எங்கிட்ட மட்டும்தான்.. அம்பானி இறக்கிய 98 நாட்கள்.. யாரும் கொடுக்காத வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்!
பார்தி ஏர்டெல் (Bharti Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற போட்டி நிறுவனங்களில் கிடைக்காத வேலிடிட்டி திட்டங்களை ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மட்டுமே வைத்து இருக்கிறது. 98 நாட்கள், 90 நாட்கள், 72 நாட்கள், 70 நாட்கள் என்று திட்டங்களை வாரி வழங்கி இருக்கிறது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களின் (Jio Prepaid Plans) முழு சலுகை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். மொத்தம் 5 திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கின்றன.
ஜியோ ரூ 666 திட்ட விவரங்கள் (Jio Rs 666 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 105 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது. ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடையாது.

இந்த 70 நாட்கள் திட்டத்தில் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். அதேபோல வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கிடைக்கிறது. ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆப்களின் சந்தாவை பெற்று கொள்ள முடியும்.
ஜியோ ரூ 719 திட்ட விவரங்கள் (Jio Rs 719 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கும் 70 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். முந்தைய திட்டத்தில் கிடைத்த ஜியோசினிமா, ஜியோடிவி சந்தா கிடைக்கிறது.
ஜியோ ரூ 749 திட்ட விவரங்கள் (Jio Rs 749 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெ் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. அதேபோல நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும், 20 ஜிபிக்கான டேட்டா வவுச்சர் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் டேட்டா பற்றிய கவலை இருக்காது.
ஏனென்றால், மேற்கூறிய திட்டத்தின் டேட்டா சலுகை போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இதற்கு பொருந்தும். இது கிட்டத்தட்ட ஜியோ ரூ 899 மதிப்பிலான திட்டத்தின் சலுகைகளாகும். ஆனால், இந்த திட்டத்துக்கு 72 நாட்கள் வேலிடிட்டியை கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடியும்.
ஜியோ ரூ 899 திட்ட விவரங்கள் (Jio Rs 899 Plan Details): இந்த திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டியை பெற்று கொள்ளலாம். ஹீரோ 5ஜி திட்டமாக இது பிராண்ட் செய்யப்படுகிறது. ஏனென்றால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் 20 ஜிபி இலவச டேட்டாவை இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுபோக நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.
அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் பயன்படுத்தலாம். ஆகவே, இலவச டேட்டாவுடன் 90 நாட்களுக்கு மொத்தமாக 200 ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும், வழக்கமான அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகையை கொடுத்துள்ளது. 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ சினிமா, ஜியோடிவி போன்ற ஆப்களின் சலுகையை பெற்று கொள்ளலாம்.
ஜியோ ரூ 999 திட்ட விவரங்கள் (Jio Rs 999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 98 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை மற்றும் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் உள்ளது.


Click it and Unblock the Notifications








