Jio-வா கிங்-ஆ? 100 நாட்கள் கிட்ட டபுள் நன்மை.. இந்த ஒரு பிளான் போதுமே ஜாலியா இருக்க.. எந்த திட்டம்?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு 98 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (98 days validity) கொண்ட ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் 100 நாட்களுக்கு மிக நெருக்கமான வேலிடிட்டியை பல அட்டகாசமான நன்மைகளுடன் வாரி வழங்குகிறது. இந்திய மக்களை பெரியளவில் கவர்ந்து வரும் இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை என்ன? இதன் கீழ் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
இந்தியாவின் அதிக வடிக்கையாளர் கொண்ட ஒரு பிரமாண்டமான தொலைத்தொடர்பு நிறுவனம் (India's leading telecom company Jio) என்றால் அது ஜியோ நிறுவனம் தான் என்று எல்லா இந்தியர்களும் கூறும் அளவிற்கு ஜியோ (Jio) குறுகிய காலத்தில் வளர்ந்து நிற்கிறது. குறுகிய காலத்தில் மிகப்பெரிய ஜாம்பவானாக வளர்ந்து நின்றாலும், ஜியோ தொடர்ந்து மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்க முயற்சி செய்து வருகிறது.

Jio-வா கிங்-ஆ? 100 நாட்கள் கிட்ட டபுள் நன்மை:
கடந்த ஜூலை 2024 இல் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த திடீர் விலை ஏற்றத்திற்கு (Jio price hike in July 2024) பிறகு, மக்கள் ஜியோவை கைவிட்டு, அரசு நடத்தும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் (BSNL) பக்கம் மாறத்துவங்கினர். இதன் விளைவாக ஜியோ நிறுவனம் ஒரு சில மாதங்களில் சுமார் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை (Jio customers) தனது சேவையில் இருந்து இழந்தது. இது ஜாம்பவான் நெட்வொர்க்கிற்கு மிகப்பெரிய அடியாக இறங்கியது.
இதை சரி செய்யும் விதமாகவும், மக்களின் நம்பிக்கையை பெற துடிக்கும் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாகவும் ஜியோ தற்போது மீண்டு வர பார்க்கிறது. இதன் காரணமாக, ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தொடர்ந்து பல புதிய திட்டங்களை மலிவு விலையில், அதிக செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வழங்க துவங்கியுள்ளது. அப்படி ஜியோ நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த திட்டம் தான் ஜியோ ரூ.999 திட்டம்.
ஜியோ ரூ. 999 திட்டம் (Jio Rs 999 Plan):
ஜியோ ரூ. 999 திட்டம் (Jio Rs 999 Plan) 98 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இந்த வாய்ஸ் கால்ஸ் நன்மையில் லோக்கல் (local), எஸ்டிடி (STD) மற்றும் இன்டர்நேஷனல் ரோமிங் (international roaming) போன்ற சேவைகள் அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புதிய ஜியோ 999 பிளான் (Jio 999 Plan) அடுத்தபடியாக அதன் வாடிக்கையாளர்களுக்கு 98 நாட்களுக்கு தினமும் 2GB டேட்டா (data) நன்மையை வழங்குகிறது. இதன் மூலம் இந்த திட்டம் மொத்தமாக 196GB டேட்டா (total 196GB data) நன்மையை அதன் பயனருக்கு வழங்குகிறது, இது 98 நாள் என்ற வேலிடிட்டியை இரட்டிப்பாக கிடைக்கிறது என்று ஜியோ விளம்பரம் செய்துள்ளது.
ஜியோ ரூ. 999 திட்டம் இலவச நன்மை (Jio Rs 999 Plan FREE Benefits):
இந்த திட்டம் தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோவின் ட்ரூ 5ஜி டேட்டா (Jio True 5G) நன்மையையும் வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த திட்டம் 5ஜி கிடைக்கும் வட்டங்களில் அன்லிமிடெட் டேட்டா நன்மையையும் வழங்குகிறது. ஜியோ திட்டம் என்றாலே இலவச நன்மைகள் (Jio FREE benefits) கூடவே ஒட்டிக்கொண்டு வந்துவிடும் தானே. அப்படி இந்த திட்டத்துடன் கிடைக்கும் இலவச நன்மைகளாக Jio Tv, Jio Cinema மற்றும் Jio Cloud சேவைகளின் உள்ளடக்கங்கள் பயன்படுத்த கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








