Jio அதிரடி.. கம்மி பட்ஜெட்டில் 98 நாள் வேலிடிட்டி.. OTT.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. யாரு விடுவா?
ஏர்டெல் (airtel) நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் புதிய ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிக் கொண்டே தான் இருக்கிற ஜியோ (jio) நிறுவனம். குறிப்பாக ஜியோ அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோவின் ரூ.999 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஓடிடி மற்றும் அதிக சலுகைகளை வழங்குகிறது. இது குறித்த தகவல்களை இப்போது பார்க்கலாம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 98 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. எனவே நீங்கள் ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா முடிந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம்.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது.. இதுதவிர பல்வேறு அசத்தலான நன்மைகள் இதில் உள்ளது.
அதாவது 90 நாட்களுக்குச் செல்லுபடியாகும் இலவச ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) சந்தா வழங்குகிறது இந்த திட்டம். ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக ஓடிடி நன்மைகள், அதிக டேட்டா மற்றும் அதிக நாள் வேலிடிட்டி வழங்குவதால் இந்த திட்டத்தில் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. அதுபோக 20ஜிபி இலவச டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
அதன்படி 90 நாட்களுக்கு செல்லுபடியாகும் இலவச ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். குறிப்பாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.999 மற்றும் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டங்கள் ஓடிடி மற்றும் அதிக சலுகைகள் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் ஜியோ (jio) நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்துடன் இணைந்து ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவைகளை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications