Home
News

Jio ஒரே போடு.. இனிமே 98 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. ரூ.999-க்கு வருது.. ஓடிடி சந்தா இருக்கு!

ஒரேவொரு ரீசார்ஜ் மூலம் 98 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 90 நாட்களுக்கு பிரீமியம் ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகையை முகேஷ் அம்பானியின் ஜியோ (Jio) நிறுவனம் கொடுக்கிறது. மூன்று மாதங்களுக்கு மேல் வேலிடிட்டி வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அன்லிமிடெட் டேட்டா மற்றும் ஓடிடி சலுகையில் பட்டையை கிளப்பும்படி இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ நிறுவனத்தில் 28 நாட்கள், 56 நாட்கள், 84 நாட்கள் மற்றும் 365 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டங்கள் மட்டுமல்லாமல், 90 நாட்கள் மற்றும் 98 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் பிரத்யேக திட்டங்களும் இருக்கின்றன. இதில் 98 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் ஜியோ கஸ்டமர்களிடையே மிகப்பெரும் வரவேற்பு பெற்றிருக்கிறது.

Jio ஒரே போடு.. இனிமே 98 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!

ஜியோ ரூ 999 திட்ட விவரங்கள் (Jio Rs 999 Plan Details): மூன்று மாதங்களுக்கு மேல் 8 நாட்கள் வேலிடிட்டி கொடுப்பதால், டேட்டா சலுகை குறைவாக கிடைக்கும் என்று நினைக்க வேண்டாம். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 98 நாட்களுக்கு 196 ஜிபி டேட்டாவை கொடுக்கிறது. இந்த டேட்டாவை 4ஜி வேகத்தில் பயன்படுத்தி கொள்ள முடியும்.

அதேபோல நாளொன்றுக்கு கிடைக்கும் 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை (Post Data) பெற்று கொள்ள முடியும். இந்த 4ஜி டேட்டா சலுகை போக ஜியோ கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்படுகிறது. இதையும் 98 நாட்கள் முழுவதும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம்.

இதற்கும் 4ஜி டேட்டாவுக்கும் சம்பந்தம் கிடையாது. ஆகவே, 5ஜி சேவை கிடைக்கும் பகுதிகளில் இருந்தால், 4ஜி டேட்டா தேவைப்படாது. முற்றிலும் இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த அதிகப்படியான டேட்டா சேவைக்கு ஏற்ப பிரீமியம் ஓடிடி சந்தா (Premium OTT subscription) கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, ஜியோஹாஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவை 90 நாட்களுக்கு பெற்று கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 98 நாட்கள் வேலிடிட்டி கிடைப்பதால், ஓடிடி சந்தா முடிந்த பிறகும் திட்டத்தின் சலுகைகளை தொடர்ந்து பெற்று கொள்ளலாம். இந்த ஓடிடி சந்தா மட்டுமல்லாமல், 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் சலுகை கொடுக்கப்படுகிறது.

இந்த ஸ்டோரேஜ் சலுகையை ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை மூலம் பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த ஓடிடி மற்றும் ஏஐ கிளவுட் ஸ்டோர்ஜ் சலுகைகள் இரண்டும் ஜியோ அன்லிமிடெட் ஆஃபரின் (Jio Unlimited Offer) கீழ் கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது. ஆகவே, இது திட்டத்தின் சலுகை கிடையாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

ஆகவே, எப்போது வேண்டுமானாலும் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இந்த சலுகைகள் போக வழக்கமாக கிடைக்கும் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் சலுகைகள் இருக்கின்றன. அதாவது, இதில் 98 நாட்களுக்கு நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் வீதம் அனுப்பி கொள்ள முடியும். அதேபோல அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் செய்யலாம்.

இதுபோக ஜியோவில் மட்டுமே கிடைக்கும், ஜியோ டிவி (Jio TV) சலுகையும் கொடுக்கப்படுகிறது. மேற்கண்ட அனைத்து சலுகைகளையும் 98 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஓடிடிக்கு மட்டுமே 90 நாட்கள் சந்தா கிடைக்கிறது. இந்த திட்டம் விலைக்கு ஏற்ப சலுகைகளை கொடுக்கிறது. ஓடிடி மற்றும் டேட்டா விரும்பிகளுக்கு இது பெஸ்ட் தேர்வாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 999 Plan Offer 98 Days Validity 196 GB Data Unlimited Voice Calls Popular Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X