Home
News

Jio போட்ட போடு.. 98 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. 5ஜி டேட்டா இருக்கு!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) கஸ்டமர்களுக்கு புதிதாக களமிறக்கப்பட்ட ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) 98 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, 2 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ சினிமா ஆப்பின் சந்தா வாரி வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேல் சலுகைகளை பெற்று கொள்ள முடிகிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை மூன்று மாதங்களுக்கும் மேல் பயன்படுத்த வேண்டுமானால், இதற்கு செல்லுங்கள்.

ஜியோ நிறுவனத்தின் கட்டண உயர்வுக்கு பிறகு பல்வேறு திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன. விலை மட்டுமல்லாமல், வேலிடிட்டி மற்றும் டேட்டாவில் மாறுதல்கள் இருந்தன. இதுபோன்ற திட்டங்களில் 3 மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி கொடுக்கும் திட்டங்களில் ரூ.999 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டம் பட்டையை கிளப்பி இருக்கிறது.

Jio போட்ட போடு.. 98 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்கள்.. 2 ஜிபி!

ஜியோ ரூ 999 திட்ட விவரங்கள் (Jio Rs 999 Plan Details): இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி டேட்டா (Daily Data), அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), எஸ்எம்எஸ் (SMS), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகைகள் மட்டுமல்லாமல், ஜியோவில் பிரத்யேகமாக கிடைக்கும் ஜியோ ஆப்களின் சந்தாவும் (Jio Apps Subscription) கிடைக்கிறது.

ஆகவே, இந்த திட்டத்தை பெறும் ஜியோ கஸ்டமர்களுக்கு நாள்தோறும் 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. 98 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தமாக 196 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ள முடியும். இதுபோக தினசரி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கிடைக்கிறது.

மேலும், ஜியோ 5ஜி டேட்டா கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. இந்த திட்டத்தில் கிடைக்கும் 2 ஜிபி டேட்டாவுக்கும் இதற்கும் தொடர்பில்லை. முற்றிலும் இலவசமாக இந்த 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. இதன் மற்ற சலுகைகளை பார்க்கையில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம்.

வாய்ஸ் கால்களுக்கும் எந்தவித குறையும கிடையாது. 98 நாட்களிலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) செய்து கொள்ள முடியும். இந்த முக்கிய சலுகைகளுக்கு பிறகு ஜியோவில் மட்டுமே கிடைக்கும், ஜியோசினிமா (JioCinema), ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களின் சந்தா கிடைக்கிறது.

இந்த சந்தாவில் பிரீமியம் சலுகைகளை எதிர்பார்க்க முடியாது. இதேபோல 84 நாட்களுக்கு மேல் வேலிடிட்டியுடன் இதைவிட மலிவான விலையில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட திட்டம் வேண்டுமானால், ரூ.899 விலையில் மற்றொரு ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்திலும் பெரும்பாலான சலுகைகள் பேக் செய்யப்பட்டுள்ளது.

ஜியோ ரூ 899 திட்ட விவரங்கள் (Jio Rs 899 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா சலுகைகள் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. ஏனென்றால், தினசரி டேட்டா, அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாலமல், கூடுதலாக 20 ஜிபி டேட்டா கொடுக்கப்படுகிறது. அதாவது, இந்த திட்டத்தில் 2 ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தி கொள்ளலாம்.

அதேபோல 5ஜி கிடைக்கும் இடங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தலாம். இந்த சலுகைகள் போக 20 ஜிபிக்கான டேட்டா வவுச்சர் கிடைக்கிறது. ஆகவே, 90 நாட்களுக்கு 180 ஜிபி டேட்டா மற்றும் 20 ஜிபி கூடுதல் டேட்டா என்று மொத்தமாக 200 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். மற்ற சலுகைகள் முந்தைய திட்டத்தை போலவே இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 999 Plan With 98 Days Validity Unlimited Voice Calls 2GB Daily Data Check Unlimited 5G Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X