Home
News

ரூ.1,000 முடிச்சு விட்ட அம்பானி.. அறக்க பறக்க இந்த 98 நாட்கள் திட்டம் ரீசார்ஜ்.. வாய்ஸ் கால்கள்.. 2GB டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு கிட்டத்தட்ட 100 நாட்கள் வேலிடிட்டியுடன் கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்து கொள்ளும்படியான ஒரு ப்ரீபெய்ட் திட்டம் (Prepaid Plan) இருக்கிறது. இதில் கூடுதலாக டிஜிட்டல் கோல்டு மற்றும் ஓடிடி போன்ற சலுகைகள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ், ஓடிடி, கிளவுட் ஸ்டோரேஜ், ஜியோஹோம் போன்ற ஒட்டுமொத்த சலுகையையும் இந்த ஒரேவொரு திட்டத்தில் பெற்று கொள்ளலாம்.

ஜியோ ரூ 999 திட்ட விவரங்கள் (Jio Rs 999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு வழக்கமாக கிடைக்கும் சலுகைகளை பார்க்கையில், 98 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்கள் முழுவதும் 4ஜி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டாவை பெற்று கொள்ளலாம்.

ரூ.1,000 முடிச்சு விட்ட அம்பானி.. அறக்க பறக்க இந்த 98 நாட்கள் திட்டம்!

4ஜி டேட்டாவை பார்க்கையில், நாளொன்றுக்கு 2 ஜிபி கிடைக்கிறது. இதுபோக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. 98 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், மொத்தமாக 196 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, டேட்டாவுக்கு எந்த குறையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடையாது. வாய்ஸ் கால்களும் அப்படியே கிடைக்கிறது.

இந்த திட்டத்துக்கு கிடைக்கும் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் (Roaming Voice) சலுகைகள் கிடைக்கிறது. இதே வேலிடிட்டியில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகளை செய்து கொள்ளலாம். மேலும், ஜியோ டிவி (Jio TV) சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. இது வழக்கமாக கிடைக்கும் சலுகையாகும்.

இப்போது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜியோ ஸ்பெஷல் ஆஃபரின் (Jio Special Offer) கீழ் டிஜிட்டல் கோல்டு, ஜியோஹோம், ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் ஆகிய சலுகைகள் கூடுதலாக கிடைக்கின்றன. இதுவொரு லிமிடெட் ஃப்ரீயட் சலுகையாக இருக்கிறது. ஆகவே, பண்டிகை காலம் வரையில் கிடைக்கும். அதன்பிறகு திட்டத்தின் சலுகைகள் மட்டுமே கிடைக்கும்.

ஜியோ ஸ்பெஷல் ஆஃபர்: இந்த சலுகையில் முதலாவதாக டிஜிட்டல் கோல்டு சலுகை கிடைக்கிறது. ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலமாக டிஜிட்டலாக ஜியோ கோல்டு விற்பனை செய்யப்படுகிறது. இதை ரூ.10 முதல் கூட வாங்கி கொள்ளலாம். இந்த திட்டத்தை பெறும்பட்சத்தில், ஜியோ கோல்டு எவ்வளவு வாங்குகிறீர்களோ அதில் 2 சதவீத கோல்டு உங்களுக்கு இலவமாக கொடுக்கப்படும்.

இதை பெறுவதற்கு இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு 91-8010000524 என்னும் எண்ணுக்கு மிஸ்ட் கால்டு கொடுத்து, அந்த ஜியோ கோல்டை கிளைம் செய்து கொள்ளலாம். இதற்காக ஜியோ ஃபைனான்ஸ் (Jio Finance) ஆப் உங்களிடம் இருக்க வேண்டும். அதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். இது கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்ய கிடைக்கிறது.

இந்த சலுகைக்கு அடுத்து ஜியோஹோம் (JioHome) திட்டமானது 2 மாதங்களுக்கு இலவசமாக கிடைக்கிறது. இது டிரையல் செய்வதை போன்ற சலுகையாகும். ஆகவே, புதிய கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். 2 மாதங்களுக்கு பிறகு கட்டணம் செலுத்த வேண்டும். இதுபோக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படுகிறது. இதை 3 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும்.

இந்த திட்டத்துக்கு 98 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், ஓடிடி சந்தாவை முழுவதும் பயன்படுத்தலாம். இறுதியாக ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. இதில் 50 ஜிபிக்கான ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். இதை ஜியோ நம்பர் மூலம் லாகின் செய்யப்பட்ட ஜியோ கிளவுட் ஆப் மூலம் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சலுகைகளையே இந்த திட்டம் கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 999 Plan With 98 Days Validity 2GB Daily Data Unlimited Voice Calls Check Special Offer Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X