Home
News

ரூ.219 முதல் எக்கசக்க சலுகைகளுடன் கிடைக்கும் Jio-வின் கிரிக்கெட் திட்டங்கள்: வாங்க பார்ப்போம்.!

இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஐபிஎல் தொடர் வரும் 31ம் தேதி குஜராத்தில் தொடங்க உள்ளது. 31ம் தேதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோத உள்ளன. இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக ஜியோ நிறுவனம் சில அசத்தலான திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது.

குறிப்பாக ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களை விட அசத்தலான திட்டங்களை வழங்குகிறது. மேலும் இப்போது ஜியோ நிறுவனம் கொண்டுவந்துள்ள புதிய கிரிக்கெட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இப்போது ஜியோ நிறுவனத்தின் புதிய கிரிக்கெட் திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரூ.219 முதல் கிடைக்கும் Jio-வின் கிரிக்கெட் திட்டங்கள்!

ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். இதுதவிர கூடுதலாக 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம். எனவே ஜியோ ரூ.219 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 44ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். மேலும் கூடுதலாக 6ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 90ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். மேலும் கூடுதலாக 40ஜிபி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோ ரூ.399 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 292ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் நன்மைகளும் இதில் உள்ளன. அதேபோல் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் உள்ளிட்ட ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகலை வழங்குகிறது இந்த திட்டம்.

ரூ.219 முதல் கிடைக்கும் Jio-வின் கிரிக்கெட் திட்டங்கள்!

ரூ.222 டேட்டா ஆட்-ஆன் பேக்
ஜியோ நிறுவனத்தின் ரூ.222 டேட்டா ஆட்-ஆன் பேக் ஆனது மொத்தமாக 50ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். அதேபோல் இது உங்களின் தற்போதைய ப்ரீபெய்ட் திட்டத்தின் செல்லுபடியுடன் செல்லுபடியாகும்.

ரூ.444 மற்றும் 667 டேட்டா ஆட்-ஆன் பேக்
ஜியோ நிறுவனத்தின் ரூ.444 டேட்டா ஆட்-ஆன் பேக் ஆனது மொத்தம் 100ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு இந்த திட்டம் 60 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. ஜியோவின் ரூ.667 டேட்டா ஆட்-ஆன் பேக் ஆனது மொத்தம் 150ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.219 முதல் கிடைக்கும் Jio-வின் கிரிக்கெட் திட்டங்கள்!

அதேபோல் ஜியோ நிறுவனம் நாட்டில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகம் செய்துவிட்டது. கூடிய விரைவில் இந்தியா முழுவதும் இந்நிறுவனம் 5ஜி சேவையைக் கொண்டுவரும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio's cricket plans starting from Rs.219 with more offers.! Know Full Details Here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X