98 நாட்களுக்கு ஒரே ஒரு ரீசார்ஜ்.. ஓடிடி.. தினசரி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அள்ளி கொடுக்கும் Jio..
ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டியா அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் 98 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ஒரு அசத்தலான ப்ரீபெய்ட திட்டத்தை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். ஆகவே நீங்கள் ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
மூன்று மாதங்களுக்கு நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
குறிப்பாக கூகுள் ஜெமினி ப்ரோ, ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக அதிக நாட்கள் வேலிடிட்டி, ஓடிடி, மற்றும் தினசரி டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்வது நல்லது. ஒருவேளை நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி சந்தா எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்வது நல்லது.
ஜியோவின் ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1299 prepaid plan) நெட்பிளிக்ஸ் (Netflix) மொபைல் சந்தாவை வழங்குகிறது. 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். ஆகவே ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 168ஜிபி டேட்டா கிடைக்கும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.1299 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கிறது. இதுதவிர பல்வேறு சிறப்பான சலுகைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
கூகுள் ஜெமினி ப்ரோ,ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது ஜியோவின் ரூ.1299 திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.


Click it and Unblock the Notifications








