Jio SIM வைத்து இருப்பவர்களுக்கு 3 மாசத்துக்கு இதுதான் ரீசார்ஜ்.. அன்லிமிடெட் வாய்ஸ், டேட்டா, ஓடிடி சந்தா!
ஒரே ரீசார்ஜ் செய்துவிட்டால் போதும், 3 மாதங்களுக்கு டேட்டா, வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள், ஓடிடி சந்தா போன்ற ஒட்டுமொத்த சலுகைகளும் வேண்டும் என்றால், இப்போது பார்க்க இருக்கும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை (Prepaid Plan) ஜியோ (Jio) கஸ்டமர்கள் கண்ணை மூடிக்கொண்டு ரீசார்ஜ் செய்துவிடுங்கள்
ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா கொண்ட திட்டங்களில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோ ரூ.949 திட்டம் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைத்தாலும், ஓடிடி சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இந்த ஓடிடிக்கு ஏற்ப அன்லிமிடெட் டேட்டா சலுகையை பெற்று கொள்ளலாம்.

ஜியோ ரூ.949 திட்டம் (Jio Rs 949 Plan): 84 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையுடன் கிடைக்கும் ஜியோஹாஸ்டார் ஓடிடி சந்தா கொண்ட திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, தினசரி டேட்டாவுடன், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கும்.
இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால், 84 நாட்களும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 4ஜி கஸ்டமர்களாக இருந்தால், 2 ஜிபி டேட்டாவை தினமும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பயன்படுத்தலாம்.
இந்த டேட்டாவை மட்டுமே பெற்றால், 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி இருக்க முடியும். இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம்.
ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் (Jio Special Offer) கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) அணுகலும் வருகிறது. இதில் 50 ஜிபி ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை பெறுவதற்கு ஜியோ மொபைல் நம்பர் வைத்து லாகின் செய்ய வேண்டும். 18 மாதங்களுக்கு ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கிடைக்கிறது.
இந்த சந்தாவை தனியாக பெற்றால், ரூ.35100 செலவாகும். ஆனால், இந்த சந்தாவில் 5000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கிறது. நானோ பானானா (Nano Banana) சந்தா கிடைக்கிறது. ஒருவேளை அமேசான் பிரைம் வீடியோ சந்தா வேண்டுமானால், ஒரேவொரு திட்டத்தில் மட்டுமே அந்த சந்தா கிடைக்கிறது. இதிலும் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.
ஜியோ ரூ.1029 திட்டம் (Jio Rs.1029 Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்திலும் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். அதேபோல அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் கிடைக்கும்.
நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். இதுபோக 84 நாட்களுக்கு அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா கொடுக்கப்படும். ஜியோ ஸ்பெஷல் ஆஃபரின் கீழ் ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவும் கிடைக்கும். ஜியோ ஏஐ கிளவுட் சந்தா, கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவும் கொடுக்கப்படும். இதில் பெஸ்ட் திட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications