Jio-வின் புதிய Wrok from Home திட்டத்தின் கீழ் கிடைக்கும் 120 ஜிபி டேட்டா நன்மை!

|

ஜியோ நிறுவனம் தற்பொழுது வீட்டிலிருந்து வேலை பார்க்கும் தனது வாடிக்கையாளர்களுக்காகப் புதிதாக Wrok from Home என்ற புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை ரூ.251 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது.

புதிய work from home திட்டம்

புதிய work from home திட்டம்

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும்படி உத்தரவிடப்பட்டு 144 தடை சட்டமும் தமிழகம் முழுதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் விழைவாக ஜியோ நிறுவனம் தற்பொழுது இந்த புதிய work from home திட்டத்தை இந்தியாவில் தனது பயனர்களுக்காகஅறிமுகம் செய்துள்ளது.

டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கும்

டேட்டா நன்மை மட்டுமே கிடைக்கும்

இந்த புதிய ரூ.251 ‘work from home' திட்டம் வீட்டிலிருந்து வேலை பார்க்கும் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த work from home ப்ரீபெய்ட் திட்டத்தில் பயனர்களுக்கு ஜியோவின் டேட்டா நன்மைகள் மட்டும் தான் வழங்கப்படுகிறது. இத்திட்டம் கூடுதல் அழைப்பு சலுகை மற்றும் எஸ்.எம்.எஸ் சலுகை போன்று எதுவும் இந்த திட்டத்தில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

251 ரூபாயில் ஒட்டுமொத்தமாக 120 ஜிபி டேட்டா

251 ரூபாயில் ஒட்டுமொத்தமாக 120 ஜிபி டேட்டா

இந்த ரூ.251 ஜியோவின் திட்டத்தின் கீழ் பயனர்களுக்குத் தினமும் 2 ஜிபி டேட்டா என்று ஒட்டுமொத்தமாக 120 ஜிபி என்று தொடர்ச்சியாகத் தடையின்றி 51 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. டேட்டா வரம்பைப் பயனர்கள் எட்டியதும், பயனர்களுக்கு டேட்டா நன்மையின் வேகம் குறைக்கப்பட்டு 64 kbps என்ற வேகத்தில் வழங்கப்படுகிறது. இந்த ரூ.251 திட்டம் டேட்டா பூஸ்டர் திட்டமாக மட்டுமே பயன்படுகிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

4ஜி டேட்டா வவுச்சர்கள் பிரிவின் கீழ் இந்த திட்டம்

4ஜி டேட்டா வவுச்சர்கள் பிரிவின் கீழ் இந்த திட்டம்

ஜியோ பயனர்கள் இந்த ரூ.251 ரீசார்ஜ் திட்டத்தை மைஜியோ பயன்பாட்டிற்குச் சென்று ரீசார்ஜ் செய்துகொள்ளலாம் அல்லது ஜியோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று work from home என்ற இந்த திட்டத்தை ஜியோவின் 4ஜி டேட்டா வவுச்சர்கள் பிரிவின் கீழிருந்து தேர்வு செய்துகொள்ளலாம். பிஎஸ்என்எல் மற்றும் ஆக்ட் ஃபைபர்நெட் அதன் பயனர்களுக்கு work from home திட்டத்தை அறிமுகம் செய்ததும் ஜியோ இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

SBI Quick Missed Call Banking இன்டர்நெட் இல்லாமல் பேலன்ஸ் செக் செய்யலாம்! எப்படி தெரியுமா?SBI Quick Missed Call Banking இன்டர்நெட் இல்லாமல் பேலன்ஸ் செக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

4 ஜி டேட்டா வவுச்சர்

4 ஜி டேட்டா வவுச்சர்

அதேபோல் ஜியோ நிறுவனம் கடந்த வாரம் தனது 4 ஜி டேட்டா வவுச்சர்களில் சில மாற்றங்களைச் செய்து திருத்தியுள்ளது. ஜியோவின் 4 ஜி டேட்டா வவுச்சர்கள் இப்பொழுது ரூ.11 இல் தொடங்குகின்றன, இது 800 எம்பி டேட்டா மற்றும் 75 நிமிட ஜியோ அல்லாத அழைப்புகளுடன் வருகிறது. இரண்டாவது 4 ஜி டேட்டா வவுச்சர் ரூ.21 என்ற விலையில், 2 ஜிபி டேட்டா மற்றும் 200 நிமிட ஜியோ அல்லாத அழைப்பு நிமிடங்களுடன் வருகிறது.

ஏர்டெல் சேவையில் ஏதேனும் பிரச்சனையா? இதை பயன்படுத்துங்கள்.! ஏர்டெல் வேண்டுகோள்.!ஏர்டெல் சேவையில் ஏதேனும் பிரச்சனையா? இதை பயன்படுத்துங்கள்.! ஏர்டெல் வேண்டுகோள்.!

12 ஜிபி டேட்டா கிடைக்கும் வவுச்சர்

12 ஜிபி டேட்டா கிடைக்கும் வவுச்சர்

அடுத்தபடியாக ஜியோவின் ரூ.51 விலையில் கிடைக்கும் 4 ஜி டேட்டா வவுச்சரின் கீழ் பயனர்களுக்கு இது 6 ஜிபி டேட்டா மற்றும் 500 நிமிட ஜியோ அல்லாத அழைப்பு நிமிடங்களை வழங்குகிறது. இறுதியாக ஜியோவின் அதிகவிலை கொண்ட டேட்டா வவுச்சராக ரூ.101 திட்டம் இருக்கிறது, இத்திட்டத்தின் கீழ் 12 ஜிபி டேட்டாவும், 1000 நிமிட ஜியோ அல்லாத அழைப்பு நிமிடங்களும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Jios New Work From Home Prepaid Plan Amid The Coronavirus Outbreak : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X