்களுக்கு அழைப்பு மேற்கொள்ளப்பட்டது (Jio SIM out going calls history), எந்தெந்த எண்களில் இருந்து அழைப்புகள் பெறப்பட்டது (Jio incoming voice calls history) என்பது போன்ற அனைத்து தகவலையும் காண்பிக்கும் ஒரு சிறப்பு அம்சத்தை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்கள் ஸ்மார்ட்போன் (smartphone) மூலம் நீங்கள் மேற்கொண்ட அனைத்து அழைப்புகளின் விபரங்களை தெள்ளத்தெளிவாக காண்பிக்கும் வாய்ஸ் கால் அழைப்பு வரலாறு அம்சத்தை (voice call history feature) எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி தான் இங்கு பார்க்கப்போகிறோம். ஸ்மார்ட்போன்கள் இப்போது வாய்ஸ் கால்ஸ் ஹிஸ்டரியை (voice call history) சரிபார்க்க அனுமனிதிக்கின்றன. இருப்பினும், ஒரு ஸ்மார்ட்போன் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான அழைப்பு பதிவுகளை மட்டுமே காண்பிக்க அனுமதிக்கப்படுகிறது.

Jio கிட்ட உங்கள் மொத்த வாய்ஸ் கால்ஸ் ஜாதகமே இருக்கே.. 6 மாத கால் ஹிஸ்டரி:
இதனால், ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்ட அழைப்பு தகவல்களை (total call history details) அறிந்துகொள்வதில் சிக்கல் உருவாகுகிறது. உதாரணமாக, ஐபோன் (iPhone) சாதனம் வெறும் 2,000 எண்ணிக்கையிலான அழைப்பு தகவல்களை (limit of 2000 call history details) மட்டுமே அதன் பயனருக்கு காண்பிக்கிறது. இது தோராயமாக ஒரு வாரம் அல்லது ஒரு சில நாட்களில் மேற்கொள்ளப்பட்ட அழைப்பு விபரங்களை மட்டும் காண்பிக்கிறது.
ஒரு வேலை உங்களுக்கு கடந்த 6 மாத கால் ஹிஸ்டரி தகவல் (6 months call history details) வேண்டுமென்றால் என்ன செய்வது? அதை உங்கள் ஸ்மார்ட்போன்கள் நிச்சயமாக வழங்காது. ஆனால், நீங்கள் ஒரு ஜியோ சிம் கார்டு (Jio SIM card users) பயனர் என்றால், இதை செய்வதற்கு ஒரு வழி இருக்கிறது.
6 மாத கால் ஹிஸ்டரி தகவல் டவுன்லோட் செய்யலாமா?
இந்த அம்சம் 7, 15, 30 நாட்கள் முதல் 180 நாட்கள் வரையிலான வாய்ஸ் கால் ஹிஸ்டரி தகவல்களை அறிந்துகொள்ள ஜியோ (Jio) அனுமதிக்கிறது. இதை எளிமையாக செய்து முடிக்க அனுமதிக்கும் ஒரு பிரத்தியேகமான அம்சத்தையும் ஜியோ தற்போது அதனுடைய மை ஜியோ ஆப்ஸ் (My Jio Apps) இல் வழங்குகிறது.
ஜியோ ஆப்ஸ் (Jio Apps) மூலம் எப்படி உங்கள் வாய்ஸ் கால் ஹிஸ்டரி தகவலை டவுன்லோட் செய்யலாம் (how to download voice call history) என்பதை பற்றி பார்க்கலாம்.
- ஜியோ சிம் கார்டு பயனர்களை முதலில் MyJio app பயன்பாட்டை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
- இது ஆண்ட்ராய்டு (Android) மற்றும் iOS ஆகிய இரண்டு தளங்களிலும் கிடைக்கிறது.
- உங்கள் ஜியோ மொபைல் நம்பரை (Jio mobile number) உள்ளிட்டு லாகின் செய்யவும்.
- வலது மேல் மூலையில் உள்ள உங்கள் ப்ரொபைல் (Profile) அம்சத்தை கிளிக் செய்க.
- பிறகு Mobile கிளிக் செய்து My Usage அம்சத்தை கிளிக் செய்யவும்.
- Calls விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- இப்போது 7 நாட்கள், 15 நாட்கள், 30 நாட்கள் மற்றும் கஸ்டம் டேட்ஸ் என்ற விருப்பங்கள் காண்பிக்கப்படும்.
- உங்கள் தேவைக்கேற்ற விருப்பத்தை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
- ஈமெயில் மூலம் கால் ஹிஸ்டரி பெற விரும்பினால் ஈமெயில் ஸ்டேட்மென்ட் (email statement) கிளிக் செய்யவும்.
உங்கள் Jio வாய்ஸ் கால்ஸ் ஹிஸ்டரி டவுன்லோட் செய்ய இந்த விருப்பத்தை கிளிக் செய்யுங்க:
- கால் ஹிஸ்டரி தகவலை டவுன்லோட் செய்ய விரும்பினால் டவுன்லோட் ஸ்டேட்மென்ட் (Download statement) கிளிக் செய்க.
- கால் ஹிஸ்டரி தகவலை பார்க்க மட்டும் விரும்பினால் வியூ ஸ்டேட்மென்ட் (View statement) விருப்பங்களை கிளிக் செய்க.
இந்த செயல்முறையை பின்பற்றி அதிகபட்சமாக 180 நாட்கள் வரையிலான கால் ஹிஸ்டரி தகவல்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியும். இதேபோல், எஸ்எம்எஸ் ஹிஸ்டரி மற்றும் டேட்டா ஹிஸ்டரி தகவல்களையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








