முழுசா 98 நாள்.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. இந்த Jio பிளான் தான் பெஸ்ட்.. என்ன விலை?
ஜியோ (Jio) நிறுவனம் கடந்த மாதம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது. இதனால் பல வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சிம் கார்டை வாங்க தொடங்கியது நாம் செய்திகளில் பார்த்திருப்போம். இந்நிலையில் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க மீண்டும் சலுகைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதாவது சமீபத்தில் கூட ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது ஜியோ நிறுவனம்.
இதுதவிர சமீபத்தில் ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,599 வருடாந்திர மொபைல் திட்டம் இலவசமாகக் கிடைக்கும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் 98 நாள் வேலிடிட்டி மற்றும் அதிக சலுகைகளை வழங்கும் ஒரு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இப்போது அந்த திட்டம் குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 949 prepaid plan) தான் 98 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.
அதேபோல் ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த திட்டம்.
குறிப்பாக ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் மட்டும் தான் இல்லை. ஒருவேளை உங்களுக்கு ஓடிடி நன்மைகளுடன் இதுபோன்ற சலுகைகள் தேவைப்பட்டால் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது. இப்போது ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்(Disney Plus Hotstar) வழங்குகிறது ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம்.
இதுதவிர அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்கப்படுகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud போன்ற சலுகைகளை இந்த ஜியோ திட்டம் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோ ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 198 Prepaid Plan)தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.198 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 28ஜிபி டேட்டா நன்மை உள்ளது. இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளது.
அதன்படி ஜியோவின் ரூ.198 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) வழங்குகிறது. பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோகிளவுட் (JioCloud), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோடிவி (JioTV) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த திட்டம். குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








