Jio அட்டகாச திட்டம்: 84 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி., விலை இவ்வளவு தானா?

|

ரிலையன்ஸ் ஜியோ 84 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதோடு இந்த திட்டத்தில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது. அதுகுறித்து பார்க்கலாம்.

மிகப்பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ

மிகப்பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ

இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர் தளத்தை விரிவுபடுத்தும் மூலோபாயத்தைத் தொடர்கிறது. பிற நிறுவனங்கள் எட்டாதவகையிலான சலுகையோடு கூடிய திட்டத்தை நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. நிறுவனம் ஜனவரி மாதத்தில் 6.5 மில்லியன் புதிய பயனர்களைச் சேர்த்தது. தற்போது ஜியோ ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்கும் புதிய திட்டம் இதுவாகும்.

ரூ.999 திட்டத்தின் மூலம் கூடுதல் தரவு

ரூ.999 திட்டத்தின் மூலம் கூடுதல் தரவு

ஜியோ தனது ரூ.999 திட்டத்தின் மூலம் கூடுதல் தரவுகளை பல சலுகையோடு வழங்குகிறது. இந்த புதிய திட்டமானது 84 நாள் செல்லுபடியாகும். ஜியோ ஏற்கனவே 84-நாள் செல்லுபடியாகும் இரண்டு திட்டங்களை வழங்குகிறது, ஆனால் அந்தத் திட்டங்கள் புதிய திட்டத்தைப் போன்ற தரவை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்த ஒன்று. ஒரு நாளைக்கு மூன்று ஜிபி தரவை அதிவேகத்தில் வழங்குகிறது. இந்த திட்டம், வீட்டு வேலை மற்றும் மொபைல் ஸ்ட்ரீமிங் வீடியோவுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்

நீண்டகாலம் செல்லுபடியாகும் திட்டம்

நீண்டகாலம் செல்லுபடியாகும் திட்டம்

நீண்டகால செல்லுபடியாகும் மற்றும் விரைவான தரவை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக ரிலையன்ஸ் ஜியோ ரூ .999 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ .999-க்கு கிடைக்கும் இந்த திட்டம், பயனர்களுக்கு ஒவ்வொரு நாளும் 84 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. தரவு வரம்பை அடைந்ததும், இணையத்தை 64 கி.பி.பி.எஸ் என்ற வேகத்தில் பயன்படுத்தலாம்.

பயனர்கள் வரம்பற்ற அழைப்புகள்

பயனர்கள் வரம்பற்ற அழைப்புகள்

புதிய திட்டத்தின் கீழ், பயனர்கள் வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம். இந்த வரம்பற்ற அழைப்புகளானது பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு 3000 நிமிட இலவச அழைப்புகளை வழங்குகிறது. அதேபோல் இந்த திட்டத்தில் ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா பயன்பாடுகளுக்கான இலவச சந்தாக்களை வழங்குகிறது.

Q1 2020: அதிகம் விற்பனையான மொபைல்., டாப் 6 இடத்தில் Samsung, xiaomi- உங்க போன் இதில் இருக்கா?Q1 2020: அதிகம் விற்பனையான மொபைல்., டாப் 6 இடத்தில் Samsung, xiaomi- உங்க போன் இதில் இருக்கா?

84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம்

84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம்

இந்த 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தோடு ஜியோ பயனர்களுக்கு மேலும் இரண்டு 84 நாள் செல்லுபடியாகும் திட்டங்களையும் வழங்குகிறது. ரூ .555 மற்றும் ரூ .599 திட்டங்களில் 84 நாட்கள் செல்லுபடியை வழங்குகிறது. ரூ.555 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் 1.5 ஜிபி அதிவேக தரவு மற்றும் வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ அழைப்பு உள்ளது. இந்தத் திட்டம் மற்ற நெட்வொர்க்குகளுக்கு 3,000 நிமிட இலவச அழைப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.

தினசரி 2 ஜிபி ஃபாஸ்ட் டேட்டா

தினசரி 2 ஜிபி ஃபாஸ்ட் டேட்டா

வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு நாளும் 2 ஜிபி ஃபாஸ்ட் டேட்டாவை 84 நாட்களுக்கு ரூ .599 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்குகிறது. கூடுதலாக, மற்ற நெட்வொர்க்குகளுக்கு அழைப்புகளை மேற்கொள்ள இந்தத் திட்டத்தில் ஒரு நாளைக்கு 3,000 நிமிட அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்களை வழங்கிறது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்கள் ஜியோ எண்ணுக்கு வரம்பற்ற அழைப்புகளை மேற்கொள்ளலாம். 84 நாட்கள் செல்லுபடியாகும் பிற திட்டங்களைப் போலவே, ஜியோ டிவி மற்றும் ஜியோ சினிமா போன்ற சந்தாவை வழங்குகிறது.

ஜியோவின் புதிய வருடாந்திர திட்டம்

ஜியோவின் புதிய வருடாந்திர திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ தனது புதிய வருடாந்திர திட்டத்தை சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தில், ரூ .2399 விலையில், பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த வருடாந்திர திட்டத்துடன், நிறுவனம் மூன்று தரவு சேர்க்கை பொதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிவிக்கப்பட்ட வருடாந்திர திட்டம் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்களை விட 33 சதவீதம் அதிக மதிப்பு கூட்டப்பட்டுள்ளது.

source: themobileindian.com

Best Mobiles in India

English summary
Jio's 3GB data per day packs: new prepaid plan of Rs 999 for its customers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X