Home
News

Jio SIM வச்சிருக்கீங்களா? முழுசா 98 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 196 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio) நிறுவனத்தின் ப்ரீபெய்ட் சிம் கார்டை வைத்து இருக்கும் கஸ்டமர்கள் மூன்று மாதங்களுக்கு மேல் டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா மற்றும் ஏஐ சந்தாவை பெற வேண்டுமானால், இப்போது பார்க்க இருக்கும் திட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

28 நாட்கள் வேலிடிட்டி, 56 நாட்கள் வேலிடிட்டி, 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களுக்கு பதிலாக 100 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும் திட்டத்தை தேடிக் கொண்டிருக்கும் ஜியோ ரூ.999 திட்டம் சரியாக இருக்கும். இதில் சரியாக 100 நாட்கள் வேலிடிட்டி கிடைக்காது. இருப்பினும், 98 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படும்.

Jio SIM வச்சிருக்கீங்களா? முழுசா 98 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட்!

ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 Prepaid Plan): இதுவொரு அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டமாக (Unlimited 5G Data Plan) இருக்கிறது. ஆகவே, 98 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இது 5ஜி ஸ்மார்ட்போனை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது.

4ஜி கஸ்டமர்களாக இருந்தால், தினசரிக்கு கிடைக்கும் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். மொத்தமாக 196 ஜிபி டேட்டாவை வேலிடிட்டி முழுவதும் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, டேட்டாவில் இந்த திட்டம் அதிகப்படியான சலுகையை கொடுத்துள்ளது.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் (100 SMS) கஸ்டமர்கள் அனுப்பி கொள்ளலாம். இந்த முக்கிய சலுகைகள் போக ஓடிடி சந்தா, ஏஐ சந்தா மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை இந்த திட்டத்தின் வழியாக பெற்று கொள்ளலாம். 3 மாதங்களுக்கு இந்த சந்தாவை பயன்படுத்தி கொள்ள முடியும். ஜியோ மொபைல் நம்பர் வழியாக மட்டுமே லாகின் செய்ய முடியும். இந்த திட்டத்துக்கு 98 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், முன்கூட்டியே ஓடிடி சந்தா காலாவதியாகிவிடும்.

மேலும், ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தாவை இந்த திட்டம் கொடுத்து இருக்கிறது. 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது. இதையும் ஜியோ மொபைல் நம்பரை வைத்து லாகின் செய்து மட்டுமே பெற்று கொள்ள முடியும். இதுபோக கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது.

இதில் 5000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். நானோ பனானா இமேஜ் ஜெனரேஷன் உள்ளிட்ட பிரீமியம் அணுகல்களை கொடுக்கும். இந்த திட்டத்துக்கு 98 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைத்தாலும், ஜெமினி ப்ரோ சந்தாவை 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இருப்பினும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா திட்டத்தை தொடர்ந்து ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இப்படி 5ஜி திட்டத்தை ஆக்டிவில் வைத்திருந்தால் மட்டுமே ஜெமினி ப்ரோ சந்தாவை 18 மாதங்கள் முழுவதும் பயன்படுத்த முடியும். ஆகவே, இந்த 98 நாட்கள் வேலிடிட்டி முடிந்தவுடன் உடனடியாக அடுத்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அது குறைந்தது ரூ.349 விலை கொண்ட 5ஜி திட்டமாக இருக்க வேண்டும். இதற்கு மலிவான திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், சந்தா கிடைக்காது.

Best Mobiles in India

English summary
Jio Rs 999 Prepaid Plan 98 Days Validity 196GB Data Unlimited Voice Calls JioHotstar Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X