அதான் அம்பானி.. இனி 3 மாசத்துக்கு மேல வருது.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!
ஜியோ (Jio) கஸ்டமர்கள் மூன்று மாதத்துக்கு மேல் ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டால், ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்துக்கு செல்லலாம். இதில் வாய்ஸ் கால்கள், டேட்டா, ஓடிடி சந்தா மற்றும் ஜெமினி ப்ரோ சந்தா போன்ற பல்வேறு சலுகைகள் கொடுக்கப்படும். இந்த திட்டத்தின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ.999 திட்ட விவரங்கள் (Jio Rs 999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 3 மாதங்களுக்கு மேல் 8 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதாவது, 98 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கிறது. மாதத்துக்கு 30 நாட்களை கணக்கில் எடுத்து கொண்டால், 90 நாட்களுக்கு மேல் 8 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நாட்கள் முழுவதும் டேட்டா மற்றும் வாய்ஸ் கால்களை அன்லிமிடெட் சலுகையில் பெற்று கொள்ளலாம். அதாவது, 98 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கும். இந்த டேட்டாவை போலவே அன்லிமிடெட் வாய்ஸ் கால்களையும் (Unlimited Voice Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.
ஆகவே, லோக்கல் (Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். இதுபோக 4ஜி கஸ்டமர்களாக இருந்தால், தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். ஆகவே, 98 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 196 ஜிபி டேட்டாவானது கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.
மேலும், 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டாவை 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த சலுகைகளை மூன்று மாதங்களுக்கு மேல் பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், ஓடிடி சந்தா அப்படி கிடையாது.
அதாவது, இந்த திட்டத்துக்கு ஜியோஹாஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவை 3 மாதங்கள் மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, திட்டத்துக்கு கிடைக்கும் 98 நாட்கள் வேலிடிட்டி முடிவதற்கு முன்பாகவே ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா முடிந்துவிடும். இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
இந்த ஓடிடி சந்தாவுடன் ஜியோ நிறுவனத்தின் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தாவும் கிடைக்கும். இதில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) கொடுக்கப்படும். ஜியோ கிளவுட் ஆப் வழியாக இந்த சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம். இதேபோல கூகுள் நிறுவனத்தின் ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவிலும் கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும்.
இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 18 மாதங்களுக்கு பயன்படுத்தும்படி ஜெமினி ப்ரோ சந்தா கிடைக்கிறது. இது பிரீமியம் சந்தாவாக இருப்பதால், 5000 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கிறது. மேலும், நானோ பனானா உள்ளிட்ட பிரீமியம் சலுகைகளையும் இந்த ஜெமினி ப்ரோ சந்தா கொடுக்கிறது. இதன் மதிப்பு ரூ.35,100ஆக இருக்கிறது.
ஆகவே, வழக்கமாக கிடைக்கும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா, ஏஐ சந்தா உள்ளிட்ட சலுகைகளையும் இந்த திட்டத்தில் பெற்று கொள்ளலாம். 3 மாதங்ளுக்கு மேல் வேலிடிட்டி வேண்டுமானால், இந்த திட்டத்தை கஸ்டமர்கள் ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம். டேட்டாவுக்கும் குறையிருக்காது.


Click it and Unblock the Notifications