Home
News

Jio அடிச்சா நெத்தியடி தான்.. Airtel-லுக்கு போட்டியாக புதிய திட்டங்கள்.. 84 நாளுக்கு தினமும் 2Gb டேட்டா..

OTT உள்ளடக்கத்தை ஸ்ட்ரீமிங் செய்யும் பயனர்களை இலக்காகக் கொண்டு, ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) அமைதியாக புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஜியோ பொழுதுபோக்கு ப்ரீபெய்ட் திட்டங்கள் ZEE5 மற்றும் SonyLIV சந்தாவுடன் வருகின்றன.

OTT சலுகைகளுக்கு பெயர் பெற்ற ஜியோ, இப்போது ஜியோ பயனர்களுக்கு கூடுதல் விருப்பங்களை வழங்கியுள்ளது. முக்கியமாக, இந்த புதிய திட்டங்கள் ஜியோ சினிமா ஆப்ஸ் மூலம் ஜீ5 (ZEE5) மற்றும் சோனிலைவ் (Sony LIV) மூலம் OTT நன்மைகளை வழங்குகின்றன. இந்த திட்டங்கள் அணைத்தும் 84 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகின்றன. இதன் விலை மற்றும் முழு நன்மைகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Jio அடிச்சா நெத்தியடி தான்.. Airtel-லுக்கு போட்டியாக புதிய திட்டங்கள்

ஜியோ 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள்
ஜியோ ரூ 909 திட்டம் (Jio Rs 909 Prepaid Plan):
ஜியோவின் புதிய என்டர்டெயின்மென்ட் ரூ.909 திட்டமானது, தினசரி 64 கேபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டாவுடன் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இதில் அன்லிமிடெட் 5G டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், தினமும் 100 SMS மற்றும் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இது Sony LIV மற்றும் ZEE5 மற்றும் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகியவற்றிற்கான நன்மைகளுடன் வருகிறது.

ஜியோ ரூ.806 திட்டம் (Jio Rs 806 Prepaid Plan):
ஜியோவின் புதிய என்டர்டெயின்மென்ட் ரூ.806 திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இத்திட்டமும் மேலே பார்த்த திட்டத்தின் நன்மைகளை அப்படியே வழங்குகிறது. இதில் வரம்பற்ற குரல், வரம்பற்ற 5ஜி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 84 நாள் வேலிடிட்டி உள்ளது. இந்த திட்டம் Sony LIV-க்கான பலன்களை மட்டும் வழங்குகிறது. இதில் ஜீ5 சாந்த கிடையாது. ஆனால், JioTV, JioCinema, JioCloud நன்மையை வழங்கும்.

Jio அடிச்சா நெத்தியடி தான்.. Airtel-லுக்கு போட்டியாக புதிய திட்டங்கள்

ஜியோ ரூ.805 திட்டம் (Jio Rs 805 Prepaid Plan):
முந்தைய திட்டத்தை விட 1 ரூபாய் குறைவாக, ரூ.805 திட்டம் ZEE5 சந்தா நன்மைகளை வழங்குகிறது. தினசரி வரம்பை அடைந்த பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டாவுடன் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா இதில் கிடைக்கும். இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், அன்லிமிடெட் 5G டேட்டா, தினமும் 100 SMS மற்றும் OTT நன்மைகளுடன் 84 நாள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் JioTV, JioCinema, JioCloud ஆகியவை அடங்கும்.

OTT இல்லாமல் மாற்று 84 நாட்கள் திட்டத்தையும் ஜியோ தற்போது அறிமுகம் செய்துள்ளது. இது ரூ.719 விலையில் வருகிறது. Jio Rs 719 Prepaid Plan புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 84-நாள் திட்டங்களில் OTT உள்ளிட்ட திட்டங்களைப் பெற விரும்பாத பயனர்களுக்கு மாற்று விருப்பத்தை வழங்குகின்றன. இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

இதில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், அன்லிமிடெட் 5G டேட்டா, தினமும் 100 SMS மற்றும் JioTV, JioCinema மற்றும் JioCloud-க்கான சந்தாக்கள் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டங்களை போலவே ஜியோ நிறுவனம் இப்போது 365 நாட்கள் செல்லுபடியாகும் OTT நன்மையுடன் கிடைக்கும் சில திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது. அவை அதிக விலை கொண்ட திட்டங்களாக இருக்கின்றன என்பதனால் அதை அடுத்த பதிவில் தனியாக உங்களுக்கு வழங்குகிறோம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Silently Launched New Prepaid Plans With SonyLiv and ZEE5 OTT Benefits From Rs 805
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X