Home
News

Jio சிம் இருக்கா? 84 நாள்.. அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ்.. அள்ளி அள்ளித்தரும் Jio.. எந்த விலை திட்டம்?

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதன் ப்ரீபெய்ட் (Prepaid) மற்றும் போஸ்ட்பைட் (Postpaid) திட்டங்களின் விலையை 15% மேல் அதிகரித்தது. இதனால், டெலிகாம் (Telecom) துறையில் பெரிய மாற்றமே நிகழ்ந்தது. குறிப்பாக ஜியோ (Jio) நிறுவனத்தின் விலை ஏற்றத்தை தொடர்ந்து ஏர்டெல் (Airtel) நிறுவனமும், அதனை தொடர்ந்து வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனமும் அவர்களின் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்தன. விலையேற்றத்திற்கு பிறகு, ஜியோ நிறுவனம் பல புதிய திட்டங்களை புதிய நன்மைகைளுடன் வழங்கியது. இதில் ஒரு திட்டம் மிகவும் பிரபலமடைந்துள்ளது.

திடீர் விலை ஏற்றத்தை அறிமுகம் செய்த ஜியோ நிறுவனத்தின் பயனர்கள் பலர் அதிக விலை காரணமாக அரசு நடத்தும் பிஎஸ்என்எல் (BSNL) நெட்வொர்க்கில் பக்கம் மாறத்துவங்கினர். இதனால், ஜியோ நிறுவனம் கிட்டத்தட்ட 11 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. கொத்துக்கொத்தாக மாறிய வாடிக்கையாளர்களை மீண்டும் ஈர்க்கும் விதத்தில், ஜியோ நிறுவனம் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது.

Jio சிம் இருக்கா? 84 நாள்.. அன்லிமிடெட் டேட்டா மற்றும் வாய்ஸ்..

அள்ளி அள்ளித்தரும் Jio.. 84 நாளுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ்:

இதில் குறிப்பாக, தினசரி டேட்டா நன்மையுடன் இலவசமாக அன்லிமிடெட் டேட்டா நன்மை, அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, இலவச தினசரி எஸ்எம்எஸ் நன்மை மற்றும் பொழுதுபோக்கை விரும்பாத வாடிக்கையாளர் இங்கு யார் இருக்கிறார்? யாருமே இல்லை தானே. இந்த எதிர்பார்ப்புடைய வாடிக்கையாளர்களின் பொழுதுபோக்கு தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இலவச OTT சந்தா என்று கிட்டத்தட்ட 3 மாதங்களுக்கு செல்லுபடியாகும் ஒரு பிளானை ஜியோ அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய திட்டம் இப்போது ஜியோ வாடிக்கையாளர்களின் மத்தியில் அதிகம் விருப்பப்படும் ஒரு திட்டமாக மாறியுள்ளது என்று டெலிகாம் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இது என்ன திட்டம்? இந்த திட்டத்தின் விலை என்ன? இந்த திட்டம் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? என்பதை முழுவதுமாக இப்போது தெரிந்துகொள்ளலாம். நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் திட்டமானது, ஜியோ ரூ. 949 திட்டம் (Jio Rs 949 Plan) பெயரில் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

ஜியோ ரூ. 949 திட்டம் (Jio Rs 949 Plan):

இந்த திட்டம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (84 days validity) உடன் வருகிறது. இந்த திட்டம் தினசரி 2GB டேட்டா (data) நன்மையை வழங்குகிறது. இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மை மற்றும் இலவச நேஷனல் ரோமிங் (free national roaming) நன்மையையும் வழங்குகிறது. இந்த திட்டத்துடன் உங்களுக்கு தினசரி 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் கூட கிடைக்கிறது.

இந்த நன்மைகள் எல்லாம் ஜியோ வழங்கும் அடிப்படை நன்மைகளாகும். ஜியோ இத்துடன் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Jio unlimited 5G data benefits) நன்மையை வழங்குகிறது. உங்களிடம் 5ஜி ஸ்மார்ட்போன் (5G Smartphone) அல்லது 5ஜி மொபைல் (5G Mobile) இருக்கிறதென்றால், நீங்கள் ஜியோ 5ஜி நெட்வொர்க் கவரேஜ் (Jio 5G network coverage) கிடைக்கும் வட்டத்தின் கீழ் இருக்கிறீர்கள் என்றால், இலவசமாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா நன்மையை அனுபவிக்கலாம்.

இந்த திட்டத்துடன் கூடுதல் நன்மையாக உங்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar) சந்தா பயன்படுத்த கிடைக்கிறது. இந்த திட்டம் தற்போது மிகவும் பிரபலாமான திட்டமாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 949 Plan With 2GB Data Daily Unlimited Voice Call and Jio True 5G Unlimited Data Disney Plus Hotstar OTT Benefit
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X