அமேசான் பிரைம் சந்தா வழங்கும் ஜியோவின் ஒரே ஒரு ப்ரீபெய்ட் திட்டம்.. என்ன விலை? என்னென்ன நன்மைகள்?
ஜியோ (jio) நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. அதுவும் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் அதிக சலுகைகள் வழங்கும் திட்டங்களை வைத்துள்ளது. எனவே தான் பலர் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல ஜியோ நிறுவனம் அமேசான் பிரைம் சந்தா வழங்கும் ஒரே ஒரு திட்டத்தை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 1029 prepaid recharge plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் (Amazon Prime lite) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். பின்பு இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை வழங்கப்படுகிறது. இதுதவிர பல சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.
அதன்படி ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேடடா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம் அமேசான் பிரைம், அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா நன்மையை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். ஒருவேளை அமேசான் பிரைம் சந்தா வேண்டாம் நெட்பிளிக்ஸ் (Netflix) சந்தா வேண்டும் என்று நினைக்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.
ஜியோ நிறுவனத்தின் ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 prepaid plan) நெட்பிளிக்ஸ் (Netflix) மொபைல் சந்தாவை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு சிறப்பான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஜியோடிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது ஜியோவின் ரூ.1299 திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.


Click it and Unblock the Notifications








