Home
News

Jio பக்கம் கூட்டம் குவியுது.. மலிவு விலைல 98 நாள் பிளான்.. 2GB டேட்டா.. அன்லிமிடெட் இலவச நன்மை.. எந்த திட்டம்?

ரிலையன்ஸ் ஜியோ சமீபத்தில் ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்க்கத் துவங்கியுள்ளது. குறிப்பாக அடிக்கடி ரீசார்ஜ் செய்வது சிரமமானதாகவும் விலை உயர்ந்ததாகவும் கருதுபவர்களுக்கு ஜியோவின் புதிய திட்டம் ஒரு தீர்வாக அமைந்துள்ளது. ஜியோவின் ஜூலை மாத விலை உயர்வுக்குப் பிறகு பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்திற்கு பயனர்கள் குறிப்பிடத்தக்க அளவில் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து வந்த இந்தத் திட்டம், பல முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய அவசியமின்றி நீண்ட கால இணைப்பை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தங்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்த பிறகு, பல கோடி மக்கள் தனியார் டெலிகாம் நிறுவனங்களை புறக்கணித்துவிட்டு அரசு நடத்தும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) பக்கம் மாற துவங்கிவிட்டனர். இதனால், இழப்பை சந்தித்துள்ள தனியார் டெலிகாம் நிறுவனங்கள் தற்போது மிகவும் சுவாரசியமான திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

Jio பக்கம் கூட்டம் குவியுது.. மலிவு விலைல 98 நாள் பிளான்..

Jio பக்கம் கூட்டம் குவியுது.. மலிவு விலைல 98 நாள் பிளான்:

இந்த புதிய ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம், மிகவும் சிக்கனமான வழிகளைக் தேடும் ஜியோவின் பரந்த பயனர் அடித்தளத்திற்கு ஈர்க்கும் திட்டமாக அமைந்திருக்கிறது. நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் புதிய திட்டம் ஜியோ ரூ. 999 திட்டமாகும் (Jio Rs 999 Plan). இந்த புதிய திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று இதனுடன் கிடைக்கும் வேலிடிட்டி ஆகும். இந்த திட்டத்தை ஒரே ஒரு முறை ரீசார்ஜ் செய்வதன் மூலம் 98 நாட்களுக்கு தொடர்ச்சியான சேவை கிடைக்கிறது.

ஜியோவின் ரூ. 999 திட்டம், மொத்தத்தில் 3 மாதம் 8 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. 3 மாதத்திற்கு ஒருமுறை மட்டும் நீங்கள் ரீசார்ஜ் செய்தால் போதும் என்ற நன்மையோடு இது மலிவு விலையில் வருகிறது. ஜியோவின் சுமார் 490 மில்லியன் பயனர்களின் தேவைகளை இது குறைந்த கட்டணத்துடன் பூர்த்தி செய்கிறது. இந்த புதிய Jio 999 Plan மூலம் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ. 999 திட்டமாகும் (Jio Rs 999 Plan):

இந்த திட்டத்தின் பயனர்கள், அணைத்து நெட்வொர்க்கிற்கும் அன்லிமிடெட் இலவச வாய்ஸ் கால்ஸ் அழைப்பு நன்மையை அனுபவிக்க முடியும். இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்தின் தினசரி டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, இணைய வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் மொத்தமாக 196GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மை கிடைக்கிறது.

இத்துடன் கூடுதலாக, ஜியோ நிறுவனம் இந்த திட்டத்தின் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Jio unlimited 5G data benefits) நன்மையையும் வழங்குகிறது. உங்கள் பகுதியில் 5ஜி நெட்வொர்க் உடன் உங்கள் கையில் 5ஜி மொபைல் போன் இருக்கிறதென்றால், இந்த அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையை (Truly unlimited 5G data) நீங்கள் தாராளமாகவும் இலவசமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கூடுதல் இலவச நன்மைகளை வாரி வழங்கும் Jio:

இந்தத் திட்டத்தின் சந்தாதாரர்கள் ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோ டிவி (JioTV) அணுகல் உள்ளிட்ட பல கூடுதல் நன்மைகளை அனுபவிப்பார்கள். ஜியோ சினிமா சந்தா பிரீமியம் பதிப்பு அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இருப்பினும் இது இன்னும் பெரிய அளவிலான பொழுதுபோக்கு விருப்பங்களை வழங்குகிறது. கூடுதலாக, பயனர்கள் ஜியோ கிளவுட் (JioCloud) சந்தாவிலிருந்து பயனடைவார்கள். இந்த திட்டம் கிட்டத்தட்ட 100 நாட்கள் செல்லுபடியாகும் காலத்தை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 999 Plan with 98 days validity 2GB data per day unlimited voice and 5G data benefits and free additional benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X