ஒரே Jio ரீசார்ஜ்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. தினமும் 2 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!
ஜியோ (Jio) நிறுவனத்தின் கஸ்டமர்களுக்கு ஒரேவொரு ரீசார்ஜ் மூலமாக கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மட்டுமல்லாமல், ஓடிடி சந்தா, லைவ் டிவி சேனல்களின் சந்தா, ஜியோ கோல்டு மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகைகள் கிடைக்கிறது. இதுபோக ஜெமினி ப்ரோ சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ 999 திட்ட விவரங்கள் (Jio Rs 999 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு ஆரம்பத்தில் 100 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்பட்டது. இப்போது, 98 நாட்கள் மட்டுமே கிடைக்கிறது. 2 நாட்கள் வேலிடிட்டி குறைக்கப்பட்டாலும், சலுகைகளில் எந்த குறையும் இருக்காது. டேட்டா தொடங்கி வாய்ஸ் கால்கள், ஓடிடி, டிஜிட்டல் கோல்டு போன்ற ஒட்டுமொத்த சலுகைகளும் கிடைக்கின்றன.

இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு தினசரிக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். ஆகவே, 98 நாட்கள் வேலிடிட்டிக்கு மொத்தமாக 196 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இது 4ஜி வேகத்தில் கிடைக்கும் டேட்டா சலுகையாகும். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) கஸ்டமர்களுக்கு கிடைக்கும்.
ஆகவே, கிட்டத்தட்ட 100 நாட்களுக்கு அன்லிமிடெட் டேட்டா சலுகைகளை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு ஏற்ப 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா (JioHotstar Mobile / TV Subscription) கொடுக்கப்படுகிறது. இதற்கு கூடுலாக எந்த கட்டணமும் கிடையாது. மேலும், வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் வழக்கம்போல கிடைக்கின்றன.
அதாவது, 98 நாட்கள் முழுவதும் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம், அதே நேரத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதல் சலுகைகளும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கும். ஜியோஃபைனான்ஸ் ஆப் மூலமாக 1 சதவீத டிஜிட்டல் கோல்டு கிடைக்கும்.
அதாவது, இதில் ஆப் மூலமாக ஜியோ கோல்டு (Jio Gold) கிடைக்கிறது. இதை ரூ.100 இருந்தாலும் கஸ்டமர்கள் வாங்கி கொள்ளலாம். இப்படி வாங்கும் டிஜிட்டல் கோல்டில் 1 சதவீத கோல்டு இலவசமாக கொடுக்கப்படும். இது முதலில் 2 சதவீதமாக கொடுக்கப்பட்டது. இப்போது, 1 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல ஜியோ ஹோம் (Jio Home) சலுகையும் கிடைக்கிறது.
இந்த சலுகையை ஜியோ ஆப் வழியாகவும் புக்கிங் செய்து கொள்ளலாம். இதில் ஃபைபர் திட்டங்களில் கிடைப்பதை போலவே வை-பை டேட்டா சலுகை கிடைக்கும். மேலும், லைவ் டிவி சேனல்களின் சந்தா மற்றும் ஓடிடி ஆப்களின் சந்தா கிடைக்கும். ஆனால், 2 மாதங்கள் மட்டுமே இலவமாக கிடைக்கும். அதற்கு பிறகு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். ஆகவே, இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
இதற்கு அடுத்து ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை மூலமாக 50 ஜிபி கிளவுட் ஸ்டோர்ஜ் கிடைக்கும். இதை கூகுள் டிரைவ் போலவே பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால், இதற்கு ஜியோ மொபைல் நம்பர் கட்டாயமாக இருக்க வேண்டும். இந்த சலுகைகளுக்கு அடுத்து 18 மாதங்களுக்கான சந்தாவுடன் கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சந்தா கொடுக்கப்படுகிறது. இப்படி ஏகப்பட்ட சலுகைகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








