கேபிள் TV, DTH போச்சா.. 1000 டிவி சேனல்கள்.. 11 OTT சந்தா.. 150 எம்பிபிஎஸ் ஸ்பீடு.. Jio ஹோம் பாப்புலர் பிளான்!
ஜியோ (Jio) நிறுவனத்தின் ஹோம் திட்டத்தில் 1000 லைவ் டிவி சேனல்கள், 11 ஓடிடி ஆப்களின் சந்தா, 150 எம்பிபிஎஸ் வேக டேட்டா கிடைக்கிறது. கேபிள் டிவி, டிடிஎச் திட்டங்களுக்கு துளியும் சளிக்காத சலுகைகளை கொடுக்கிறது. இந்த ஜியோ ஹோம் திட்டம் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் விலையை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். மாதத்துக்கு ரூ.999 விலைக்கு கிடைத்தாலும், கூடுதலாக ஜிஎஸ்டி கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல புதிய கஸ்டமர்களாக இருந்தால், 3 மாதங்களுக்கு திட்டத்தை பெற வேண்டும். இப்படி பெறும் கஸ்டமர்களுக்கு, வை-பை ரூட்டர், ஆண்ட்ராய்டு பாக்ஸ் மற்றும் ரிமோட் போன்ற டிவைஸ்கள் கிடைக்கும்.

ஜியோ ரூ 999 திட்ட விவரங்கள் (Jio Rs 999 Plan Details): இந்த ஹோம் திட்டத்தில் 150 எம்பிபிஎஸ் வேகத்தில் டேட்டா கொடுக்கப்படுகிறது. இந்த வேகத்தில் ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக 1000 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். ஒரே நேரத்தில் பல்வேறு டிவைஸ்களை கனெக்ட் செய்து கொள்ளலாம்.
இந்த டேட்டாவுக்காகவே வை-பை ரூட்டர் கொடுக்கப்படுகிறது. அதேபோல வாய்ஸ் கால்களையும் இதில் செய்து கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு அடுத்து லைவ் டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த சலுகைகளுக்காகவே ஆண்ட்ராய்டு பாக்ஸ் கிடைக்கிறது. இதில் 1000 லைவ் டிவி சேனல்கள் கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.
இதில் எச்டி சேனல்களும் கிடைக்கும். அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony Liv), ஜீ5 (ZEE5), சன்நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi) மற்றும் டிஸ்கவரிபிளஸ் (Discovery+) கிடைக்கிறது. மேலும், டைம்ஸ்பிளே (TimesPlay), தாரங்பிளஸ் (TarangPlus), ஈராஸ் நவ் (Eros Now), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) ஆகிய ஆப்கள் கிடைக்கின்றன.
ஷீமாரூமீ (ShemarooMe), ஈடிவி வின் (ETV Win) ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டமானது ஜியோ ஃபைபர் சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டும் கிடைக்கிறது. ஆகவே, அந்த பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்கள் ஜியோ தளத்திலும், ஜியோ ஸ்டோர்களிலும் புக்கிங் செய்து கொள்ளலாம். இதைவிட மலிவாக மற்றொரு திட்டம் உள்ளது.
ஜியோ ரூ 599 திட்ட விவரங்கள் (Jio Rs 599 Plan Details): இந்த ஜியோஹோம் திட்டமானது மலிவான ஃபைபர் திட்டமாக இருக்கிறது. இதையும் குறைந்தபட்சம் 3 மாதங்களுக்கு மட்டுமே புதிய கஸ்டமர்கள் பெற்ற கொள்ள முடியும். அதேபோல ஜிஎஸ்டி கட்டணமும் செலுத்த வேண்டி இருக்கும். இந்த ஹோம் திட்டத்தில் 30 எம்பிபிஎஸ் வேகத்தில் மட்டுமே டேட்டா கிடைக்கும்.
அதேபோல 1000 ஜிபிக்கு மாதாந்திர வரம்பு மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படுகிறது. 1000 லைவ் டிவி சேனல்களின் சந்தா கிடைக்கிறது. இந்த திட்டத்தின் ஓடிடி சந்தாவை பார்க்கையில், ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, சன்நெக்ஸ்ட், ஹோய்சோய், டிஸ்கவரிபிளஸ், டைம்பிளே, தாரங்க் பிளஸ், ஈாரஸ் நவ் கிடைக்கிறது.
ஷீமாருமீ மற்றும் ஈடிவி வின் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, கேபிள் டிவி, டிடிஎச் சந்தாக்களுக்கு நிகரான லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், கூடுதலாக வை-பை டேட்டா, ஓடிடி ஆப்கள் மற்றும் வாய்ஸ் கால்கள் ஒரே திட்டத்தில் வேண்டுமானால், இந்த ஜியோ ஹோம் திட்டங்களுக்கு கஸ்டமர்கள் மாறலாம். ஜிஎஸ்டி இதில் கூடுதலாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








