Home
News

எங்கிட்ட தான் வருவீங்க.. 84 நாட்களுக்கு சொல்லி அடித்த ஜியோ.. வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!

இனிமேல் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) ரீசார்ஜ் செய்யும் முன்பாக ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) கஸ்டமர்கள் இதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். ஏனென்றால், ஐபிஎல் 2025 சீசன் (IPL 2025 Season) தொடங்கிவிட்டதால், இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுடன் (JioHotstar Subscription) கிடைக்கும் திட்டத்தில் எது பெஸ்ட் என்பதை பார்க்க வேண்டி இருக்கிறது. இப்போது, ஜியோ மற்றும் ஏர்டெல்லில் ஒரே சலுகைகளை கொடுக்கும் இரண்டு திட்டங்களை ஒப்பிட்டு பார்க்கப் போகிறோம்.

ஒட்டுமொத்த கிரிக்கெட் பிரியர்களும் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்தியன் பிரீமியர் லீக் - ஐபிஎல் 2025 (Indian Premier League - IPL 2025) போட்டிகள் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மே 25ஆம் தேதியில் இறுதிப் போட்டி நடக்கிறது. ஆகவே, 3 மாதங்களுக்கு போட்டிகள் இருப்பது உறுதியாகிவிட்டது. இதனால், ஐபிஎல் போட்டிகளை காண ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கிறது.

எங்கிட்ட தான் வருவீங்க.. 84 நாட்களுக்கு சொல்லி அடித்த ஜியோ.. வாய்ஸ்!

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), பார்தி ஏர்டெல் (Bharti Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) ஆகிய நிறுவனங்கள் வெறும் ரூ.100 விலை கொண்ட டேட்டா மற்றும் ஓடிடி திட்டங்களில் 90 நாட்களுக்கான இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை கொடுக்கின்றன. ஆனால், இதற்கு ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் (Active Prepaid Plan) கஸ்டமர்களிடம் இருக்க வேண்டியது அவசியமாகும்.

அதுவும் 90 நாட்களுக்கான ஆக்டிவ் திட்டம் இருந்தால் மட்டுமே இந்த இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை பயன்படுத்த முடியும். ஒருவேளை உங்களிடம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ஆக்டிவ் ப்ரீபெய்ட் திட்டம் இருந்தாலும், ரூ.100 மதிப்பிலான ஜியோஹாட்ஸ்டார் திட்டம் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும். ஆனால், 28 நாட்களுக்கு பிறகு அடுத்த சிம் ஆக்டிவ் திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இல்லாதபட்சத்தில் உங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா தொடர்ந்து கிடைக்காது. ஆகவே, 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை இப்போது ரீசார்ஜ் செய்தால், இலவச ஹாட்ஸ்டார் சந்தாவை முழுவதும் பயன்படுத்த முடியும். கூடுதல் ரீசார்ஜ் தேவைப்படாது. ஆகவே, 84 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ், ஜியோஹாட்ஸ்டார் கொண்ட திட்டங்களை பார்க்க வேண்டும்.

ஜியோ மற்றும் ஏர்டெல்லில் ரூ.100 விலை வித்தியாசத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்கள் இருக்கின்றன. இரண்டு திட்டங்களும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) மற்றும் இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தா (Free JioHotstar Subscription) ஆகிய சலுகைகளை கொடுக்கின்றன.

ஜியோ ரூ 949 திட்ட விவரங்கள் (Jio Rs 949 Plan Details): இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தை (Jio Prepaid Plan) ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த சந்தா மட்டுமல்லாமல், திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, திட்டத்தின் வேலிடிட்டி முடியும்போது, ஓடிடி சந்தாவின் வேலிடிட்டி முடியும்.

இந்த 84 நாட்கள் முழுவதும் டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) போட்டிகளை காணலாம். அதேபோல கேம் ஆப் த்ரோன்ஸ், ஹவுஸ் ஆப் தி டிராகன், லாஸ்ட் ஆஃப் அஸ் போன்ற பிரத்யேக சீரிஸ்களை ஜியோஹாட்ஸ்டார் சந்தாவில் பார்த்து கொள்ளலாம். ஏனென்றால், ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) ஆகியவை சமீபத்தில் ஒன்றாக இணைக்கப்பட்டன.

இதன் மூலம் ஒரே சந்தாவில் இரண்டு ஓடிடி ஆப்களில் கிடைத்தவந்த மூவிக்கள், சீரிஸ்கள் மற்றும் ஷோக்களை பார்த்து கொள்ளலாம். இந்த சலுகைகளைகளுடன் இப்போது, ஐபிஎல் போட்டிகளின் லைவ் ஸ்ட்ரீம் சேர்ந்துள்ளது. இப்போது, மற்ற சலுகைகளை தெரிந்து கொள்வோம். இந்த ஓடிடிக்கு பிறகு அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்கள் வருகின்றன.

ஆகவே, 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. இந்த டேட்டா ஐபிஎல் போட்டிகளை காண்பதற்கு போதுமானதாக இருக்கும். ஆனால், இந்த 5ஜி டேட்டா இல்லாமல், திட்டத்துக்கு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டாவும் அதற்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் (Post Data) கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது.

இதன் மூலம் ஓடிடி மற்றும் டேட்டாவில் 84 நாட்களுக்கு எந்த குறையும் இல்லை என்பது தெரிகிறது. அதே நேரத்தில 84 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கொடுக்கப்படுகிறது. இதுபோக ஜியோ ஆப்களின் சலுகை வருகிறது.

அதாவது, ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது. இப்போது, இதைவிட ரூ.100 விலை அதிகமாக கிடைக்கும் ஏர்டெல் திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளலாம். இதிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சலுகைகள் கிடைக்கின்றன. ஜியோ நிறுவனத்தில் ஜியோடிவி, ஜியோடிவி போன்ற பிரத்யேக சலுகைகளை போல ஏர்டெல்லிலும் இருக்கிறது.

ஏர்டெல் ரூ 1049 திட்ட விவரங்கள் (Airtel Rs 1049 Plan Details): இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்திலும் (Airtel Prepaid Plan) முந்தைய திட்டத்தை போலவே 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆனால், 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை பெற்று கொள்ளலாம். இருப்பினும், 84 நாட்களுக்கு பிறகு அடுத்த ஆக்டிவ் திட்டம் இருந்தால் மட்டுமே ஓடிடி தொடர்ந்து கிடைக்கும்.

Take a Poll

இந்த ஓடிடி மட்டுமல்லாமல், முந்தைய திட்டத்தில் கிடைத்த நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா மற்றும் 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கிறது. வாய்ஸ் கால்களும் அன்லிமிடெட், லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் சலுகையில் கொடுக்கப்படுகிறது. 100 எஸ்எம்எஸ்கள் முந்தைய திட்டத்தை போலவே கிடைக்கிறது.

இப்போது, கூடுதல் சலுகைகளுக்கு வருவோம். இந்த ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டத்தில் அப்பல்லோ 24/7 சர்க்கிள், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப், ஸ்பேம் வாய்ஸ் மற்றும் ஸ்பேம் எஸ்எம்எஸ் அலெர்ட் சலுகை வருகிறது. இந்த சலுகைகள் மட்டுமே கொஞ்சம் கூடுதலாக தெரிகிறது. ஆனால், ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஜியோ நிறுவனம், இந்த திட்டத்தைவிட அதிக நன்மைகளை கொடுக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 949 Plan With Unlimited Voice 2GB Data 84 Days Validity JioHotStar App Vs Airtel Rs 1029 Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X