சத்தமில்லாமல் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை நீக்கிய ரிலையன்ஸ் ஜியோ.!
ஜியோ நிறுவனம் சத்தமில்லாமல் அதன் மலிவான ரீசார்ஜ் திட்டம் ஒன்றை அதன் திட்டங்களின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது, அந்த திட்டம் ரூ.98-ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாகும்.

கடந்த டிசம்பர் மாதம் எஸ்எம்எஸ் ஒதுக்கீட்டை வழங்கும்படி திருத்தப்பட்ட இந்த ரூ.98 திட்டம் இப்போது ஜியோவின் திட்டங்களின் பட்டியலில் இருந்து முழுமையாக நீக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ரூ.98-திட்டம் நீக்கப்பட்டதால்,ஜியோவிலிருந்து 28நாட்கள் என்கிற செல்லுபடியை வழங்கும் மிகக் குறைந்த விலை ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டமாக ரூ.129 உருமாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நீக்கப்பட்ட ரூ.98-திட்டமானது 2ஜிபி அதிகவே டேட்டா ஒதுக்கீடு, இலவச எஸ்எம்எஸ். ஜியோ-டு-ஜியோ மற்றும் லேண்ட்லைன் அழைப்புகள் போன்றவைகளை வழங்கியது. பின்பு கொடுக்கப்பட்ட டேட்டா ஒதுக்கீடு தீர்ந்ததும், பயனர்கள் தொடர்ந்து டேட்டாவை அணுகலாம், ஆனால்64Kbps என்கிற வேகத்தின் கீழ் மட்டுமே அணுக முடியும்.

அதாவது ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் அறிமுகமான அடுத்த சில நாட்களில் ரூ.98-திட்டம் ஆனது நீக்கப்பட்டுள்ளது,அதன்படி ஜியோ நிறுவனத்தின் ரூ.999-திட்டம் பொறுத்தவலை நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா,வரம்பற்ற ஜியோ-டு-ஜியோ மற்றும் லேண்ட்லைன் குரல் அழைப்பு,ஜியோ அல்லாத அழைப்பிற்கு 3,000 நிமிடங்கள் உள்ளிட்ட சலுகைகளுடன் 84நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது. மேலும் இந்த ரூ.999-திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ்,ஜியோ ஆப்ஸ்களுக்கான இலவச சந்தா உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகிறது. மேலும்ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்த சிறப்பான திட்டங்களைப் பார்ப்போம்.

ரூ.2399-திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.2399-திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால், இலவச எஸ்எம்எஸ் உள்ளிட்ட நன்மைகளை
365நாட்கள் வழங்கும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெலிகாம் டாக் வலைதளத்தின் அறிவிப்பு அடிப்படையில் இந்த திட்டம் ஜியோ அல்லாத மற்றநெட்வொர்க்குகளுக்கு கால் அழைப்பு நன்மைகளை பற்றி சரியாக விவரங்கள் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது. ஆனால் தினசரி 2ஜிபி டேட்டா உள்ளிட்ட சில சலுகைகள் இந்த திட்டத்தில் இருப்பதால் பலர் இதை தேர்வு செய்யவிரும்புவார்கள்.

ரூ.2121 திட்டம்
ஜியோவின் மற்றொரு திட்டமான ரூ 2121 திட்டத்தின் கீழ் தினசரி 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ், இலவச எஸ்.எம்.எஸ் ஆகியவை 336 நாட்களுக்கு வழங்கப்படும்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349-திட்டம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் ரூ.349-திட்டம் ஆனது தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது, மேலும் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த திட்டம். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 84ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும்.இதுதவிர ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். பின்பு இந்த
திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.249-திட்டம்
ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா தேவையில்லை 2ஜிபி டேட்டா போதும் என நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ரூ.249-திட்டம்.இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 100எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199-திட்டம்
தினசரி 2ஜபி டேட்டா தேவையில்லை 1.5ஜிபி டேட்டா போதும் என நினைப்பவர்களுக்கு இருக்கவே இருக்கிறது ரூ.199-திட்டம்.இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா, ஜியோ டு ஜியோ இலவச அழைப்புகள், மற்ற நெட்வொர்க்குகளுக்கு 1000நமிடங்கள் கால் அழைப்பு நன்மைகளையும் பெறமுடியும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28நாட்கள் ஆகும். பின்பு இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு
100எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கும்


Click it and Unblock the Notifications








