Home
News

ஜியோ ஒரே‌ போடு..‌ ரூ.999 ரீசார்ஜ் செய்தால் 18 மாதங்களுக்கு நோ டென்ஷன்.. வாய்ஸ் கால்.. டேட்டா!

இந்தியாவின் முன்னனி தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), தனது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. அதில், நீண்ட நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினசரிக்கு அதிக டேட்டாவை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சிறந்த திட்டம் தான்.

ஜியோ ரூ. 999 ப்ரீபெய்ட் திட்ட சலுகைகள்:

1. நீண்ட கால வேலிடிட்டி (Validity):
பொதுவாக நடுத்தர திட்டங்கள் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும். ஆனால், ஜியோவின் இந்த ரூ. 999 திட்டம் உங்களுக்கு முழுமையாக 98 நாட்கள் (கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கும் மேல்) வேலிடிட்டியை வழங்குகிறது. இதனால் அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் கவலை உங்களுக்கு இருக்காது.

ஜியோ ஒரே‌ போடு..‌ ரூ.999 ரீசார்ஜ் செய்தால் 18 மாதங்களுக்கு நோ டென்ஷன்!

2. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் (Voice & SMS): இந்தியாவின் எந்தவொரு நெட்வொர்க்கிற்கும் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் (Local, STD & Roaming) கால்களை அன்லிமிடெட் (Unlimited) சலுகையின் கீழ் பேசிக்கொள்ளலாம்.
தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) அனுப்பும் வசதியும் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

3. அதிவேக டேட்டா நன்மைகள் (Data Benefits): இந்த திட்டத்தில் ஒவ்வொரு நாளும் 2ஜிபி (2GB) அதிவேக 4ஜி டேட்டா கிடைக்கும். 98 நாட்களுக்குமாக சேர்த்து ஒட்டுமொத்தமாக 196ஜிபி (196GB) டேட்டா பயனர்களுக்குக் கிடைக்கிறது. FUP லிமிட் கீழ் ஒரு நாளுக்கான 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகு, இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும் (அன்லிமிடெட் டேட்டா இருக்கும், ஆனால் வேகம் குறையும்).

4. அன்லிமிடெட் 5ஜி சலுகை: உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்து, உங்கள் பகுதியில் ஜியோ 5ஜி நெட்வொர்க் இருந்தால், நீங்கள் எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி இந்த அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டாவை (Unlimited True 5G Data) சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

5. கூடுதல் ஓடிடி (OTT) மற்றும் ஆப்ஸ் சலுகைகள்: இந்த திட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதில் பொழுதுபோக்கு மற்றும் கூடுதல் நன்மைகளும் இலவசமாகக் கிடைக்கின்றன: ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கிடைக்கிறது. திரைப்படங்கள், வெப் சீரிஸ்கள் மற்றும் நேரடி விளையாட்டுப் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்.

இந்த சந்தாவை மூன்று மாதங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஜியோ டிவி (JioTV) அணுகல் கிடைக்கிறது. இதில் லைவ் டிவி சேனல்கள், நாடகங்கள் பார்க்க முடியும். ஆனால் இலவசமாக கிடைக்கும் கன்டென்ட்கள் மட்டுமே கிடைக்கும். பிரீமியம் சலுகைகள் கிடைக்காது. ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) அணுகல் கிடைக்கிறது. ஆகவே 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படுகிறது.

ரூ.35,100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro):
ஜியோவின் ரூ.299 அல்லது அதற்கு மேற்பட்ட தகுதியான திட்டங்களுக்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த அசாத்தியமான ஏஐ சலுகை கிடைக்கிறது. ரூ.999 திட்டத்தில் ரீசார்ஜ் செய்வதன் மூலம் இந்த சலுகையை உங்களால் பெற முடியும்.

ஜியோ ஒரே‌ போடு..‌ ரூ.999 ரீசார்ஜ் செய்தால் 18 மாதங்களுக்கு நோ டென்ஷன்!

18 மாத இலவச சந்தா: ஒரு மாதத்திற்கு ரூ.1,950 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ (Google AI Pro) மெம்பர்ஷிப், உங்களுக்கு 18 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மொத்த மதிப்பு ரூ. 35,100 ஆகும். 5,000 GB (5 TB) கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. கூகுள் டிரைவ் (Google Drive), ஜிமெயில் (Gmail) மற்றும் கூகுள் போட்டோஸ் (Google Photos) ஆகியவற்றுக்கு தேவையான கிளவுட் ஸ்டோரேஜ் இடம் கிடைக்கும். நானோ பனானா' (Nano Banana) அணுகல் கிடைக்கும்.

இந்த திட்டம் யாருக்கு சிறந்தது?
நீங்கள் தினமும் 2ஜிபி அளவிலான டேட்டாவைப் பயன்படுத்துபவராக இருந்து, அதே நேரத்தில் அடிக்கடி ரீசார்ஜ் செய்யாமல் மூன்று மாதங்களுக்கு மேல் நிம்மதியாக இருக்க விரும்பினால், ஜியோவின் இந்த ரூ. 999 பிளான் உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த வேல்யூ ஃபார் மணி (Value for Money) திட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Best Mobiles in India

English summary
Jio Rs 999 Plan Get 98 Days Validity Free 18 Month Google Gemini Pro Rs 35100
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X