Home
News

1 ரூபாய் வைத்து கோடியில் சம்பாதிக்கும் அம்பானி.. 1 ரூபாய்க்கு இவ்வளவு பவரா? Vodafone Idea-க்கு Jio வைத்த ஆப்பு

உங்களிடம் 1 ரூபாய் கொடுத்து, அதை லாபமாக மாற்ற சொன்னால் என்ன செய்வீர்கள்? 1 ரூபாய் வைத்து என்னங்க பெரிய லாபம் பார்க்க முடியும்? என்று நக்கலாக ஒரு கேள்வியைதானே எழுப்பியிருப்பீர்கள். ஆனால், அதே 1 ரூபாயை வைத்து ஒரு கோடி சம்பாதிப்பது எப்படி? என்று தெளிவாக ரூட் போட்டிருக்கிறார், ஜியோவின் (Jio) உரிமையாளர் முகேஷ் அம்பானி (Mukesh Ambani). அம்பானி ஐடியா எல்லாமே டாப்-ஆ இருக்கும் என்பதை நிரூபிக்கும் நிகழ்வு ஒன்று தற்போது நிகழ்ந்துள்ளது. 1 ரூபாய்க்கு இப்பவும் பவர் ஜாஸ்தி தான் என்று நிரூபித்திருக்கிறது Jio நிறுவனம்.

ஜியோ (Jio) நிறுவனம் மட்டுமின்றி, ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் எல்லாம் அவற்றின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை கண் மூடித்தனமாக உயர்த்தின. இதனால் கட்டுப்படைந்த மக்கள் தனியார் நிறுவனங்களுக்கு டாடா சொல்லிவிட்டு அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) பக்கம் மாறத் துவங்கிவிட்டனர். இப்போது பல லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த தனியார் நிறுவனங்கள் அதிக நன்மை கொண்ட புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.

1 ரூபாய் வைத்து கோடியில் சம்பாதிக்கும் அம்பானி.. ரூ.1 இவ்வளவு பவர்?

விஐ 998 திட்டம் (Vi 998 Pack):
இதில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில், தட்டி தடுமாறி தாக்குபிடித்துக் கொண்டிருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனம் சமீபத்தில் ரூ. 998 விலையில் ஒரு அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்தது. உண்மையிலேயே இந்த திட்டம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. விஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 998 திட்டத்தை (Vodafone Idea Rs 998 Plan) 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்கியது.

விஐ 998 திட்டம் (Vi 998 Pack) தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. இது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டத்துடன் வாடிக்கையாளர்கள் பிங்கே ஆள் நைட் (Binge All Night) மற்றும் வீகென்ட் டேட்டா ரோல்ஓவர் (Weekend data rollover) போன்ற நன்மைகளை சோனி லிவ் சந்தாவுடன் வழங்குகிறது.

தெரியாதவர்களுக்கு, Binge All Night சேவை மூலம் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6 மணி வரை இந்த திட்டத்தின் பயனர்கள் அன்லிமிடெட் டேட்டாவை பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல், திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை நீங்கள் பயன்படுத்தாத டேட்டாவை சனி மற்றும் ஞாயிறுக்கிழமையில் பயன்படுத்திக்கொள்ள Weekend data rollover சேவை அனுமதி வழங்குகிறது. ஹெவி டேட்டா யூசர்களுக்கு இது உண்மையில் சிறந்த தேர்வாக அமைகிறது.

ஜியோ ரூ 999 திட்டம் (Jio Rs 999 Plan):

இந்த திட்டத்தின் நன்மைகளை பார்த்து Vi பக்கம் செல்லும் வாடிக்கையாளர்களை இழுக்க அம்பானிக்கு 1 ரூபாய் மட்டுமே கூடுதலாக தேவைப்பட்டுள்ளது. ஜியோ ரூ 999 திட்டம் (Jio Rs 999 Plan) மூலம் தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினசரி 100 SMS மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G data) நன்மைகளை வழங்கியுள்ளார்.

இத்துடன் இலவசமாக ஜியோ சினிமா (JioCinema), ஜியோ டிவி (JioTV) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்கி அசத்தியுள்ளது அம்பானிக்கு சொந்தமான ஜியோ நிறுவனம். இந்த திட்டம் 98 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. வோடபோன் ஐடியா திட்டத்தை விட இது வெறும் 1 ரூபாய் மட்டுமே ஜாஸ்தி, ஆனால், இது 14 நாட்கள் கூடுதல் வேலிடிட்டியை வழங்குகிறது.

1 ரூபாய் வைத்து கோடியில் சம்பாதிக்க பார்க்கும் அம்பானி.. 1 ரூபாய்க்கு இவ்வளவு பவரா?

வெறும் 1 ரூபாய் வித்தியாசத்தில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களை ஈர்த்து, அம்பானி கோடியில் சம்பாதிக்கும் வாய்ப்பை உருவாக்கியுள்ளார். இது வளர்ந்து வரும் வோடபோன் ஐடியா நிறுவனத்திற்கு சிக்கலாக மாறியுள்ளது. இருப்பினும், இரவு முழுக்க திரைப்படங்கள் டவுன்லோட் செய்ய மற்றும் டேட்டா ரோல் ஓவர் செய்ய விரும்புவோருக்கு Vi 998 Plan சிறந்தது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 999 Plan Vs Vi 998 Pack Mukesh Ambani Plans To Target Vodafone Idea With 1 Rupee Cost Difference Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X