Home
News

போட்டாரு பாரு அம்பானி.. 98 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா.. Jio கஸ்டமர்களுக்கு குஷி!

ஜியோ (Jio) கஸ்டமர்கள் குஷியாகும்படி 98 நாட்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) மற்றும் ஜியோ சினிமா (JioCinema), ஜியோடிவி (JioTV) ஆப்களின் சந்தாவும் களமிறக்கப்பட்டு இருக்கிறது. இனிமேல் 3 மாதத்துக்கும் மேலாக எந்தவொரு ரீசார்ஜ் திட்டமும் கஸ்டமர்களுக்கு தேவைப்படாது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் (Jio Prepaid Plan) குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனமானது, 4ஜி திட்டங்களுக்கு அடுத்து 5ஜி திட்டங்களுக்கு சென்றுவிட்டது. ஆகவே, கஸ்டமர்களையும் 5ஜி திட்டங்களுக்கு மாற்ற தொடங்கிவிட்டது. இதனால், லாபம் பார்க்காமல், 5ஜி திட்டங்களை கொடுக்கிறது. இப்படியான திட்டங்களில் 98 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஜியோ திட்டம், கஸ்டமர்களை தட்டித்தூக்கி இருக்கிறது. ஏனென்றால், கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு அதில் சலுகைகள் இருக்கின்றன.

போட்டாரு பாரு அம்பானி! 98 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. 2GB டேட்டா!

ஜியோ ரூ 999 திட்ட விவரங்கள் (Jio Rs 999 Plan Details): இந்த திட்டத்தில் ஒட்டுமொத்த சலுகைகளும் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. அதாவது, வாய்ஸ் கால்கள் முதல் 5ஜி டேட்டா வரையில் எந்தவித குறையும் இருக்காது. ஓடிடி மற்றும் கேமிங் பிரியர்கள் 3 மாதங்களுக்கும் மேல் கூடுதல் டேட்டாவுக்கு எந்தவொரு வவுச்சரும் தேவையில்லாத திட்டத்தை விரும்பினால், இந்த திட்டமே பக்கா தேர்வாகும்.

இந்த திட்டத்தின் டேட்டாவை பார்க்கையில், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா (Post Data) சலுகை கொடுக்கப்படும். ஆனால், இது பெரும்பாலாலும் தேவைப்படாது. ஏனென்றால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை ஜியோ கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த திட்டத்துக்கு 98 நாட்கள் வேலிடிட்டி வருகிறது. ஆகவே, 196 ஜிபி டேட்டா கிடைக்கிறது. 5ஜிபி டேட்டாவை பொறுத்தவரையில், 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்கள் வெல்கம் ஆஃபர் பெற்றிருந்தால் மட்டுமே இந்த சலுகையை பயன்படுத்த முடியும். சொல்லப்போனால், அனைத்து கஸ்டமர்களுக்குமே இந்த 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது என்பதே உண்மையாகும்.

இப்போது, மற்ற சலுகைகளை பார்த்து விடுவோம். இந்த திட்டத்தின் 98 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் கஸ்டமர்கள் 100 எஸ்எம்எஸ்களை நாள்தோறும் செய்து கொள்ளலாம். அதே நேரத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்களை (Roaming Calls) கஸ்டமர்கள் செய்து கொள்ள முடியும். ஆகவே, வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டாவுக்கு எந்தவித குறையும் இருக்கப்போவது இல்லை.

மேலும், ஓடிடி சலுகைகளை பார்க்கையில், ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி சந்தாக்கள் கொடுக்கப்படுகின்றன. இந்த சந்தாவில் பிரீமியம் சலுகைகள் கிடைக்காது. இருப்பினும், லைவ் கிரிக்கெட் மற்றும் இலவச ஷோக்களை பார்த்து கொள்ள முடியும். இந்த திட்டத்துக்கு மாதத்துக்கு ரூ.333 மட்டுமே செலவாகிறது. இதுவோ மாதத்துக்கு மட்டும் ரீசார்ஜ் செய்தால், ரூ.349 விலையிலான திட்டத்துக்கு செல்ல வேண்டும்.

ஜியோ ரூ 349 திட்ட விவரங்கள் (Jio Rs 349 Plan Details): இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடையாது. 28 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. இந்த 28 நாட்களில் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். 100 எஸ்எம்எஸ்கள் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா ஆப்களின் சந்தா கிடைக்கும். ஆகவே, முந்தைய திட்டமே லாபமானது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 999 Plan Offer Unlimited Voice Calls 2GB Data For 98 Days Validity Check 3 Months 5G Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X