Home
News

எலான் மஸ்கிற்கு செக் வைத்த அம்பானி.. இந்தியா என் கோட்டைடா.. Jio சாட்டிலைட் இந்தியா மேல் கொடிகட்டி பறக்க ரெடி..

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தனது முதல் செயற்கைக்கோள் இணைய சேவையை (Satellite Internet Service) இந்தியாவில் கொண்டு வர உள்ளது. எலான் மஸ்க் தனது சொந்த சாட்டிலைட் இன்டர்நெட் சேவையான ஸ்டார்லிங்க் (Starlink) சேவையை இந்தியாவில் துவங்க முயற்சி செய்து வரும் வேளையில், முகேஷ் அம்பானி (Mukesh Ambani) அவரின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் (Jio Platforms) வழியாக புதிய சாட்டிலைட் இணைய சேவையை துவங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்.

உலக பணக்காரர் ஆன எலான் மஸ்க்கின் சொந்த நிறுவனமான ஸ்பேக்ஸ்எக்ஸ் (SpaceX) கீழ் இயங்கும் ஸ்டார்லிங்க் (Starlink) என்ற துணை நிறுவனத்தின் மூலம் 75 நாடுகளில் இப்போது சாட்டிலைட் இன்டர்நெட் சேவையை எலான் மஸ்க் வழங்கி வருகிறார். இந்த ஸ்டார்லிங்க் சாட்டிலைட் இன்டர்நெட் சேவையை (Starlink satellite internet service) பெரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் சேர்க்க எலான் மாஸ்க் நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார்.

எலான் மஸ்கிற்கு செக் வைத்த அம்பானி.. இந்தியா என் கோட்டைடா.. Jio ரெடி..

ஜியோ சாட்டிலைட் இன்டர்நெட் சேவைக்கு இந்தியா ஒப்புதல் (India approves Jio satellite internet service):

இருப்பினும், சில பல காரணங்களால் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் சேவைக்கு இந்திய அரசாங்கம் சிவப்பு கொடி (Red flag) காண்பித்து, ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து வருகிறது. இதற்கிடையில், இந்தியாவின் டாப் மோஸ்ட் பணக்காரர் ஆன முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் (Jio Platforms) இந்தியாவில் ஸ்டார்லிங்க் போன்ற செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், முகேஷ் அம்பானியின் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் கீழ் அறிமுகம் செய்யப்படவிருக்கும் சாட்டிலைட் இன்டர்நெட் சேவைக்கு, இந்திய ஒழுங்குமுறை அதிகாரிகளால் இப்போது பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது (Green flag) என்று செய்திகள் வெளியாகியுள்ளது. என்ன தான் எலான் மஸ்க் உலக பணக்காரராக இருந்தாலும், இந்தியா தனது கோட்டை என்பதை முகேஷ் அம்பானி (Mukesh Ambani) இப்போது தனது சாட்டிலைட் இன்டர்நெட் சேவைக்கு ஒப்புதல் பெற்று நிரூபித்திருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, லக்சம்பேர்க்கின் எஸ்இஎஸ் (Luxembourg's SES) உடன் இணைந்து ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ், இந்தியாவிற்குள் தனது சொந்த செயற்கைக்கோள்களை இயக்குவதற்கு தேவையான ஒழுங்குமுறை அனுமதியைப் இந்தியாவின் விண்வெளி ஆணையத்திடம் (India's space authority) இருந்து பெற்றுள்ளது. ஆர்பிட் கனெக்ட் இந்தியா (Orbit Connect India), ஜியோ (Jio) மற்றும் எஸ்இஎஸ் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாக இத்திட்டம் செயல்படுகிறது.

எலான் மஸ்கிற்கு செக் வைத்த அம்பானி.. விரைவில் இந்தியா மேல் Jio சாட்டிலைட் பறக்கும்:

செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மூலம் ஜிகாபிட் ஃபைபர் இணையத்தை (gigabit fiber internet) வழங்குவதில் கவனம் ஜியோ நிறுவனம் இப்போது கவனம் செலுத்துகிறது. இது நாடு முழுவதும் அதிவேக இணைய அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளை (satellite communication services) அறிமுகப்படுத்த பல உலக ஜாம்பவான் நிறுவனங்கள் போட்டியிட்டுக்கொண்டிருக்கின்றன.

குறிப்பாக, அமேசான் (Amazon) மற்றும் எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் (Starlink) போன்ற உலகளாவிய ஜாம்பவான்கள் ஒப்புதலை பெற போராடி வரும் தீவிரமான போட்டியின் மத்தியில், முகேஷ் அம்பானி அசால்ட்டாக சாட்டிலைட் இன்டர்நெட் சேவைக்கான ஆரம்ப ஒப்புதலை பெற்றிருக்கிறார். இதன் மூலம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் முதல் சாட்டிலைட் இன்டர்நெட் சேவையாக ஜியோ இருக்குமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஒப்புதல் எலான் மஸ்கின் திட்டத்திற்கு அம்பானி செக் வைத்தது போல் தெரிகிறது.

இருப்பினும், இந்தியாவிற்குள் சாட்டிலைட் இன்டர்நெட் சேவையின் செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு முன், நாட்டின் தொலைத்தொடர்புத் துறையின் (Department of Telecommunications) கூடுதல் ஒப்புதல்களை ஜியோ நிறுவனம் பெறவேண்டியதுள்ளது. ஆர்பிட் கனெக்ட் இந்தியா நிறுவனம், இந்திய வான்வெளியில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த அனுமதி பெற்றிருந்தாலும், அதன் சேவைகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்க தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து இன்னும் அனுமதி பெற வேண்டியதுள்ளது. இதற்கான அனுமதி விரைவில் பெறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio Satellite Internet Service In India Gets Approval Mukesh Ambani Plan Sends Elon Musk's Starlink Connection Behind
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X