ஒரே Jio ரீசார்ஜ்.. 98 நாட்கள் வேலிடிட்டி.. 196ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி!
ஜியோ (Jio) ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு மூன்று மாதங்களுக்கு மேல் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Call), தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா, கிளவுட் ஸ்டோரேஜ், ஜெமினி ப்ரோ போன்ற ஏகப்பட்ட கூடுதல் சலுகைகள் வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம்.
ஜியோ நிறுவனத்தில் 90 நாட்கள் மற்றும் 98 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் 98 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் கூடுதல் சலுகைகள் கிடைக்கின்றன. ரூ.1,000 விலைக்குள் பெஸ்ட் திட்டத்தை தேர்ந்தெடுக்க விரும்பினால், இது பெஸ்ட் ஆப்ஷனாக இருக்கும். முதலில் சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ. 999 ப்ரீபெய்ட் திட்ட ஆஃபர்கள் (Jio Rs 999 Prepaid Plan Offers): அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) & ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. 98 நாட்கள் வேலிடிட்டி முழுவதும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 196 ஜிபி டேட்டா கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த 2 ஜிபி டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த 4ஜி டேட்டா போக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. ஆகவே, டேட்டாவை பற்றி எந்த கவலையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடையாது.
தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. இதுவரையில் பார்த்த சலுகைகள் வழக்கமாக கிடைக்கின்றன. கூடுதலாக ஜியோ டிவி (Jio TV) சலுகையை கொடுத்து உள்ளது. இனிமேல் தான் கூடுதல் சலுகைகளே ஆரம்பிக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் மொபைல் & டிவி சந்தா (JioHotstar Mobile & TV) சந்தா கிடைக்கிறது.
இந்த சந்தாவானது 3 மாதங்களுக்கு கிடைக்கும். ஆகவே, திட்டத்தின் வேலிடிட்டிக்கு முன்பாகவே ஓடிடி சந்தா முடிந்துவிடும். இதற்கு அடுத்து 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு உள்ளது. இதை ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) வழியாக கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இறுதியாக கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கிடைக்கிறது.
ஆனால், இந்த சந்தாவானது 18 மாதங்களுக்கு கிடைக்கிறது. ரூ.35,100 மதிப்பிலான சந்தாவாக இது இருப்பதால், 2000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) கிடைக்கிறது. நானோ பனானா (Nano Banana) சலுகையும் இந்த சந்தாவில் கிடைக்கும்.ஒருவேளை 90 நாட்களுக்கு வேலிடிட்டி போதுமானால், ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஜியோ ரூ. 899 ப்ரீபெய்ட் திட்ட ஆஃபர்கள் (Jio Rs 899 Prepaid Plan Offers): முந்தைய திட்டத்தைவிட மலிவான விலைக்கு கிடைப்பதால், வேலிடிட்டி 90 நாட்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த நாட்களில் தினசரிக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைத்து உள்ளது.
அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாக இருக்கின்றன. ஜியோஹாட்ஸ்டார் சந்தா 3 மாதங்களுக்கு கிடைக்கும். ஜெமினி ப்ரோ சந்தா 18 மாதங்களுக்கு கிடைக்கும். ஜியோ ஏஐ கிளவுட் சலுகையில் 50 ஜிபிக்கான ஸ்டோரேஜ் கிடைக்கும். ஆகவே, வேலிடிட்டி மட்டுமே இந்த திட்டங்களுக்கு வித்தியாசமாக உள்ளது.


Click it and Unblock the Notifications








