ஒரே ரீசார்ஜ்.. 3 மாதங்களுக்கு கவலை இருக்காது.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள். அள்ளி தரும் ஜியோ..
ஜியோ (Jio) நிறுவனம் வோடபோன் ஐடியா, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது. அதேபோல் தற்போது ஜியோவின் ஒரு மாதம் வேலிடிட்டி தரும் திட்டங்களை விட மூன்று மாதம் வேலிடிட்டி தரும் திட்டங்களில் தான் அதிக பயனர்கள் ரீசார்ஜ் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
அதாவது ஏர்டெல் நிறுவனம் மூன்று மாதம் வேலிடிட்டி தரும் ரூ.929 திட்டத்தை வைத்துள்ளது, ஆனால் அதில் கம்மி டேட்டா தான் வழங்கப்படுகிறது. அதேசமயம் ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது, இதில் சற்று அதிகமான டேட்டா நன்மை கிடைக்கிறது. இப்போது ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா முடிந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இதில் உள்ளது.
அதாவது ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். ஒருவேளை இதேபோன்ற நன்மைகளுடன் ஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா எதிர்பார்க்கும் பயனர்கள் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.
ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே இந்த நீங்கள் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா முடிந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

மூன்று மாதங்களுக்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்(Disney Plus Hotstar) வழங்குகிறது ஜியோ ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம். எனவே இந்த திட்டம் மூலம் புதிய தமிழ் படங்களை எளிதாக பார்க்க முடியும். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது.
குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற சலுகைகளை ஜியோவின் ரூ.949 ப்ரீபெய்ட் திட்டம் வழங்குகிறது. குறிப்பாக பட்ஜெட் விலையில் ஓடிடி நன்மைகளுடன் அதிக அதிக டேட்டா எதிர்பார்க்கும் பயனர்கள் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
photo credit: Wikipedia


Click it and Unblock the Notifications