Home
News

அம்பானி ஆஃபர்னா இதுதான்.. முழுசா 90 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 18 மாதங்கள் ஜெமினி சந்தா.. 200 ஜிபி டேட்டா!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு 90 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 200 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், 18 மாதங்களுக்கு ஜெமினி ப்ரோ சந்தா, 2 மாதங்களுக்கு ஜியோஹோம், 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா போன்ற நம்ப முடியாத சலுகைகள் கிடைக்கிறது. இதுபோக ஜியோ கோல்டு சலுகை முதல் ஏஐ கிளவுட் சலுகை வரையில் கொடுக்கப்படுகிறது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தின் (Jio Prepaid Plan) சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 Prepaid Plan): இந்த திட்டத்துக்கு தினசரி டேட்டா (Daily Data), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மட்டுமல்லாமல், கூடுதல் டேட்டா (Extra Data) சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, இதை ரீசார்ஜ் செய்த பிறகு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கொடுக்கப்படும். 90 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது.

அம்பானி ஆஃபர்னா இதுதான்.. முழுசா 90 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்!

இந்த வேலிடிட்டி மூலமாக மொத்தம் 180 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த டேட்டா போக 20 ஜிபி டேட்டா (20GB Data) லம்ப்-சம் சலுகையில் கொடுக்கப்படுகிறது. ஆகவே, 200 ஜிபி டேட்டா சலுகையை 4ஜி வேகத்தில் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபி டேட்டாவுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கிறது.

இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையையும் 90 நாட்கள் முழுவதும் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். ஆகவே, இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் டேட்டா சலுகைகள் கொஞ்சமும் குறையில்லாமல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதே 90 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) கால்களை செய்து கொள்ளலாம்.

இதில் ரோமிங் வாய்ஸ் கால்களும் (Roaming Voice Calls) சலுகையும் கிடைக்கிறது. டேட்டாவை போலவே தினசரி லிமிட்டில் 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ள முடியும். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவும் கொடுக்கப்படுகிறது. ஆனால், இது திட்டத்தில் வழக்கமாக கிடைக்கும் சலுகை கிடையாது.

ஸ்பெஷல் ஆஃபராக மட்டுமே கிடைக்கிறது. இந்த ஓடிடி சந்தாவை 90 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஜியோ ஃபைனான்ஸ் ஆப் (Jio Finance App) மூலமாக ஜியோ கோல்டு வாங்கும் கஸ்டமர்களுக்கு 2 சதவீக கூடுதல் கோல்டு கொடுக்கப்படுகிறது. இந்த கோல்டு சலுகையை பெறுவதற்கு +91-8010000524 எண்ணுக்கு கஸ்டமர்கள் மிஸ்ட்-கால் கொடுக்க வேண்டும்.

புதிதாக ஜியோஹோம் (JioHome) திட்டங்களை புக்கிங் செய்யும் கஸ்டமர்களுக்கு 2 மாதங்களுக்கு ப்ரீ-டிரையல் சலுகை கிடைக்கும். அதற்கு பிறகு கட்டணம் செலுத்தி திட்டத்தை தொடரலாம். ஜியோ ஃபைபர் சேவைகள் கிடைக்கும் பகுதிகளில் இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். இதில் ஓடிடி சந்தா கிடைக்கும். அதேபோல டிவி சேனல்கள் கிடைக்கும்.

வை-பை டேட்டா சலுகை மற்றும் வை-பை காலிங் சலுகையை இதில் பெற்று கொள்ளலாம். 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்படும். இதை ஜியோ ஏஐ கிளவுட் (JioAICloud) மூலமாக உங்களது மொபைல் நம்பரை பயன்படுத்தி பெற்று கொள்ளலாம். மேலும், ஜெமினி ப்ரோ சந்தா (Gemini Pro Subscription) இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கிடைக்கிறது.

இதை 18 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும். ஆனால், 18 முதல் 25 வயது வரையில் இருக்கும் ஜியோ கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கொடுக்கப்படுகிறது. ஜியோ அன்லிமிடெட் 5ஜி திட்டங்களில் மட்டும் இந்த ஜெமினி சந்தா வருகிறது. இந்த சந்தாவின் மதிப்பு ரூ.35,100ஆக இருப்பதால், ஜியோ கஸ்டமர்களுக்கு இது மிகப்பெரிய சலுகையாக இருப்பதை மறுக்க முடியவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 899 Prepaid Plan With Unlimited Voice Calls 90 Days Validity 2GB Data Check 3 Month Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X