Home
News

அதான் அம்பானி.. கஸ்டமர்கள் ஆஃப்.. புதிய 98 நாட்கள் திட்டம்..இதுதான் ஹீரோ 5ஜி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. டேட்டா!

ஜியோ, ஏர்டெல் போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை உயர்த்திவிட்டு அதற்கு கஸ்டமர்களை மாற்ற படாதபாடு பட்டு வருகின்றன. ஒருபக்கம் பிஎஸ்என்எல் சிம் கார்டு வாங்கும் கஸ்டமர்களின் எண்ணிக்கை எகிறி வருகிறது. இதனால், அடுத்ததாக புதுப்புது திட்டங்களை களமிறக்க ஏர்டெல், ஜியோ திட்டமிட்டுள்ளன. ஏற்கனவே, ஏர்டெல் 5ஜி டேட்டா திட்டங்களை அறிமுகம் செய்திருந்தது. ஆனால், ஜியோ சத்தமே இல்லாமல், 98 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை அதற்கு முன்பே களமிறக்கிவிட்டது. இந்த திட்டத்தின் சலுகைகளை பார்ப்போம்.

ஜியோ ரூ 999 திட்ட விவரங்கள் (Jio Rs 999 Plan Details): இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தில் (New Prepaid Plan) 98 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மூன்று மாதங்களுக்கும் மேல் சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த நாட்களின் அன்லிமிடெட் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ், 5ஜி போன்ற அத்தனை சலுகைகளும் வாரி வழங்கப்பட்டுள்ளன.

அதான் அம்பானி.. கஸ்டமர்கள் ஆஃப்.. புதிய  98 நாட்கள் திட்டம்.. இதுதான்!

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை வழங்கப்படுகிறது. இதுபோக நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவும், அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 196 ஜிபி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் பயன்படுத்தலாம்.

இதுபோக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் மற்றும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால் (Roaming Voice Call) சலுகைகளும் கிடைக்கின்றன. மேலும், ஜியோ கஸ்டமர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) சந்தா கிடைக்கிறது.

இதில் ஜியோ சினிமா சந்தாவானது, பிரீமியம் சலுகைகளை கொடுக்காது. இந்த புதிய திட்டத்தையே ஜியோ களமிறக்கி இருக்கிறது. இந்த திட்டத்துக்கு நாளொன்றுக்கு ரூ.10.19 செலவாகிறது. இது கொஞ்சம் அதிகமாக இருப்பினும், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கம்மியான விலையில் கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு கிடைப்பது இதில் மட்டுமே.

இதற்கு மேல் வருடாந்திர திட்டங்களில் மட்டுமே அதிக சலுகைகள் கிடைக்கிறது. இதே விலையில் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் போன்ற முன்னணி ஓடிடி சலுகையும் ப்ரீபெய்ட் திட்டம் வேண்டுமானால், ரூ.949 விலையில் மற்றொரு திட்டம் இருக்கிறது. இந்த ஓடிடி + தினசரி டேட்டா திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ 949 திட்ட விவரங்கள் (Jio Rs 949 Plan Details): இந்த திட்டத்தில் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகைகளுடன் ஓடிடி சலுகையும் கிடைக்கிறது. ஆனால், முந்தைய திட்டத்தைவிட குறைவாக 84 நாட்கள் வேலிடிட்டி மட்டுமே கிடைக்கிறது. இந்த நாட்களின் நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 168 ஜிபி டேட்டாவை பெறலாம்.

இதிலும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா சலுகை மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. இதுபோக அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையையும் பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோகிளவுட், ஜியோடிவி மற்றும் ஜியோசினிமா சந்தா கிடைக்கிறது.

இந்த அனைத்து சலுகைகளும் போக டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+Hotstar) தளத்தின் சந்தா கொடுக்கப்படுகிறது. இதுவொரு மொபைல் சந்தாவாகும். 90 நாட்களுக்கு இந்த சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். ரூ.1000 பட்ஜெட்டில் நல்ல திட்டம் வேண்டுமானால், ஜியோவில் இந்த 2 திட்டங்கள் வேலிடிட்டி மற்றும் ஓடிடி அடிப்படையில் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 999 Plan Offers 98 Days Validity, 2GB Data, Unlimited Voice Calls Check Hero 5G Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X