பிஎஸ்என்எல்-க்கு படைபெயடுக்கும் மக்கள்.. மறுபடியும் சலுகைகள் வழங்கத் தொடங்கிய Jio.. எந்த திட்டத்தில் தெரியுமா?
ஜியோ (Jio) நிறுவனம் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது. அதாவது பல்வேறு மக்கள் தற்போது பிஎஸ்என்எல் (BSNL) சிம் வாங்கத் தொடங்குவதால் ஜியோ நிறுவனம் மீண்டும் சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளது. மேலும் இப்போது ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid recharge plan) ஆனது முன்பு 84 நாட்கள் வேலிடிட்டி தான் வழங்கி வந்தது. ஆனால் தற்போது இந்த திட்டத்தின் வேலிடிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது இப்போது ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 98 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதாவது 14 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

குறிப்பாக ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும். ஆனால் இந்த திட்டத்தில் ஓடிடி நன்மைகள் வழங்கப்படவில்லை. குறிப்பாக வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.
ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் கூட இதில் உள்ளது. குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை உங்களுக்கு ஓடிடி நன்மை தேவைப்பட்டால் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.
ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 prepaid recharge plan) ஆனது மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் (Disney Plus Hotstar) சந்தா வழங்குகிறது. எனவே அதிகமாக ஓடிடி தளத்தில் படம் பார்க்கும் ஜியோ பயனர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது மிகவும்
நல்லது.
குறிப்பாக ஜியோவின் ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. இதுதவிர பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்.

அதாவது அன்லிமிடெட் அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.
அதேபோல் ஜியோ நிறுவனத்திற்குப் போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனமும் மலிவு விலையில் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனம் நாட்டில் சில முக்கிய இடங்களில் 4ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது. கூடிய விரைவில் நாடு முழுவதும் 4ஜி சேவையை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது பிஎஸ்என்எல் நிறுவனம்.


Click it and Unblock the Notifications








