Home
News

Jio போட்ட போடு.. 98 இல்லனா.. 200 இருக்கு.. காசு இல்லங்க, வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. அன்லிமிடெட் டேட்டா!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு 98 நாட்கள் மற்றும் 200 நாட்கள் என்று வித்தியாசமான வேலிடிட்டியில் கிடைக்கும் ப்ரீபெய்ட் திட்டங்களில் (Prepaid Plan) நம்ப முடியாத சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data), எஸ்எம்எஸ்கள் (SMS) தொடங்கி அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) இலவசமாக இந்த திட்டங்களில் கிடைக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் முழு விவரங்கள் மற்றும் விலை குறித்து இப்போது தெரிந்து கொள்வோம்.

ஜியோவில் 28 நாட்கள் அல்லது 56 நாட்கள் அல்லது 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் அதிகமாக இருக்கின்றன. ஆனால், 98 நாட்கள் மற்றும் 200 நாட்கள் வேலிடிட்டியில் 2 திட்டங்கள் மட்டுமே இருக்கின்றன. 98 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் ரூ 999 விலைக்கும் 200 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் ரூ 2025 விலைக்கும் கிடைக்கிறது.

Jio போட்ட போடு.. 98 இல்லனா.. 200 இருக்கு.. காசு இல்லங்க, வேலிடிட்டி!

ஜியோ ரூ 999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 Prepaid Plan): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு மூன்று மாதங்களுக்கும் மேல் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது. ஆகவே, 98 நாட்களுக்கு வேலிடிட்டி பெற்று கொள்ளலாம்.

இந்த 98 நாட்கள் முழுவதும் ஜியோ கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice) சலுகையும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகையும் கிடைக்கிறது. இந்த தினசரி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை (Post Data) பயன்படுத்தி கொள்ளலாம்.

அதேபோல 98 நாட்கள் முழுவதும் 5ஜி வெல்கம் சலுகையை பெறும் கஸ்டமர்களுக்கு இந்த தினசரி டேட்டா இல்லாமலேயே அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. இதில் ஜியோ சினிமா (Jio Cinema) சலுகை கிடையாது. இருப்பினும், ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகை கிடைக்கிறது.

ஜியோ ரூ 2025 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 2025 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, 2025ஆம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு ரூ.2025 விலைக்கு வந்தது. ஆனால், இப்போது வரையில் கஸ்டமர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. முந்தைய திட்டத்தைவிட டபுள் மடங்கு அதாவது 200 நாட்களுக்கு இந்த திட்டத்தில் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஆகவே, 6 மாதங்களுக்கு மேலும் அன்லிமிடெட் சலுகைகளை பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு முதலில் 200 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா இலவசமாக கொடுக்கப்படுகிறது. இதுபோக நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் உங்களுக்கு கிடைக்கிறது.

ஆகவே, 200 நாட்களுக்கு 500 ஜிபி 4ஜி டேட்டாவையும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் பெற்று கொள்ளலாம். இந்த டேட்டாவை போலவே அன்லிமிடெட் சலுகையில் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் சலுகைகளை பெற்று கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் முந்தைய திட்டத்தில் பார்த்த ஜியோ டிவி சலுகை வருகிறது.

இப்படி வித்தியாசமான வேலிடிட்டியில் பட்டையை கிளப்பும் சலுகைகளை ஜியோ கொடுக்கிறது. இரண்டு திட்டங்களிலும் செலவுக்கு ஏற்ப வேலிடிட்டி மாறுகிறது. ஆனால், ரூ 2025 திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா இல்லாமலேயே 500 ஜிபி 4ஜி டேட்டா கிடைக்கிறது. ஆகவே, 6 மாதங்களுக்கு மேல் ரீசார்ஜ் வேண்டுமானால், இதை தேர்வு செய்யலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 999 Plan With 98 Days Validity Rs 2025 Plan With 200 Days Validity Different Validity Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X