Home
News

Jio பக்கம் கூட்டம் கூடுது.. தினசரி ரூ.10 போதும்.. 98 நாளுக்கு நோ-ரீசார்ஜ்.. அள்ளி கொடுக்கும் அம்பானி பிளான்..

முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நெட்வொர்க் (telecom network) நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. ஜியோ (Jio) நிறுவனம் தற்போது 98 நாட்களுக்கு செல்லுபடியாகும் (Jio 98 days validity plan) ஒரு அட்டகாசமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அடிக்கடி ரீசார்ஜ் செய்ய விருப்பமில்லாதவர்களின் சுமையை குறைக்கும் விதமாக இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது எந்த திட்டம்? இந்த திட்டத்தின் நன்மைகள் என்னென்ன? என்பது இங்கே.

கடந்த ஜூலை, 2024 ஆம் ஆண்டில் ஜியோ நிறுவனம் அமல்படுத்திய திடீர் விலை ஏற்றத்திற்கு (Jio price hike) பிறகு, ஜியோ நிறுவனம் பல லட்சம் வாடிக்கையாளர்களை இழந்தது. மலிவு விலை திட்டங்களை வழங்கி வந்த ஜியோவே விலை ஏற்றியதால், ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்களின் பெரும்பாலானோர் அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் பக்கம் மாற துவங்கினர்.

Jio பக்கம் கூட்டம் கூடுது.. தினசரி ரூ.10 போதும்.. 98 நாள் NO ரீசார்ஜ்

Jio பக்கம் கூட்டம் கூடுது.. தினசரி ரூ.10 போதும்.. 98 நாளுக்கு நோ-ரீசார்ஜ்:

இன்னும் வெகு சிலர் ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனத்தின் பக்கம் மாற துவங்கினர். இந்த போக்கு, ஜியோ நிறுவனத்திற்கு பெரிய இடியாக இறங்கியது. இதனால் பெரியளவு லாபத்தை ஜியோ நிறுவனம் இழக்க துவங்கியுள்ளது. தனது சேவையில் இருந்து விலகி சென்ற தனது பழைய வாடிக்கையாளர்களை ஈர்க்கும் விதமாக ஜியோ மீண்டும் தனது மலிவு விலை திட்டங்களை அறிமுகம் செய்ய துவங்கியுள்ளது.

அப்படி, மலிவு விலையில் நீண்ட நாள் விருப்பத்தை தேடும் வாடிக்கையார்களுக்காக ஜியோ தற்போது அறிமுகம் செய்துள்ள திட்டம் தான் ஜியோ ரூ. 999 திட்டம் (Jio Rs 999 Plan). நாம் முன்பே சொன்னது போல இந்த திட்டம், 98 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (98 days validity) உடன் வருகிறது. இந்த திட்டம் 98 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது.

ஜியோ ரூ. 999 திட்டம் (Jio Rs 999 Plan):

இந்த ஜியோ 999 பிளான் (Jio 999 Plan) தினசரி 2GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மையை (2GB high speed data) வழங்குகிறது. இந்த திட்டம் 4ஜி வட்டத்தில் 4ஜி டேட்டாவை (4G data) வழங்குகிறது. இதுதவிர, இந்த திட்டம் 5ஜி மொபைல் போனுடன் ஜியோ 5ஜி வட்டத்திற்குள் (unlimited 5G data) இருக்கும் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. இது தவிர இந்த திட்டம் ஜியோ வழங்கும் வழக்கமான இலவச நன்மைகளான ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema), ஜியோ கிளவுட் (Jio Cloud) போன்ற சேவைகளை அணுக அனுமதிக்கிறது. இத்துடன் கிடைக்கும் ஜியோ சினிமா சந்தா ஸ்டாண்டர்ட் சந்தா (Jio cinema standard subscription) என்பது கவனிக்கத்தக்கது.

ஜியோ சினிமா பிரீமியம் சந்தாவை (Jio cinema premium) பெற பயனர்கள் தனியாக செலவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோ வழங்கும் இந்த Jio Rs 999 Plan என்ற திட்டம் தினசரி வெறும் 10 ரூபாய் என்ற செலவில் உங்களுக்கு இந்த அனைத்து நன்மைகளையும் 98 நாட்களுக்கு தடையில்லாமல் வழங்குகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 999 Plan With 2GB Daily Data Unlimited Voice Calls 5G Data and 100 SMS Per Days For 98 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X