இனி ரூ.1000 இருக்கா.. 98 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. இதுதான் பெஸ்ட்!
ஜியோ நிறுவனத்தில் ரூ.1000 விலைக்குள் அதிக வேலிடிட்டியுடன் கிடைக்கும் 2 ப்ரீபெய்ட் திட்டத்தை டெலிகாம் கஸ்மடர்கள் அதிகமாக ரீசார்ஜ் செய்து வருகின்றனர். இதில் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ், ஓடிடி மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்த ப்ரீபெய்ட் திட்டங்களின் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 Prepaid Plan): ரூ.1000 விலைக்குள் அதிக வேலிடிட்டி கொண்ட திட்டமாக இந்த ப்ரீபெய்ட் திட்டம் இருக்கிறது. இதில் 98 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, மூன்று மாதங்களுக்கு மேல் டேட்டா, வாய்ஸ், எஸ்எம்எஸ் சலுகைகளை பெற்று கொள்ளலாம். கூடுதல் சலுகைகளையும் கொண்டுள்ளது.

98 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கும். தினமும் 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கிறது.
ஆகவே, 98 நாட்களுக்கு கிடைக்கும் தினசரி டேட்டா போக கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை கொடுக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, மூன்று மாதங்களுக்கு மேல் டேட்டாவில் எந்த குறையும் இருக்காது. கூடுதல் சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இதில் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படும். இந்த திட்டத்துக்கு மூன்று மாதங்களுக்கு மேல் சந்தா கிடைத்தாலும், ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தாவை 3 மாதங்களுக்கு மட்டுமே பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த ஓடிடி சந்தா போக ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும்.
மேலும், அண்மையில் சேர்க்கப்பட்ட ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து உள்ளது. இதில் 5000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். மேலும், நானோ பனானா (Nano Banana) உள்ளிட்ட பிரீமியம் சலுகைகளையும் கொடுக்கும். இதைவிட கம்மியான விலைக்கு 90 நாட்கள் வேலிடிட்டியுடன் மற்றொரு பெஸ்ட் திட்டம் இருக்கிறது.
ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, ரூ.100 விலை கம்மியாக கிடைக்கிறது. ஆகவே, விலைக்கு ஏற்ப முந்தைய திட்டத்தைவிட 8 நாட்கள் வேலிடிட்டி கம்மயாக கிடைக்கிறது. ஆனால், டேட்டாவில் எந்த மாற்றமும் இல்லை. இருப்பினும், 20 ஜிபி கூடுதல் டேட்டா கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.
இந்த டேட்டா போல அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். கூடுதலாக 20 ஜிபிக்கான லம்ப்-சம் டேட்டா கொடுக்கப்படும். ஆகவே, 90 நாட்களுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் 180 ஜிபி டேட்டா கிடைக்கும். அதோடு 20 ஜிபி டேட்டா கிடைப்பதால், மொத்தமாக 200 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இது 4ஜி வேகத்தில் கிடைக்கும். அன்லிமிடெட் 5ஜி டேட்டா கூடுதலாக வரும்.
மற்ற சலுகைகள் கிடைத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கிறது. ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா 3 மாதங்களுக்கு கிடைக்கிறது. ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் மற்றும் ஜெமினி ப்ரோ சந்தாவையும் கொடுத்து உள்ளது.


Click it and Unblock the Notifications








