Home
News

IPL ரசிகர்களுக்காக Jio சத்தமில்லாமல் அறிமுகம் செய்த புதிய ரூ.555 திட்டம்.. 55 நாளுக்கு கவலையில்லை..

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்தியாவில் உள்ள பயனர்களுக்காகத் தொடர்ந்து பல நன்மைகள் வழங்கக்கூடிய சிறந்த திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது சத்தமே இல்லாமல் புதிதாக ரூ. 555 என்ற ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தைத் தனது பட்டியலில் சேர்த்து, அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய திட்டம், ஐபிஎல் தொடர் துவங்கவிருக்கும் நேரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய திட்டத்தின் நன்மைகள் என்ன? இது எவ்வளவு நாள் செல்லுபடியாகும் என்பது போன்ற தகவலைத் தெரிந்துகொள்ளலாம்.

ஜியோ சத்தமில்லாமல் அறிமுகம் செய்துள்ள ரூ.555 திட்டம்

ஜியோ சத்தமில்லாமல் அறிமுகம் செய்துள்ள ரூ.555 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் வரக்கூடிய ஒரு புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வெறும் ரூ.555 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபிஎல் போட்டிக்கு இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில், இந்த திட்டம் நிறுவனத்தால் சத்தமில்லாமல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட் பிரிவில் உள்ள பயனர்களுக்காக ஜியோ நிறுவனம் தனது இணையதளத்தில் இந்த திட்டத்தை அமைதியாகச் சேர்த்துள்ளது. கட்டண உயர்வுக்கு முன்பே ஜியோ ரூ. 555 திட்டத்தை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் முந்தைய ரூ. 555 திட்டம் வழங்கிய நன்மைகள் என்ன தெரியுமா?

ஜியோவின் முந்தைய ரூ. 555 திட்டம் வழங்கிய நன்மைகள் என்ன தெரியுமா?

ஜியோ நிறுவனம் முன்பு வழங்கிய ரூ. 555 திட்டத்தில், பயனர்களுக்குத் தினசரி 1.5 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மை ஆகியவற்றைப் பெறுகின்றனர். இருப்பினும், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரூ. 555 திட்டம் அப்படியானது இல்லை. ரிலையன்ஸ் ஜியோவின் புதிய ரூ. 555 ப்ரீபெய்ட் திட்டம், மொத்தத் தரவு விருப்பத்தைத் தேடும் பயனர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும். ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 555 ப்ரீபெய்ட் திட்டத்தின் முழுமையான பலன்களைப் பார்ப்போம்.

புதிய ரூ. 555 திட்டத்தின் விபரங்கள்

புதிய ரூ. 555 திட்டத்தின் விபரங்கள்

ஜியோ நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய ரூ. 555 திட்டமானது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் முழுமையான நன்மைகளுடன் வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ. 555 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தம் 55 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் வரம்பற்ற பலன்கள் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை விரும்பும் பயனர்களுக்கானது அல்ல என்பது நினைவில்கொள்ள வேண்டும். இந்த புதிய திட்டத்துடன் ஒதுக்கப்பட்ட டேட்டா நன்மையோடு, உங்களுக்குக் குரல் அழைப்பு மற்றும் SMS பலன்களை இத்திட்டம் வழங்காது.

55 நாட்களுக்கு 55 ஜிபி டேட்டா நன்மை

55 நாட்களுக்கு 55 ஜிபி டேட்டா நன்மை

ஜியோவின் இந்த புதிய ரூ. 555 திட்டம் உண்மையில் ஒரு டேட்டா ஆட் ஆன் திட்டமாகும். இது பயனர்களுக்கு மொத்தமாக 55 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பிட்டுள்ளபடி, இந்த திட்டம் குரல் அழைப்பு அல்லது SMS நன்மைகளுடன் வராது என்பதை மீண்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த திட்டத்தில் வழங்கப்படும் மொத்த டேட்டா நன்மைக்கான செல்லுபடியாகும் வேலிடிட்டி காலம் 55 நாட்கள் ஆகும். முன்பே சொன்னது போல், IPL துவங்கவுள்ள நிலையில் நிறுவனம் கிரிக்கெட் ரசிகர்களுக்காக இந்த திட்டத்தை IPL பார்ப்பதற்கான OTT நன்மையோடு கொண்டுவருகிறது.

OTT நன்மையோடு கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

OTT நன்மையோடு கிடைக்கும் கூடுதல் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

இந்த புதிய ரூ. 555 திட்டமானது ஓவர்-தி-டாப் (OTT) சந்தாக்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை அடக்கியுள்ளது. இது தனித்தனியாக நீங்கள் வாங்க விரும்பினால் இதற்கென்று ஒரு ஆண்டுக்கு நீங்கள் சுமார் ரூ. 499 செலவு செய்ய வேண்டும். ஆனால், இதை இந்த திட்டத்துடன் சேர்த்து 55 ஜிபி டேட்டாவையும் பெறுகிறீர்கள். மேலும், JioCloud, JioTV, JioSecurity மற்றும் JioCinema உள்ளிட்ட ஜியோ பயன்பாடுகள் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு வழங்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் நன்மையும் இத்துடன் உண்டா?

ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் நன்மையும் இத்துடன் உண்டா?

இந்த திட்டத்தைத் தேர்வு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு கேஷ் பேக் நன்மையையும் நிறுவனம் வழங்குகிறது. இந்தத் திட்டமானது ரூ.200க்கு மேல் செலவாகும் என்பதால், உங்களுக்கு ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் நன்மையைப் பெறவும் உரிமை உண்டு. ரூ. 200 விலைக்கு மேல் நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து ரீசார்ஜ் திட்டத்தின் மீதும் 20% கேஷ் பேக் நன்மை கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தை நீங்கள் தேர்வு செய்யும் பட்சத்தில் ஜியோமார்ட் மஹா கேஷ்பேக் சலுகையையும் பெறுவீர்கள்.

IPL ரசிகர்களுக்கான திட்டமா இது?

IPL ரசிகர்களுக்கான திட்டமா இது?

இது வீடுகளிலிருந்து வேலை செய்யும் நபர்களுக்கான வொர்க் ஃபிரம் ஹோம் திட்டமான டேட்டா ஆட்-ஆன் திட்டமாகும். இது முழுமையான செல்லுபடியாகும் தன்மையுடன் வருவதால், பெரும்பாலும் டாக்டைம் திட்டங்களுடன் மட்டுமே ரீசார்ஜ் செய்யும் நபர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். அதேபோல், IPL ரசிகர்களுக்குத் தடையில்லாத டேட்டா பயனை வழங்க திட்டம் சிறப்பானது என்பது சந்தேகமில்லை. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா இருந்தால் பயனர்கள் IPL தொடரை எளிதாக லைவ் பார்க்கலாம்.

IPL காலத்தில் அதிக டேட்டாவுடன், அழைப்பு நன்மையோடு கிடைக்கும் திட்டங்கள் இது தான்

IPL காலத்தில் அதிக டேட்டாவுடன், அழைப்பு நன்மையோடு கிடைக்கும் திட்டங்கள் இது தான்

இந்த திட்டங்கள் எல்லாம் வேண்டாம், தினமும் 3ஜிபி டேட்டா வேண்டும், அன்லிமிடெட் அழைப்பு நன்மை வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்காக நிறுவனம் வழங்கும் திட்டங்கள் பற்றி விரும்பினால் தொடர்ந்து படியுங்கள். ஜியோ ரூ. 419 விலை முதல் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டங்களை வழங்குகிறது. ஜியோவின் ரூ. 419 ப்ரீபெய்ட் திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. செல்லுபடியாகும் காலத்திற்குத் தினசரி 3ஜிபி டேட்டாவை இத்திட்டம் வழங்குகிறது.

தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டம்

தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் திட்டம்

ஜியோவின் மற்றொரு 3ஜிபி டேட்டா கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றிப் பார்க்கையில், இது 28 நாட்களுக்குச் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் ரூ. 601 விலையில் வருகிறது. இந்த திட்டம் வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகளை நிறுவனம் வழங்குகிறது. இது தினசரி 3ஜிபி டேட்டாவுடன், பயனர்கள் கூடுதலாக 6ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டம் Disney+ Hotstar Mobile OTT இயங்குதளத்திற்கான வருடாந்திர சந்தாவுக்கான அணுகலுடன் வருகிறது.

84 நாட்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பி, 100 SMS

84 நாட்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்பி, 100 SMS

பட்டியலில் அடுத்ததாக இருப்பது ரூ.1,199 விலையில் வரும் ப்ரீபெய்ட் திட்டம். இது 84 நாட்கள் செல்லுபடியாகும் காலத்திற்குத் தினமும் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்திட்டம் பயனர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் தினமும் 100 SMS நன்மைகளுக்கான அணுகலை வழங்குகிறது. கடைசியாக, ஜியோ ஒரு வருடகால ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது. இது ரூ.4,119 விலையில் வருகிறது. இது வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினமும் 100 SMS ஆகியவற்றை 365 நாட்களுக்குச் செல்லுபடியாகும் காலத்திற்குத் தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும் வகையில் வழங்குகிறது.

Best Mobiles in India

English summary
Jio Silently Launches New Rs 555 Prepaid Plan With Disney Plus Hotstar Subscription Before IPL Match : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X