கவலையவிடுங்க.. Jio பயனர்களுக்கு லக்கு.. 98 நாளுக்கு டேட்டாவுடன் ஜமாய்க்கலாம்.. OTT கூட இருக்கு.. எந்த பிளான்?
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தொடர்ந்து மலிவு விலையில் சிறந்த சேவையை வழங்கி வரும் இந்தியாவின் தலைசிறந்த டெலிகாம் (Telecom) நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. ஜியோ (Jio) நிறுவனம் இப்போது சுமார் 460 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு தனது சேவையை விரிவுபடுத்தி வழங்கி வருகிறது. பலதரப்பட்ட பயனர்களுக்காக, பல விதமான ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ தற்போது வழங்கி வருகிறது. இதில் குறிப்பாக நீண்ட கால வேலிடிட்டி (long validity plans) உடன் சிறந்த நன்மைகளை தேடும் வடிக்கையாளர்களுக்காக நிறுவனம் இப்போது மலிவு விலையில் 98 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை, தொலைத்தொடர்பு துறையில் மூன்று தனியார் நிறுவனங்கள் (private telecom companies) மற்றும் ஒரு அரசுக்கு சொந்தமான டெலிகாம் நிறுவனம் (Government owned telecom industry) தலைசிறந்து செயல்பட்டு வருகிறது. தனியார் டெலிகாம் ஆபரேட்டர் நிறுவனங்களாக ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மறுபுறம், அரசுக்கு சொந்தமான பாரத் சஞ்சார நிகாம் லிமிடெட் (Bharat Sanchar Nigam Limited) என்ற பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் என்ன தான் 4 டெலிகாம் நிறுவனங்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தாலும், முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ஜியோ நிறுவனம் மட்டும் தான் அதிகப்படியான மக்களை கவர்ந்து, இந்தியாவின் தலைசிறந்த டெலிகாம் நிறுவனமாக முதலிடத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்தகைய வெற்றிக்கு ஜியோ வழங்கும் மலிவான விலை கொண்ட திட்டங்கள் தான் காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
குறைந்த விலையில் அதிக நன்மைகளை வழங்கி, மக்களை தன் வசம் வளைத்துப்போட்ட பெருமை ஜியோவையே (Jio) சாரும். ஜியோ டெலிகாம் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து செயல்படுவது மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது. காரணம், ஜியோ வாடிக்கையாளர்களுக்கு தேவையான திட்டங்களை ஜியோ பல்வேறு வகையாக பிரித்து வழங்கி வருகிறது. குறிப்பாக, வாடிக்கையாளர்கள் தங்கள் பட்ஜெட் மற்றும் தேவைகளுக்கு ஏற்ற ரீசார்ஜ் திட்டங்களை (Jio budget friendly recharge plans) எளிதாகத் தேர்ந்தெடுக்க ஜியோ அனுமதிக்கிறது.
உதரணமாக, ரிலையன்ஸ் ஜியோ தற்போது OTT திட்டங்கள் (OTT plans), ஜியோ போன் திட்டங்கள் (Jio phone plans), ஜியோ பிரைமா போன் திட்டங்கள் (Jio Prima phone plans), கிரிக்கெட் சலுகை திட்டங்கள் (cricket offer plans), டேட்டா பேக்குகள் (data packs) மற்றும் பொழுதுபோக்கு தொகுப்புகள் (entertainment packages) உள்ளிட்ட பல்வேறு பயனர் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களை வழங்குகிறது.
இன்னும் கூடுதல் வசதியை மேம்படுத்த, ஜியோ நிறுவனம் இப்போது அதன் பயனர்களுக்கு நீண்ட கால செல்லுபடியாகும் திட்டங்களை (Jio long term validity plans) உள்ளடக்கிய அதன் சலுகைகளையும் விரிவுபடுத்தியுள்ளது. ஜியோ நிறுவனம் தற்போது அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் (Jio prepaid recharge) பட்டியலில், புதிதாக ஜியோ ரூ. 999 திட்டம் (Jio Rs 999 Plan) என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் 98 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி நன்மையுடன் வருகிறது.
இது பட்ஜெட் பிரியர்களுக்கான சிறந்த மலிவு விலை நீண்ட நாள் ரீசார்ஜ் திட்டமாக செயல்படுகிறது. இந்த திட்டம் 98 நாட்களுக்கு செல்லுபடியாகும் (Jio 98 days validity plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இதில் அணைத்து நெட்வொர்க்கிற்குமான லோக்கல் (local voice calls), எஸ்டிடி (STD voice calls) மற்றும் இன்டர்நேஷனல் ரோமிங் (International roaming) போன்ற சேவைகளை நிறுவனம் வழங்குகிறது.
இந்த புதிய ஜியோ ரூ. 999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 Prepaid Plan) அதன் பயனருக்கு தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அட்டகாசமான டேட்டா நன்மையையும் வழங்குகிறது. இந்த ஜியோ ரூ. 999 திட்டம் (Jio Rs 999 Plan) தினசரி 2GB டேட்டா (Jio 2GB data per day plan) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் 98 நாட்களுக்கு செல்லுபடியாகிறது என்று முன்பே தெரிவித்திருந்தோம்.
அப்படியானால், இந்த ஜியோ ரூ. 999 திட்டத்தின் (Jio Rs 999 Plan) ஒட்டுமொத்த செல்லுபடியாகும் காலத்திற்கு, இந்த பிளான் மொத்தமாக 196GB டேட்டா நன்மையை தடையின்றி வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் தினசரி டேட்டா வரம்பு தீர்ந்த பிறகு, டேட்டாவின் வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இது தவிர இந்த ஜியோ ரூ. 999 திட்டம் (Jio Rs 999 Plan) அதன் பயனருக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5G data) நன்மையையும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நன்மையை பயன்படுத்த உங்களிடம் 5ஜி மொபைல் (5G mobile) அல்லது 5ஜி இணக்கமான ஸ்மார்ட்போன் சாதனம் இருக்க வேண்டும். அதேபோல், நீங்கள் இருக்கும் இடத்தில் ஜியோ 5ஜி சேவை கவரேஜ் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
இந்த இரண்டு நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், இலவசமாக எந்த வரம்பும் இல்லாமல் அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை உங்களால் அனுபவிக்க முடியும். ஜியோ என்றாலே கூடுதல் இலவச நன்மைக்கு பெயர் போனது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த ஜியோ திட்டத்துடன் நிறுவனம் உங்களுக்கு 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் இலவச ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) சந்தா நன்மையை இலவசமாக வழங்குகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் OTT தலத்தில் இருக்கும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை காண இந்த இலவச சந்தா அனுமதிக்கிறது. இத்துடன் கூடுதல் சேர்ப்பாக, ஜியோ நிறுவனம் அதன் சொந்த ஆன்லைன் பொழுதுபோக்கு சேவையான ஜியோ டிவி (Jio TV) சந்தாவையும் இலவசமாக வழங்கி அசத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்துடன் 50GB மதிப்பிலான ஜியோ ஏஐ கிளவுட் ஸ்டோரேஜ் (Jio AI Cloud Storage) ஆதரவையும் ஜியோ இலவசமாக வழங்குகிறது.


Click it and Unblock the Notifications