கம்மி பட்ஜெட்ல ஒரே Jio ரீசார்ஜ்.. 98 நாட்கள் வேலிடிட்டி.. OTT.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..
ஜியோ (Jio) நிறுவனம் இப்போதும் பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளைத் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்குகிறது. எனவே தான் பலர் ஜியோ திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். அதேபோல் இந்தியாவில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்துடன் ஜியோ இணைந்து அதிவேக செயற்கைக்கோள் இணையதள சேவை வழங்க உள்ளது.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் பட்ஜெட் விலையில் 98 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டத்தின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 98 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா முடிந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.
மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இதில் உள்ளது.
அதாவது 90 நாட்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார்(JioHotstar) சந்தா இந்த திட்டத்தில் கிடைக்கிறது. மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். ஒருவேளை அமேசான் பிரைம் சந்தா எதிர்பார்க்கும் பயனர்கள் ஜியோவின் ரூ.1029 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வது நல்லது.
ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 1029 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோ நிறுவனத்தின் ரூ.1029 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க.
84 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ லைட் (Amazon Prime Lite) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையைப் பயன்படுத்தலாம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதன்படி ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும். மேலும் ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் ( JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக இந்த மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.


Click it and Unblock the Notifications








