Home
News

ஒரு ரீசார்ஜ் போதும்.. 3 மாத வேலிடிட்டி.. தினமும் 2ஜிபி டேட்டா, 2 ஓடிடி தளங்கள்.. அட்டகாசம் பண்ணும் ஜியோ..

ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் இலவச ஒடிடி சந்தா மற்றும் அதிக டேட்டா நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ நிறுவனம். குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டத்திற்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் ஜியோ நிறுவனம் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 5ஜி சேவையைக் கொண்டுவந்துவிட்டது. குறிப்பாக இந்நிறுவனத்தின் 5ஜி சேவை மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்று தான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனம் ரூ.1000-க்கு கீழ் வைத்துள்ள ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் இரண்டு ஓடிடி சந்தா, அதிக டேட்டா மற்றும் அன்லிமிடெட் சலுகைகளை வழங்குகிறது.

ஒரு ரீசார்ஜ் போதும்.. 3 மாத வேலிடிட்டி.. அட்டகாசம் பண்ணும் ஜியோ..

அதாவது ஜியோ நிறுவனத்தின் ரூ.909 ப்ரீபெய்ட் திட்டம் தான் இரண்டு ஓடிடி சந்தா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் அன்லிமிடெட் சலுகைகளை வழங்குகிறது. இப்போது இந்த ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 909 Plan Details) Sony Liv மற்றும் Zee5 ஆகிய ஓடிடி தளத்தின் இலவச சந்தா வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.. குறிப்பாக இந்த இரண்டு ஓடிடி தளங்களில் தொடர்ந்து புதிய ஹிட் படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. எனவே ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கும் இந்த இரண்டு ஓடிடி தளங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

ஒரு ரீசார்ஜ் போதும்.. 3 மாத வேலிடிட்டி.. அட்டகாசம் பண்ணும் ஜியோ..

அதேபோல் ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.எனவே ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட் திட்டம் மொத்தமாக 168ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் நன்மைகளும் இதில் உள்ளது.

இதுதவிர ஜியோ ரூ.909 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது. மேலும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்குகிறது இந்த திட்டம். எனவே இரண்டு ஓடிடி தளங்கள், வரம்பற்ற அழைப்புகள், அதிக டேட்டா போன்றவற்றை விரும் பயனர்கள் ஜியோவின் ரூ.909 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்வது நல்லது.

அதேபோல் நெட்பிளிக்ஸ் சந்தா வேண்டும் என்றால் ஜியோ நிறுவனத்தின் ரூ.1099 மற்றும் ரூ1499 ப்ரிபெய்ட் திட்டங்களைத் தேர்வு செய்யலாம். இப்போது இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களில் கிடைக்கும் சலுகைகளைப் பார்ப்போம்.

ஒரு ரீசார்ஜ் போதும்.. 3 மாத வேலிடிட்டி.. அட்டகாசம் பண்ணும் ஜியோ..

ஜியோவின் ரூ.1099 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1099 Plan Details) நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா நன்மை கிடைக்கிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, தினசரி 100எஸ்எம்எஸ், ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான அணுகல் கூட உள்ளது.

ஜியோவின் ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1499 Plan Details) தினசரி 3ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது.. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். குறிப்பாக நெட்பிளிக்ஸ் சந்தாவை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.1499 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100எஸ்எம்எஸ், ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் போன்ற நன்மைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 909 Plan With 2GB Data, Unlimited Voice, OTT Subscription 84 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X