1 பிளான்.. 4 சிம் கார்டு..மொத்த பேமிலிக்கும் ஏகபோக நன்மை.. Jio-வின் 'இந்த' திட்டம் பற்றி தெரியுமா உங்களுக்கு?

|

உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் மாதம்-மாதம் தொடர்ந்து தனித்தனியாக ரீசார்ஜ் செய்து டையர்டு ஆகிவிட்டீர்களா? கவலையை விடுங்க, இனி உங்களுக்குக் கஷ்டமே வேண்டாம். உங்களுடைய ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் இனி 1 ரீசார்ஜ் திட்டம் போதும். ஆம், சரியாகத் தான் படித்தீர்கள், உங்கள் குடும்பத்தில் உள்ள 4 நபர்களுக்காக நீங்கள் தனித்தனியாக ரீசார்ஜ் செய்கிறீர்கள் என்றால், உடனே ஜியோ (Jio)வின் இந்த திட்டத்திற்கு மாறுங்கள். இது தான் உங்களுக்கான டைம் சேவிங் திட்டம்.

1 பிளான் 4 சிம் கார்டா? ஜியோவின் JioPostPaid Plus Plans விபரம்

1 பிளான் 4 சிம் கார்டா? ஜியோவின் JioPostPaid Plus Plans விபரம்

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, உங்களுடைய இந்த சிக்கலுக்கான தீர்வை வெறும் ஒரே ஒரு ரீசார்ஜ் பிளான் மூலம் சரி செய்துவிடுகிறது. ஆம், ஜியோ நிறுவனம் இப்போது, நான்கு பேர் கொண்ட குடும்பத்தினருக்கு ஏற்ற ஒரு பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டத்தை கம்மி விலையில் வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த திட்டத்தின் பெயர் 'JioPostPaid Plus Plans' என்று அழைக்கப்படுகிறது.

இனி தனித்தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டாம்

இனி தனித்தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டாம்

ஜியோவின் போர்ட்ஃபோலியோவின் கீழ் மொத்தம் ஐந்து போஸ்ட்பெய்ட் திட்டங்கள் உள்ளது. இருப்பினும், மிகவும் மலிவான விலை கொண்ட திட்டம் என்ற அடிப்படையில் இந்த திட்டத்தை உங்களுக்குச் சிபாரிசு செய்கிறோம். உங்கள் குடும்பத்தில், உங்களுடன் சேர்த்து இன்னும் 3 நபர்கள் மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள் என்றால், இவர்களுக்கான ரீசார்ஜ் திட்டத்தை இனி நீங்கள் ஒவ்வொரு முறையும் தனித்தனியாக ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.

கம்மி விலையில் 4 சிம் இணைப்புகள்.. விலை என்ன தெரியுமா?

கம்மி விலையில் 4 சிம் இணைப்புகள்.. விலை என்ன தெரியுமா?

உங்கள் பிரச்சனைக்கு தீர்வாக ஜியோ அறிமுகம் செய்துள்ள திட்டம் தான் இந்த ரூ.999 விலை திட்டம். இந்த ரீசார்ஜ் பிளான் உங்கள் குடும்பம் அல்லது நண்பர்களுக்காக மூன்று கூடுதல் இணைப்புகளை வழங்குகிறது. அதாவது, ஒரே திட்டத்தின் கீழ், மொத்தமாக 4 சிம் கார்டுகளை வழங்குகிறது. இந்த கூடுதல் இணைப்புகளின் பலன்கள் எல்லாம் வெறும் ரூ.999 விலையில் உங்களுக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது. சரி, இந்த திட்டம் என்ன நன்மையை வழங்குகிறது என்று பார்க்கலாம்.

அடேங்கப்பா! Gmail இல் இப்படி 5 அம்சங்கள் இருக்கா? Send செய்த மெயிலை Undo செய்வது எப்படி?அடேங்கப்பா! Gmail இல் இப்படி 5 அம்சங்கள் இருக்கா? Send செய்த மெயிலை Undo செய்வது எப்படி?

ஜியோ ரூ. 999 போஸ்ட்பெய்ட் திட்ட நன்மைகள்

ஜியோ ரூ. 999 போஸ்ட்பெய்ட் திட்ட நன்மைகள்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டமானது 200ஜிபி டேட்டாவுடன் வருகிறது. அதைத் தொடர்ந்து, நுகர்வோர் பயன்படுத்தும் ஒவ்வொரு கூடுதல் 1 ஜிபி டேட்டாவிற்கும், அவர்கள் ரூ.10 என்ற விதத்தில் கட்டணம் செலுத்த வேண்டும். உதாரணத்திற்கு, வழங்கப்பட்ட டேட்டாவின் அளவிற்கு மேல், 2ஜிபி கூடுதல் டேட்டாவைப் பயன்படுத்தும் போது, உங்களுடைய மாதாந்திர பில்லில் ரூ.20 கூடுதலாகச் சேர்க்கப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

4 குடும்ப நபர்களுக்கு ஒரே திட்டத்தின் கீழ் சிம் கார்டு

4 குடும்ப நபர்களுக்கு ஒரே திட்டத்தின் கீழ் சிம் கார்டு

நாங்கள் முன்பே சொன்னது போல், ஜியோ இந்த திட்டத்துடன் மூன்று கூடுதல் சிம் கார்டுகளை வழங்குகிறது. இந்த சிம் கார்டுகளை முதன்மை இணைப்பு வைத்திருப்பவர் அவரின் குடும்பத்துடனோ அல்லது அவர் விரும்பும் நபர்களுடனோ மூன்று கூடுதல் சிம் கார்டை பகிர்ந்துகொள்ளலாம். ஜியோ வழங்கும் ரூ.999 போஸ்ட்பெய்ட் திட்டம், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற குரல் அழைப்பு நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தில் டேட்டா ரோல்ஓவர் நன்மையும் கிடைக்கிறது. இது 500ஜிபி வரை வழங்கப்படுகிறது.

ஏகபோக OTT நன்மை! இதுக்கு மேல உங்க குடும்பத்திற்கு என்ன வேண்டும்?

ஏகபோக OTT நன்மை! இதுக்கு மேல உங்க குடும்பத்திற்கு என்ன வேண்டும்?

இத்துடன் கூடுதல் நன்மைகளாக, அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ கிளவுட் போன்ற ஏராளமான நன்மைகளும் இந்த திட்டத்துடன் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கிறது. இந்த திட்டத்துடன் உங்களுக்குக் கிடைக்கும் OTT (ஓவர்-தி-டாப்) சந்தாக்கள் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதை மறக்காதீர்கள். OTT நன்மைகளை எதிர்பார்க்கும் குடும்பத்தினருக்கு இந்த திட்டம் ஏகபோக நன்மையைக் கொடுக்கிறது.

Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?

யாருக்கெல்லாம் இந்த திட்டம் பெஸ்ட்?

யாருக்கெல்லாம் இந்த திட்டம் பெஸ்ட்?

நீங்கள் முதல் முறையாக இணைப்பை வாங்குகிறீர்கள் என்றால், ஜியோவின் பிரைம் மெம்பர்ஷிப்பிற்கு ஜியோ ஒரு முறை கட்டணமாக ரூ.99 வசூலிக்கிறது. ஜியோவின் இந்த திட்டம் நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு ஏற்றது என்பதில் எந்த சந்தேகமுமில்லை. உண்மையைச் சொல்லப் போனால், சில சந்தர்ப்பங்களில் இது டேட்டா மீது மட்டும் மிகவும் சிக்கனமானதாகக் கூட இருக்கலாம். ஆனால், 1 குடும்பத்திற்கு 1 முறை ரீசார்ஜ் செய்யும் நன்மையை வழங்குவது சிறந்த அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Jio Rs 999 Postpaid Plan Offers Complete Benefit For Family Of Four Members

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X