Home
News

அம்பானி ஜி.. இது நல்லதுக்கு இல்ல ஜி.. இனி ரூ.100 எக்ஸ்ட்ரா கொடுக்கணும்.. பேஸிக் Jio ரீசார்ஜ் மீது விலை உயர்வு!

5ஜி அறிமுகமான நாளில் இருந்தே, எப்போது வேண்டுமானாலும் ரீசார்ஜ் கட்டண உயர்வு (Tariff Price Hike) அறிவிக்கப்படலாம் என்கிற சூழ்நிலை நிலவி வருகிறது. இருந்தாலும் கூட முகேஷ் அம்பானி (Mukesh Ambani) தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனமானது கட்டண உயர்வு குறித்து வாய் திறக்காமலேயே இருந்தது.

கடந்த வாரம் ஜியோ பிளஸ் (Jio Plus) என்கிற "புதிய சேவையின்" கீழ் 4 போஸ்ட்பெய்ட் திட்டங்கள் (ரூ.299 முதல் ரூ.699 வரை) அறிமுகமான போதும் கூட, ஏற்கனவே உள்ள போஸ்ட்பெய்ட் திட்டங்களின் நிலைமை என்ன? அவற்றின் விலைகள் உயர்த்தப்படுமா? என்பது குறித்து எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

இனி ரூ.100 எக்ஸ்ட்ரா செலவாகும்.. பேஸிக் Jio ரீசார்ஜ் மீது விலை உயர்வு!

இதற்கிடையில் ஜியோ, சத்தமின்றி அதன் போஸ்ட்பெய்டு திட்டங்களின் மீது விலை உயர்வை கட்டவிழ்த்து விட்டுள்ளது. ஜியோவின் புதிய ஜியோ பிளஸ் போஸ்ட்பெய்ட் திட்டங்கள் நேரலைக்கு வந்த சில நாட்களில் ரூ.199 க்கு ரீசார்ஜ் செய்ய கிடைத்த ஜியோவின் நுழைவு நிலை போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது.

அதாவது, இனிமேல் ஜியோவின் நுழைவு நிலை போஸ்ட்பெய்ட் திட்டமானது ரூ.199 க்கு பதிலாக ரூ.299 க்கு தொடங்கும். "வழக்கமான" நன்மைகளை பொறுத்தவரை, ஜியோவின் புதிய ரூ.299 போஸ்ட்பெய்ட் திட்டமானது 30 ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா, லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் உட்பட அன்லிமிட்ட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்றவைகளை வழங்கும்.

கூடுதல் நன்மைகளை பொறுத்தவரை, "தகுதியுள்ள" ஜியோ சந்தாதாரர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) வழங்கும் ஜியோ வெல்கம் ஆஃபரை (Jio Welcome Offer) பெறலாம். மேலும் இந்த திட்டத்தின் கீழ் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற ஜியோ ஆப்ஸ் நன்மைகளும் கிடைக்கும்.

கவனிக்கப்பட வேண்டிய எக்ஸ்ட்ரா செலவுகள்: இந்த திட்டத்தை தேர்வு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.375 என்கிற பாதுகாப்பு வைப்பு தொகையை (Security deposit) செலுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும். மேலும் ஆக்டிவேஷனின் (Activation) போது ஒரு சிம்மிற்கு ரூ.99 ஆக்டிவேஷன் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளவும்.

பழைய ரூ.199 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகள்: இது 25ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டா (அதாவது புதிய ரூ.299-ஐ விட 5ஜிபி டேட்டா அதிகம்), லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் உட்பட அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் போன்றவைகளை வழங்கியது. கூடுதலாக, இந்த திட்டமும் ஜியோ ஆப்ஸ் நன்மைகளை வழங்கியது.

வெறும் 5ஜிபி டேட்டாவிற்கு ரூ.100-ஆ? மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஜியோவின் புதிய ரூ.299 திட்டமானது பழைய ரூ.199 திட்டத்தை விட 5ஜிபி ஹை-ஸ்பீட் டேட்டாவை அதிகமாக வழங்குகிறது. இது தவிர்த்து மற்ற அனைத்து நன்மைகளிலும் எந்த வேறுபாடும் இல்லை. கூடுதலாக கிடைக்கும் வெறும் 5ஜிபி டேட்டாவிற்கு ரூ.100 அதிகம் செலுத்த வேண்டுமென்பது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய கட்டண உயர்வாகும்.

அம்பானி ஜி.. இது நல்லதுக்கு இல்லை! புதிய ரூ.299 அறிமுகமான வேகத்தில் ரூ.199 என்ட்ரி லெவல் போஸ்ட்பெய்ட் திட்டமானது ஜியோவின் அதிகார்பூர்வ் வலைத்தளத்தில் இருந்து காணமால் போனது. ஜியோவின் இந்த நடவடிக்கையை பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாக புரிகிறது - ஜியோவால் "கவர்ச்சிகரமான" திட்டங்களை நீண்ட காலத்திற்கு வழங்க முடியாது, ஒவ்வொரு கட்டத்திலும் மிகவும் அமைதியாக விலை உயர்வு நடத்திக்கொண்டே தான் இருக்கும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Silently Increased The Price of Its Basic Entry Level Postpaid Recharge Plan To Rs 299
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X